Tuesday, October 27, 2009

பறவைகள்

நிலத்தில் பறக்காத பென்குயின் பறவைக்கு நீருக்குள் பறக்கும் சக்தி உண்டு.

பையா என்ற பறவை மனிதனைப் போல விசிலடிக்கும்.

பறவைகளைப் பற்றி ஆராய்ச்சிப் படிப்பு ஆர்னித்தாலஜி ஆகும்.

வெட்டுக்கிளியின் இரத்தம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

நண்டு ஒரு வருடத்தில் சராசரியாக நடக்கும் தூரம் 83 கிலோ மீட்டர்.

வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடும்.

அன்னப்பறவையின் உடலில் 25,000 இறகுகள் உள்ளன.

ஒரு தேனீ 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து 500 கிராம் அள்வுள்ள தேனை சேகரிக்கிறது.

அறிவியல் செய்திகள்

இஸ்ரேல் நாட்டில் பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுவிச்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.

அலாரம் அடிக்கும் கடிகாரம் 650 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்பன் பேப்பர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு வினாடிக்கு லட்சம் கன அடி வீதம் நீர் பாய்கிறது.

கட்டிடக்கலைப் பொறியாளர்களை உலகிற்கு தந்த முதல் நாடு ரோமாபுரி.

உலகின் மிகப் பெரிய சுரங்கப்பாதை ஜப்பான் நாட்டில் உள்ளது. இது கடலின் அடியில் சுமார் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது.

சேப்டிபின் நியூயார்க்கைச் சேர்ந்தவால்ட்டர் ஹண்ட் என்பவரால் 1849-ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் 2552 வகையான உருளைக்கிழங்குகள் உள்ளன.

பிஜித்தீவில் யாருக்காவது மரியாதை செலுத்த வேண்டுமெனில், திமிங்கலத்தின் பல்லை அன்பளிப்பாகத் தருவார்கள்.

உலகில் உள்ள பூக்களில் 90 சதவீதம் நறுமணம் இல்லாதவை.

உலகம் முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணுகண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் அணுகுண்டு சோதனை 1945 - ல் அமெரிக்காவின் மெக்ஸிகோ பாலைவனத்தில் நடத்தப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலில் விமானப் போக்குவரத்து 1911 - ல் அலகாபாத்திற்கும், சிம்லாவிற்கும் இடையே இயக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் காகித தொழிற்சாலை 1867 - ல் மேற்குவங்கத்தில் உள்ள செர்காம்பூரில் தொடங்கப்பட்டது.

1948 - ம் ஆண்டிலேயே அமெரிக்காவில் 36 தொலைக்காட்சி நிலையங்கள் இருந்தன.

தனிமங்கள்

நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன.

பதரசத்தின் உறை நிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இங்க் தயாரிக்கப் பயன்படும் உப்பு பெரோசல்பேட்.

ஹைட்ரஜனின் அணு எடை 1.0087.

மெலுகைக் கரைக்க உதவும் திறன் கொண்ட அமிலம் டர்பன்டைன்.

நீரில் மிக எளிதில் கரையும் வாயு அமோனியா.

மண்ணெண்ணைக்குள் வைத்து பாதுகாக்கப்படும் இரு உலோகங்கள் சோடியம், பொட்டாசியம்.

உலகில் எடை மிகுந்த உலோகம் இரிடியம்.

எக்ஸ்ரே ஊடுருவமுடியாத உலோகம் ஈயம்.

வெடிமருந்தில் உள்ள தாது நைட்ரஜன்.

மின்சார பல்பில் ஆர்கன் வாயு பயன்படுகிறது.

குளிர் சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் திரவம் பிரியான்.

இரும்பு துருப்பிடிக்கும் போது அதன் எடை மாறுவதில்லை.


சுறா

சுறாக்களில் பல வகை உண்டு. வெள்ளை சுறா தான் மிகவும் பயங்கரமானது, மனிதனையும் தின்பது. திமிங்கலச் சுறாதான் சுறாமீன் இனத்தில் பெரியது. அதிகபட்ச நீளம் 60 அடி. சுத்தித்தலை சுறாவும் கொடுமையான வகையைச் சார்ந்தது தான். சுறாக்களில் மந்தமான சுறாக்களும் உண்டு. இரையை வேட்டையாடுவதில் சுறாவுக்கு வழிமையான தாடையும், கூர்மையான பற்களும் உள்ளன. பொதுவாக, சுறா இறந்த பிராணிகளை தின்று விடும். எனவே, சுறாவை நீந்தும் தோட்டி என்பர்.

200 பவுண்ட் எடையுள்ள ஆமையைக்கூட ஒரு சுறாமீன் தின்றுவிடும். சுவாச உறுப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு அது எப்போதும் வளைந்து வளைந்து சுழலும். மனிதனைத் தின்னும் சுறாமீன் கரையோரங்களுக்கு இரையைத் தேடி வருவதுண்டு. ஆட்களை இழுத்துக் கொண்டு உடனே கடலுக்குள் திரும்பிவிடும்.

ஆழ்கடலில் உணவுத் தட்டுப்பாடு சில சமயம் மீன்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை எதிர்கொள்ள பல மீன்கள் தனிச் சிறப்பான ஏற்பாடுகளை பெற்றுள்ளன. பெருந்தீனி விழுங்கிகள் (கியாஸ்மோடஸ்நிகர்) என்று ஒரு வகை மீன்கள் உண்டு. இவற்றின் வாய்களின் அளவைப் போன்று மும்மடங்கு பெரிய அளவுள்ள பிற உயிர்களை விழுங்குவதற்கு ஏற்ப அவற்றின் வயிறு நெகிழ்ந்து கொடுத்து விரிவடையும். இம்மீன்களின் வளைவான பிச்சுவாக்கத்தி போன்ற பற்கள் பிடித்த இரையை தப்பி விடாதவாறு பாதுகாக்கின்றன.

கிளி

கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் உள்ளன. கிளியால் தன் அலகுகளின் மேல் அலகுகளை மட்டுமே அசைக்க முடியும். கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.

பெரும்பாலான பறவைகளுக்கு அதன் கால் விரல்களில் மூன்று முன்னோக்கியும், ஒன்று பின்னோக்கியும் இருக்கும். ஆனால், கிளிகளுக்கு இரண்டு விரல்கள் முன்னோக்கியும், இரண்டு விரல் பின்னோக்கியும் இருக்கும். கியா என்று பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை.

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியில் வாழும் ஒரு வித மஞ்சள் நிற மீனைத் தின்னும். பச்சை நிற கிளிக் குஞ்சுகள் நாளடைவில் மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய நிறங்களுடன் பஞ்சவர்ணக்கிளிகளாக மாறிவிடுகின்றன.

Thursday, October 22, 2009

ஆடு

ஆடு ஏழைகளின் பசு என்று போற்றப்படுகிறது. ஆட்டுப் பாலில் கிருமிகள் இல்லை. ஆனால், பசும் பால் அப்படியில்லை. பசும் பாலை காய்ச்சித்தான் குடிக்கவேண்டும். பெண் ஆடுகள் இரண்டு வயதுக்குள் முழு வளர்ச்சி அடைகிறது. ஆனால், ஆண் ஆடுகள் நான்கு வருடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் மட்டுமே தூங்கும். கர்ப்ப காலம் 151 நாட்கள். சுமார் 8 ஆண்டுகள் வரை வாழும். வெள்ளாட்டுப் பாலில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது. மலை ஆடுகள் பிறந்த 30 நிமிடத்திலேயே எழுந்து அருகில் உள்ள மலை உச்சிக்கு நடந்து செல்லும் அளவிற்கு உடல் வலிமை கொண்டது.

Wednesday, October 21, 2009

அறிவுக்கு

வானம் நீல நிறமாக தோன்றுவது ஒளிச்சிதறல்.

இணையதளத்தில் உபயோகிக்கப்படும் www என்ற எழுத்துக்களின் விரிவாக்கம் world wide web.

பிறந்ததிலிருந்து நம் உடலில் வளராத உறுப்பு கண்விழி.

இந்தியாவின் வாசனை திரவிய பூங்கா கேரளா.

ஷாஜஹான் ‘கிங் எஞ்ஞினியர்’ என்று அழைக்கப்பட்ட மன்னர்.

மனிதனின் விரல் நகம் ஒரு வருடத்தில் 2 1/2 அங்குலம் வளர்கிறது.

டென் மார்க்கின் தேசிய சின்னம் கடற்கரை.

கழுகின் சராசரி ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

நாயை விட அதிக மோப்பசக்தி கொண்ட உயிரினம் விலாங்குமீன்.

இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா 18.1.1827 நடைபெற்றது.

சுபாஸ் சந்திரபோஸ் ’ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கட்டிடத்தை வடிவமைத்தவர் ஜேம்ஸ்ஹோபன்.

வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குடியேறிய அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்.

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளைக் கொண்ட நாடு பின்லாந்து.

சீனாவின் பழங்கால பெயர் கதாய்.

வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.

மிகவும் லேசான உலோகம் லித்தியம்.

பனிச் சிறுத்தை இந்தியாவில் இமயமலையில் காணப்படுகிறது.

மிகவும் விசத்தன்மை வாய்ந்த தனிமம் புளூடோனியம்.

புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் பீகாரில் அமைந்துள்ளது.

மிக நீளமான சுவர் சீனப் பெருஞ்சுவர்.

மருந்தாகும் விசம்

சில நோய்களுக்கு விஷமே மருந்தாக அமைவதை அறிந்திருக்கிறோம். குறிப்பாக பாம்பு விசத்தில் இருந்து பல ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இது போல கருந்தேள் விசத்தில் இருந்து மூளை புற்றுநோய்க்கு மருந்துதயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை செய்துள்ளனர். தேள் விசத்தை கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது அதில் உள்ள விசத் தன்மை மருத்துவ குணம் கொண்டதாக மாறிவிடுகிறது. இந்த மருந்து மூளைப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் மற்றும் மூளையில் ஏற்படும் சதை வளர்ச்சி நோயை விரைவில் குணப்படுத்துகிறது. கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது தேள் விசத்தில் உள்ள மூலப்பொருள் சிதைவடைகிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக விசத்தில் உல்ள குறிப்பிட்ட புரோட்டின் புற்றுநோய் உருவாக்கும் செல்களைமட்டும் தேடிச் சென்று அழிக்கும் மருத்துவத்தன்மை பெற்றுவிடுகிறது.

அதிசயம் நிறைந்த அருணாச்சலப் பிரதேசம்

நமது நாட்டில் சூரிய உதயத்தை முதலில் காண்பவர்கள் அருணாச்சலப்பிரதேச மக்கள் தான். நமது நாட்டின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசம், 97 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ள மாநிலம் ஆகும். மேற்கு விளிம்பில் குஜராத் அமைந்துள்ளது. அதாவது 68 டிகிரி தீர்க்க கோட்டில் அமைந்துள்ளது.இந்த இரு மாநிலங்களுக்கு இடைப்பட்ட 29 தீர்க்க கோடுகளை கடக்க சூரியன் 1 மணி 56 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.

பழங்களின் பலன்கள்

திராட்சை
நல்ல பசி உண்டாக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.

மாதுளை
ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் சுரக்கும். உடல் பலம் பெறும். எலும்புகள், பற்களில் ஏற்படும் நோயை குணமாக்கும். மலச் சிக்கலைத் தடுக்கும்.

பேரீச்சை
புதிய ரத்தம் சுரக்கும். உடல் பலம் பெறும். தோல்களை வழுவழுப்பாக்கும். நரம்பு தளர்ச்சியை தடுக்கும்..

மாநிலங்களுக்கு கிடைத்த சிறப்புகள்

மேகாலயா இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

அஜந்தா,எல்லோரா, எலிபெண்டாகுகைகள் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் கிழக்கு ஆபரணம் என்று அழைக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிக்கோட்டா அமைந்துள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் டல்ஹவுசி கோடை வாஸ்தலம் உள்ளது.

ஒரிசா மாநிலத்தில் புகழ்பெற்ற சில்கா ஏரி அமைந்துள்ளது.

பஞ்சாப்பில் அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளது.

உத்தரகாண்டில் முசவுலி கோடை வாஸ்தலம் உள்ளது.

அசாமில் டிக்பாய் பெட்ரோல் எண்ணை கிணறு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் மக்கள் அடர்த்தி அதிகம்.

சிறந்த கடற்கரைகல்

உலகின் சிறந்த கடற்கரைகளும், அவை அமைந்துள்ள நாடுகளின் விவரம் வருமாறு...

*படாரா - துருக்கி
*லாபாவ்லா - பிரான்ஸ்
*கோகோகுனாரீஸ் - கிரீஸ்
*வடாமு - கென்யா
*ஒயிட் ஹெவன் - ஆஸ்திரேலியா

ஆப்பிரிக்க தேனீ

ஆப்பிரிக்க காடுகளில் மனிதர்களுக்கு எமனாகும் ஒருவகை தேனீகள் காணப்படுகின்றன. தேன் கூட்டில் இருக்கும் இந்த வகை தேனீக்கள் ஒருவரை கொட்டுவதற்கு ஆரம்பித்தால், மரணம் நிச்சயம். கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்க கண்டத்தில் 600 பேர் தேனீக்களின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் மற்ற எல்லா தேனீக்களையும் விட இந்த இன தேனீயின் கூட்டில் தான் அதிக அளவில் தேன் கிடைக்கிறது.

மன்னர்களின் சிறப்பு பெயர்கள்

பெயர் சிறப்பு பெயர்
 1. இரண்டாம் சந்திரகுப்தர் ......... விக்கிரமாதித்யன்
 2. முதலாம் நரசிம்மவர்மன் ......... வாதாபி கொண்டான்
 3. முதலாம் ராஜேந்திர சோழன் ........ கடாரம் கொண்டான்
 4. முதலாம் மகேந்திரவர்மன் .......... சித்திரகாரப்புலி
 5. இரண்டாம் நரசிம்மன் ........... ராஜசிம்மன்
 6. முதலாம் ராஜராஜசோழன் .......... மும்முடிச் சோழன்

அறிவுக்கு சில

நண்டுக்கு அதன் வயிற்றில் தான் பற்கள் இருக்கும்.

விலை மதிப்புமிக்க பூ குங்குமப்பூ.

பூச்சி இனத்தில் ஒரே இடத்தில் நின்று பறக்கக்கூடியது தட்டான் பூச்சி மட்டுமே.

காஷ்மீரில் பேசப்படும் மொழி காஷ்மீரி.

ஒட்டகப்பறவை என்று வர்ணிக்கப்படுவது நெருப்புக்கோழி.

பெங்குவின் பறவைகளால் பறக்க முடியாது.

அண்மையில் காலமான முன்னால் பிரதமர் வி.பி.சிங்.

அணில் 100 அடி உயரத்திலிருந்து குதித்தாலும் காயமின்றி தப்பிக்கும்.

தனது மூளையை விட அளவில் பெரிய கண் கொண்ட பறவையினம் நெருப்புக்கோழி.

மனிதக் கருவில் முதலில் உருவாகும் உருப்பு இதயம்.

ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர் ஈபிள் ஆண்டனி.

தென் துருவத்தை சென்றடைந்த முதல் மனிதர் ரோல்ட் சுமண்ட்சன்.

இறக்கையில்லாத பறவையினம் கிவி.

நாக்கை அசைக்க முடியாத ஒரே விலங்கு முதலை.

விலங்குகளின் அரசனான சிங்கத்தின் ஆயுள் 15 ஆண்டுகள்.

கங்காரு ஒரு பாய்ச்சலில் சுமார் 9 மீட்டர் தூரம் வரை தாண்டும்.

வட இந்திய ஜீவநதிகள் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா.

முக்கடவுள் பிரம்மா, விஷ்ணு,சிவன்.

மூவேந்தர்கள் சேரர்,சோழர்,பாண்டியர்.

தென்னிந்திய முக்கிய ஆறுகள் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி.

மூவேந்தர்களின் கொடிகள் வில், புலி,மீன்.அதிசிய பழக்கவழக்கங்கள்

சீனாவில் எல்லாமே தலைகீழ் தான். அவர்கள் நண்பர்களை சந்தித்தால் நண்பர்களின் கைகளைப் பிடித்து குலுக்குவதில்லை. தங்கள் கைகளையே குலுக்கிக் கொள்வார்கள்.

கோப்பையின் அடியில் சாசரை வைத்துக் கொடுக்க மாட்டார்கள். கோப்பைக்கு மேலே தான் சாசரை வைப்பார்கள்.

சீனர்கள் எழுதும் முகவரியில் முதலில் ஊரின் பெயர், அதன் பின் வீட்டின் இலக்கம், கடைசியில் பெயர் என்ற வரிசையில் தான் எழுதுவார்கள்.

வெள்ளை நிறத்தை நாம் அமைதிக்கு சொல்கிறோம். ஆனால் சீனாவில் வெள்ளை நிறம் துக்க நிறமாக கருதப்படுகிறது.

சீனாவில் கடிகாரத்தைப் பரிசாக அளித்தால் கோபப்படுவார்கள். ஏனேனில், கடிகாரம் நேரத்தைக் காட்டக் காட்ட நம்முடைய வாழ்வின் இறுதி நாள் நெருங்கிக்கொண்டிருப்பது நம் நினைவிற்கு வருமாம்.

சீனர்கள் யாருடைய பெயரை எழுதினாலும்பெயருக்குப் பின்னால்தான் ‘மிஸ்டர்’ என்று எழுதுவார்கள்.

ரஷ்மோர் மலைத்தொடர்

அமெரிக்காவில் ரஷ்மோர் என்னும் மலைத்தொடர் உள்ளது. இங்குதான் புகழ்பெற்ற ‘கருங்குன்றம்’ என்ற சிகரம் உள்ளது. இந்த கருங் குன்றில், முன்னால் அமெரிக்க ஜனாதிபதிகளான ஜார்ஜ் வஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரது முகங்களை சிலைகளாக வடித்துள்ளனர் அமெரிக்க சிற்பிகள். ஒவ்வொரு முகமும் 60 அடி உயரம் கொண்டது. ஆபிரகாம் லிங்கனின் கண்ணில் மட்டும் ஆறடி மனிதன் நிற்கலாம். இந்த சிலைகளை வடிக்க மிகுந்த முயற்சி செய்தவர் டெக்சாஸ் மாநில வரலாற்றுக் கழகத்தின் மேலாளராக இருந்த ஜோனோதன் ராபின்சன் ஆவார். சிலைகளை வடிக்க ஜான்காட்சன் போர்லம் என்ற சிற்பி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வேலைக்காக 21/2 லட்சம் டாலர்களை அனுமதித்தது அமெரிக்க அரசு. போர்லம் இந்தப் பணியைத் தொடங்கிய போது அவருக்கு வயது 60. அந்த வயதிலும் சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரமான கருங் குன்றின் மீது ஏறி பணியினைச் செய்தார்.

இளம் சாதனையாளர்கள்

 • வில்லியம் மிட் என்பவர் தனது 14-வது வயதில் அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதி புகழ் பெற்றார்.
 • விக்டர் ஹியூகோ தனது 15-வது வயதில் பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு சிந்தனைகள் பொதிந்த கவிதைகள் எழுதி அனுப்பினார்.
 • மாவீரன் அலெக்சாண்டர் 16 வயதிலேயே தனது தந்தையின் போர்ப் படையில் தளபதியானார்.
 • விஞ்ஞானி கலிலியோ தனது 17-வது வயதில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திலுள்ள விளக்கு இப்படியும், அப்படியும் ஊசலாடுவது ஏன்? என்பது குறித்து ஆராய்ந்தார்.
 • பீதோவன் தனது 21-வது வயதில் இசை உலகில் தன் பெயரை நிலை நாட்டினார்.

நில நடுக்கம்

நில நடுக்கம், பூகம்பம் என்பது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நடுக்கம் அல்லது அதிர்வைக் குறிக்கும். சில சமயங்களில் பூமியின் அடித்தளத்தில் லேசாக ஏற்படும் பல பூகம்பங்கள் வெளியே தெரியாமலேயே போவதும் உண்டு. தீவிரமான பூகம்பத்தால் தான் பூமியின் மேற்பரப்பு பிளந்து கட்டிடங்கள் விழுந்து நொறுங்குகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போகிறார்கள்.

பூமியின் மேல் பகுதியில் சிறியதும், பெரியதுமாக பல பாறைகள் இருக்கின்றன. பூமிக்குள் இருக்கும் அழுத்தம் எல்லாப்பகுதிகளிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. அதனால் நிலத்தினுள் கொந்தளிப்பு ஏற்படுகிறது. இதனால் பறைகள் உருக்குலைந்து போகின்றன. அளவுக்கு மீறிய அழுத்தம் பாறைகளில் ஏற்படும் போது பாறை அடுக்குகளில் திடீரென விரிசல்கள் ஏற்படுகின்றன. பாறைகள் உடைந்து மேலும், கீழும் போகின்றன. பூமிக்கு அடியில் பாறைகளில் ஏற்படும் இந்தமாதிரியான அசைவுகளால் பூமியின் மேற்பரப்பில் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சியால் உண்டாகும் அதிர்வு அலைகள் நிலத்தின் மேற்பரப்பில் பரவுகிறது. அதிர்வு அலைகள் பயணம் செய்யும் இடங்கள் நில நடுக்கத்தினால் பாதிக்கப்படுகின்றன. கட்டிடங்கள் விழுகின்றன. உயிர்கள் மடிகின்றன.

நிலநடுக்கம் தொடங்கும் இடத்தை நிலநடுக்க முனை என்று குறிப்பிடுகிறார்கள். சில இடங்களில் தொடர்ந்து நிரந்திரமாக பூகம்பம் வந்துகொண்டே இருக்கும். ஜப்பானில் மிக அதிகமாக நிலநடுக்கங்கள் உண்டாகின்றன. ஜப்பான் நாட்டின் நில அமைப்பு ஏற்றதாழ்வுகள் நிறைந்ததாகும். எனவே பூகம்பங்கள் அங்கு அதிகம். நிலநடுக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சீஸ்மோ-கிராப் என்ற கருவி பயன்படுகிறது. உலகின் பல பகுதியில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. இவை நில நடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.

ஐ.நா. சபையின் துணை அமைப்புகள்

பன்னாட்டு வளர்ச்சி மற்றும் புனரமைப்பு வங்கி வாசிங்டன்னில் உள்ளது.

பன்னாட்டு குழந்தைகள் நல நிதி அமைப்பு நியூயார்க்கில் உள்ளது.

பன்னாட்டு அணுசக்தி அமைப்பு வியன்னாவில் உள்ளது.

பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனம் மான்ட்ரியலில் உள்ளது.

பன்னாட்டு கடல்வள ஆணையம் ராயலில் உள்ளது.

அஷ்ட புஷ்பங்கள்

தாமரை, எருக்கன்,
முருக்கன், நந்தியா வட்டை,
மல்லிகை, கஸ்தூரி,
கொக்கு மந்தாரை,கருநெய்தல்
இவையே அஷ்ட புஷ்பங்கள்.

Monday, October 12, 2009

அரியலூரில் 61\2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள்


அரியலூர் பகுதியில் சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசரின் முட்டைப் படிவங்கள், முட்டையிட்ட இடங்கள், எலும்புத் துண்டுகள், அவை வாழ்ந்த காலத்தில் இருந்த நன்னீர் ஏரி, ஆற்றுப் பாதை ஆகியவற்றை முதன் முறையாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அரியலூரில் கிடைத்துள்ள டைனோசர் முட்டைகள் அனைத்தும் 61/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது. மிகவும் கொடூர குணமுடைய `கார்னோசர்' வகை டைனோசர் மற்றும் இலை, தழைகளை சாப்பிடும் `சவுரோப்போட்' வகை டைனோசர் ஆகியவற்றின் முட்டையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

`சவுரோப்போட்' வகையை சேர்ந்த டைனோசர்கள், ராட்சத உருவமாக வளரும் தன்மை கொண்டவை என்பதும் நீண்ட கழுத்துடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைனோசர் முட்டைகளில் சிவப்பு நிற தூசி மற்றும் சாம்பல்கள் காணப்படுகின்றன. எனவே, எரிமலை வெடித்து சிதறும்போது வெளியேறிய நெருப்பு குழம்பில் டைனோசர் முட்டைகள் உருட்டி வரப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தக்காண பீடபூமியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாகவே இங்கிருந்த டைனோசர்கள் அழிந்தன என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. எரிமலைக் குழம்புகள் உருகி ஓடியதற்கான தடயங்களும் இங்குள்ளன என்றார்.
டைனோசர் படிமங்கள் இவ்வளவு அதிகளவில் கிடைப்பது அகில இந்திய அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து சுமார் 60 முட்டைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது.


கரும்பு

உலகில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் பெருமளவு கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கரும்புச்சாரின் ருசியில் மயங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் படைத் தளபதிகளில் ஒருவர், ’தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’ என்று கரும்பை வர்ணித்துள்ளார். சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.


இனிப்பான கரும்பிற்குப் பின்னால் ஒரு கண்ணீர்க் கதையும் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அடிமைகள் வியாபார உலகில் வளருவதற்கு கரும்பு ஒரு காரணகர்த்தாவாக மாறிவிட்டது. ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்த தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஏராளமான கரும்புத்தோட்டங்கள் இருந்தன. அவற்றில் குறைந்த கூலியில் வேலை செய்ய அதிகமான ஆட்கள் தேவைப் பட்டனர்.

ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக பொருட்களை மேற்கு ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அடிமைகளைப் பண்டமாற்று முறையில் விலைக்கு வாங்கின. அந்த அடிமைகள் கரும்பு தோட்ட முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்க்கப்பட்டனர். தோட்டமுதலாளிகள் அடிமைகளை ஆடு, மாடுகளைப் போல கேவலமாக நடத்தினர். கி.பி.18 - ம் நூற்றாண்டில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்ய ஒரு வருடத்திற்கு சுமார் 50 ஆயிரம் அடிமைகள் இங்கிலாந்து கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

முதல் மனிதன்

ஆப்பிரிக்காவில் தோன்றியவர்களையே நாம் முதல் மனிதர்களாய் நினைக்கிறோம். இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன் எளிதில் கையாளக் கூடிய மனிதன் தோன்றினான். பிறகு ஒரு பத்து லட்சம் ஆண்டுகள் கழித்து செங்குத்தான, நிமிர்ந்த மனிதன் (இன்றைய மனிதனல்ல) தோன்றினான்.

சற்று குனிந்த மனிதன் தான் முதன் முதலில் கருவியை பயன்படுத்தினான். ’கை வேலை மனிதன்’ என்றும் இவனுக்கு பெயருண்டு. சிறிய கருவிகளான செதுக்குதல் கருவிகள் போன்றவற்றை கூலாங்கற்கள் மூலம் செய்தான். நிமிர்ந்த மனிதன் உருவாக்கிய கருவிகள் மேம்பட்டு இருந்தன. கற்களை கை கோடாரி போல வடிவமைத்ததோடு, முதன் முதலில் நெருப்பயும் பயன்படுத்தினான். நிமிர்ந்த நிலை மனிதன் ஒரு நாடோடி.
பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிமிர்ந்த நிலை மனிதன் ஆப்பிரிக்காவைவிட்டு ஐரோப்பா மற்றும் ஆசியா நோக்கி பயணிக்கத் தொடங்கினான்.

கைகளை பயன்படுத்தி வேலைகள் செய்த மனிதனும், நிமிர்ந்த நிலை மனிதனும் தாவரம் மற்றும் இறைச்சியை உண்டனர். இறைச்சி அவர்கள் பார்க்கும் இறந்த பிராணிகளிடமிருந்து கிடைத்தது. சிறிய விலங்குகளை அவர்கள் வேட்டையாடி இருக்கலாம். தாவரங்கள், விதைகளில் உள்ள பழங்களை உண்டான். கற்கருவிகளைக் கொண்டு தங்கள் உணவை வெட்டவும், சுரண்டவும் பயன்படுத்தினான்.

கல் மீன்

கல் மீன் எதிரியின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தரைமட்டத்தில் வாழும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மிகவும் சோம்பேறி மீன். அசைவற்றுக் அப்படியே கல்லு மாதிரி இருப்பதால் இப்பெயர் வந்தது. இந்தக் கல் மீன் மிகவும் சாந்தமானது. ஆனால் இதுகல் மாதிரி இருப்பதால் அடையாளம் தெரியாமல் யாராவது இதை சீண்டிவிட்டால் நைசாக தன் முதுகுப்புற முள்ளை அப்படியே விரிக்கும். இந்த முள் நாம் உடலில் குத்தும் போது விஷத்தை உடலில் பாய்சிவிடும். விஷம் உடலில் ஏறியதும் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டு பயங்கரமாக கத்துவர். வாயில் நுரைத் தள்ளும். பனிரெண்டு மணி நேரம் இந்த வலி நீடிக்கும். தூக்க மருந்து வலி நிவாரண மருந்து எது கொடுத்தாலும் பலன் இருக்காது. கடித்த இடம் பயங்கரமாக வீங்கிவிடும். கடி பட்டவர் நிச்சயமாக இறந்துவிடுவார்.

சோமாலி

சோமாலி எனப்படும் காட்டுக் கழுதை ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.மிகச் சிறிய கழுதை. இதன் உயரம் 1.2 மீட்டர். எடை 270 கிலோ. குதிரை மற்றும் வரிக்குதிரை குடும்பத்தைச் சேர்ந்தது.

பார்ப்பதற்கு அழகான சாம்பல் மற்றும் வெள்ளை நிற வயிருடன் கிழக்கு ஆப்பிரிக்காவின் மலைப்பாங்கான பாலைவனங்களில் காணப்படும். பின்னங்கால்களில் மெல்லிய கறுப்பு நிற கோடுகள் வளையம் வளையமாகக் காணப்படும். சோமாலி கழுதைக்கு நிறைய ஆபத்துகள் உண்டு. உடல் உறுப்புகள் மருந்தாக பயன்படுகிறது. இதன் தோல் லெதர் பைகள் செய்யபயன்பட்டன. பழங்காலத்தில் இந்தக் கழுதைகளை வேட்டையாடுபவர்களின் கைகள் வெட்டப்படும் என்று ராஜாக்கள் உத்தரவிட்டிருந்தனர்.

அழியும் நிலையில் உள்ள விலங்குகள்

உலகில் அழியும் நிலயில் உள்ள சில வித்தியாசமான விலங்குகள் மீது கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறது ’லண்டன் விலங்கியல் கழகம்’. இலங்கையில் காணப்படும் மிகவும் ஒல்லியான, சிறிய ’லோரிஸ்’ முதல் கோபி பாலைவனப் பகுதியில் காண்ப்படும் இரட்டைத் திமில் ஒட்டகங்கள் வரை அவற்றில் அடங்கும். அவை போன்ற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கு என்றே ‘பரிணாம அடிப்படையில் தனித்தன்மை வாய்ந்த மற்றும் உலக அளவில் அருகிவரும் விலங்குகள் பாதுகாப்புத் திட்டத்தை’ உருவாக்கியிருக்கிறார்கள்.

அழிந்து வரும் வேறு சில விலங்குகள், ஜனப்புழக்கம் நிறைந்த சேறும் சகதியுமான சீனாவின் யாங்ஸி நதியில் காணப்படும் டால்பின், கரீபியத் தீவில் காணப்படும் எலி அளவு விலங்கான சோலேநடான் (நச்சு நிறைந்த எச்சிலை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சில பாலூட்டிகளில் ஒன்று), ஆப்பிரிக்காவின் குட்டி நீர் யானை, உலகிலேயே சிறிய பாலூட்டியான பம்பிள்பீ வவ்வால் போன்றவை.

எல்லாவற்றிலும் வித்தியாசமானது நியூகினியாவில் காணப்படும் நீண்ட மூக்கு கொண்ட ‘எச்சிட்னா’ ஆகும். இதன் மூக்கு 30 அங்குல நீளம் வரை இருக்கும். எறும்பு திண்ணியைப் போலவே இதுவும் எறும்புகள், கரையான்கள், சிறுபூச்சிகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. எப்படிப்பட்ட கடினமான உணவுப் பொருளையும் இது வாய்க்குள் அரைத்து விடுகிறது. முள்ளம் பன்றி போல இதன் உடம்பு முழுவதும் முட்களாக நிறைந்திருக்கும். புதிதாக ஈனப்பட்ட ‘குட்டி எச்சிட்னா’ ஒரு கூலாங்கல் அளவில் தான் இருக்கும். ’பிளாடிபஸ்’ விந்தயான விலங்கு. முட்டையிடும் ஒரே பாலூட்டி இதுதான்.

Sunday, October 11, 2009

பாலக்னுமா அரண்மனை!

இந்திய கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் பல அரண்மனைகள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று, ஐதராபாத்தை ஆண்ட நிஜாம்களின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்த பாலக்னுமா அரண்மனை.

19 - ம் நூற்றாண்டில் ஐதராபாத்தின் பிரதம அமைச்சராக இருந்த நவாப் விகார் உல் உல்மாராவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ஆறாவது நிஜாமால் அவரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டது.
பாலக்னுமா அரண்மனை இத்தாலிய மற்றும் ‘டுடார்’ கட்டிட வடிவமைப்பு பாணியில் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடம் ஒரு தேள் வடிவில் உள்ளது. அதன் இரு பக்கவாட்டுக் கொடுக்குகளைப் போல இரு புறமும் கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. ’வால்’ பகுதியில் சமயலறை அமைந்துள்ளது.
அந்தக் கட்டிடத்தில் அதிகமாகக் கவர்பவை நிஜாம்கள் சேகரித்த விலையுயர்ந்த நகைகள், ஓவியங்கள், சிலைகள், மரப்பொருள்கள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் போன்றவை ஆகும்.
அந்த அரண்மனையில், மிகச் சிறப்பாக உள் அழங்காரம் செய்யப்பட்ட 220 அறைகள், மேற் கூரைகள், வண்ண ஜன்னல் கண்ணாடிகள், பளிங்கு படிக்கட்டுகள், அலங்கார நீருற்றுகள், 138 அலங்கார சாரவிளக்குகள்,ஒரே நேரத்தில் 100பேர் சாப்பிடக் கூடிய சாப்பாட்டு மேஜை, தங்கப்பாத்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்கின்றன.அந்த கால நிஜாம்களின் ஆடம்பர வாழ்க்கை முறையையும் காட்டுகின்றன.

அறிவுக்கு சில

மேகாலயா
மேகங்களின் ஆலயம் என்ற பொருள் கொண்ட வடகிழக்கு மாநிலம் ‘மேகாலயா’.

ஜவஹர்லால் நேரு
முன்னால் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொத்தம் 120 மாதங்கள் சிறையில் இருந்தார்.

ஐக்கியநாடுகள் சபை
ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 179 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

புத்தர் சிலை
உலகிலேயே உயரமான 132 அடி புத்தர் சிலை தைவானில் உள்ளது.

யானை
யானை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உயரத்திலும் அகலத்திலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

தக்காளி
முதன் முதலில் தக்காளி பயிரிடப்பட்ட நாடு அயர்லாந்து.

மரங்களின் வளையங்கள்

மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களைக் கொண்டு அதன் வயதைக் கணக்கிட உதவும் படிப்பின் பெயர்,’டெண்ட்ரோகுரோனாலஜி’.
’வளர்ச்சி வளையங்கள்’ எனப்படும் அவை ஒவ்வோர் ஆண்டும் உருவாகின்றன. செழுமையான ஆண்டுகளில் அந்த வளையங்கள் சற்று பட்டையாகவும், வறட்சியான ஆண்டுகளில் அவை மெலிதாகவும் காணப்படும். எனவே அந்த வளையங்கள் மரங்களின் வயதை கண்டுபிடிக்க மட்டுமன்றி, குறிப்பிட்ட பகுதியில் ஒவ்வெரு பருவமும் எப்படி அமைந்திருந்தது என அறியவும் உதவுகின்றன. ‘டெண்ட்ரோகுரோனாலஜி’ படிப்பை உருவாக்கியவர் ஏ.இ.டக்ளஸ் என்ற விஞ்ஞானி ஆவார்.

நிலச் சரிவு

நிலச் சரிவு என்பது மண், பாறைகள் போன்றவை நிலையற்ற மலை உச்சிகளில் இருந்து கீழ்நோக்கிச் சரியும் நிகழ்வாகும். இதற்கு முக்கியக் காரணம் புவியீர்ப்பு விசைதான். நில நடுக்கம், எரிமலை சீற்றம், மண் அரிப்பு, கடுமையான மழை தவிர, கட்டுமானம், காடுகள் அழிப்பு போன்ற இயற்கைக்கு எதிரான மனித செயல்பாடுகளாலும் நிலச் சரிவுகள் ஏற்படுகின்றன. திடீரென ஏற்படும் நிலச்சரிவுகளால் உயிருக்கும், உடைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்ப்படுகிறது.

1998 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்திரபிரதேச மாநிலப் பகுதியில் கடும் மழை காரணமாக பெரும் நிலச் சரிவு ஏற்பட்டது. அதில் ‘மால்பா’ என்ற கிராமம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. அதில் இறந்த 205 பேரில் கிராமத்தினரும், மானசரோவருக்குச் சென்ற புனித யாத்ரீகர்களும்,புகழ் பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான புரோத்திமா பெடியும் அடங்குவர்.

தகவல் களஞ்சியம்

பூமி-நிலா
பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 86 மையில்கள்.

மோனாலிசா
ஓவியர் லியோனார்டா டாவின்சி வரைந்த உலகப் புகழ் பெற்ற ஓவியம் மோனாலிசா. அப்பெண்மணி ஒரு பூ வியாபாரியின் மனைவி.

இலங்கை
இலங்கையின் ஆங்கிலேயர் ஆட்சிக் கால பெயர் சிலோன். அது ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் பெற்றது 1972 - ம் ஆண்டு மே மாதம் தான்.

வானம் - கடல்
வானும் கடலும் நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை விளக்கியவர் நம் நாட்டு விஞ்ஞானி சி.வி.ராமன்.

கிரகணங்கள்
கிரக்கணங்கள் தோன்றுவதற்கான காரணத்தை முதன் முதலில் வெளியிட்டவர் ஆரியப்பட்டா.

இந்திய தபால் துறை
இந்திய தபால்த் துறையில் வி.பி.பி. முறை 1877 - ம் ஆண்டும், மணியாடர் முறை 1880 - ம் ஆண்டும், அஞ்சலக சேமிப்பு முறை 1882 - லும், பின் கோடு முறை 1972 - லும் அறிமுகமாயின.


அறிவியல் செய்திகள்

கீரை வகைகளில் முருங்கைக் கீரையில் தான் அதிக புரதமும், கலோரிகளும் கிடைக்கின்றன.

வெறும் பச்சை நிறத் துணிதான் லிபியா நாட்டின் தேசியக்கொடி.

ருவாண்டோ நாடு தன் நாட்டு தேசியக் கொடியில் ‘ஆர்’ என்ற எழுத்தை இடம் பெறச் செய்துள்ளது.

ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும்.

கிளிகளுக்கு பேசும் சக்தி அதிகம் உண்டு.

ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.

நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.

நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.

தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.

யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.

சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.

மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.

தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.

சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.

ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.

எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.

பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.

விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.

1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.

சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.

தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.

சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் சீனா, இந்தியா, தைவான்.


ஒரு நாளில்

ஒரு நாளில் சராசரியாக 4,800 வார்த்தைகள் பேசுகிறோம்.

இதயம் 1,03,689 தடவை துடிக்கிறது.

70 லட்சம் மூளைச் செல்கள் வேலை செய்கின்றன.

ரத்தம் 16 கோடியே 80 லட்சம் மையில்கள் பயணிக்கிறது.

விரல் நகங்கள் 0.071714 அங்குளம் வளர்கிறது.

முதல் சாதனையாளர்கள்

உலகைச் சுற்றிய முதல் மனிதன் - மெகல்லன்.

உலகின் தெற்கு முனையை முதலில் அடைந்தவர் - அமுண்ட்சென்.

உலகின் வட முனையை முதலில் அடைந்தவர் - ராபர்ட் பியரி.

எவரஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி பெற்ற முதல் பெண்மணி - ஜினகாடாபி.

வட முனையை அடந்த பெண்மணி - கரோலின் மிக்கல்சன்.

தென் முனையை அடைந்த பெண்மணி - பிரான்பிட்ஸ்.

எவரஸ்ட் சிகரத்தை இரு முறை எட்டியவர் - நவாங்கோம்பு.

வானியல் அறிஞர் கார்ல் சாகன்

கார்ல் சாகன் அமெரிக்க வானியல் அறிஞர். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளரும் கூட. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’வின் ஆலோசகராகவும் இவர் இருக்கிறார். சில விண்வெளிப் புதிர்களை விடுவிப்பதில் சாகன் உதவியுள்ளார். 1960 - க்கு முன்புவரை, புதன் கிரகத்தின் காலநிலை பூமியைப் போலவே இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்பினர். புதன் கிரகத்தின் நில வெப்பநிலை 500 டிகிரி செல்சியஸ் (932 பாரன்ஹீட்) என்று சகன் கண்டுபிடித்தார். அதன் காலநிலை மிகவும் வறட்சியானது என்று சாகன் அறிவித்தார். ஒருவித பசுமைக்கூட விளைவால் தான் புதன் கிரகத்தில் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது என்று அவர் விளக்கினார்.

சனி கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஒரு சிவப்பு நிறப் படலம் காணப்படுகிறது. கூட்டு ‘ஆர்கானிக்’ மூலக்கூறுகள் டைட்டனில் தொடர்சியாக மழையாகப் பொழிந்து அந்த சிவப்புநிறப் படலத்தை உருவாக்குகின்றன என சாகன் கண்டுபிடித்தார். செவ்வாயின் நிலப்பரப்பில் உருவாகும் பகுதி பருவ மாற்றங்கள் அங்கு காற்றுவீச்சின் தூசிகளால் ஏற்படுகின்றன என்றும் சாகன் தெரிவித்தார். வேற்றுகிரகங்களின் உயிர்கள் உண்டா என்ற தீவிரமான ஆராய்ச்சியிலும் சாகன் ஈடுபட்டார்.

மிக அதிகமான விற்பனையான பல புத்தகங்களை கார்ல் சாகன் எழுதியுள்ளார். அவற்றில் இவர் இணைந்து எழுதிய, ‘விண்வெளி: ஒரு தனிப்பட்ட பயணம்’ என்ற நூலும் அடக்கம். அது தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட போது பிரசித்தி பெற்ற ‘எம்மி விருதை’ப் பெற்றது. சாகன் எழுதிய ‘கண்டாக்ட்’ என்ற நாவலை ராபர்ட் ஜெமிக்ஸ் 1997 - ல் படமாக உருவாக்கினார். மனித அறிவுத்திறனின் பரிணாமம் எப்படி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் அடிப்படையில் சாகன் 1978 - ல் ‘ஏடனின் டிராகன்கள்’ என்ற தனது நூலுக்காக புகழ்பெற்ற ‘புலிட்சர் விருதை’ கார்ல் சாகன் பெற்றார். தனது படைப்புகளுக்காக பல்வேறு கவுரவங்கள், விருதுகளை கார்ல் சாகன் பெற்றார்.

’ரோச்சி’ எல்லை

ஒரு கிரகத்தினுடைய துணைக் கோளானது, அந்த கிரகத்தைக் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே நெருங்க முடியும் என்பதை 1850 - ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு கணிதவியல் அறிஞர் எட்வர்டு ரோச்சி இதை கணிதவியல் ரீதியாக நிரூபித்தார். இது ‘ரோச்சி எல்லை’ என அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ரோச்சி எல்லை உண்டு. அது அந்தந்தக் கிரகத்தின் சுற்றுவட்டத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். சனி கிரகத்தின் ரோச்சி எல்லை அதன் மையத்திலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தூரத்தைக் கடந்து உள்ளே செல்லும் துணைக் கோள்கள் வெடித்துச் சிதறி, ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன. ஆனால் புவியிலிருந்து செல்லும் செயற்கைக் கோள்களுக்கு ’ரோச்சி எல்லை’ பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 8, 2009

ஆழமான கடல்

கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இந்தக் கேள்வி பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில் கடலுக்கு அடியில் சுவரஸ்யமான பல விசயங்கள் இருப்பதாக கூறினார். அவருடைய சிஸ்யர் அலக்சாண்டர் கூட கண்ணாடி பலூன் மாதிரிஒன்றை செய்து அதற்குள் உக்கார்ந்து கொண்டு கடலுக்குள் கொஞ்சதூரம் போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கரையில் இருந்து கடலுக்குள் ஒரிருமைல் வரை இருக்கும் பகுதியை கண்டங்களின் நிஜ எல்லை என்கிறார்கள். இதன் சராசரி ஆழம் 600 அடி. இதற்கு அப்பால் தான் நிஜக்கடல் ஆரம்பமாகிறது. ’காண்டினேண்டல் ஷெல்ப்’ என்று சொல்லக் கூடிய கண்டங்களின் எல்லையில் இருப்பது வெரும் 3 சதவீதம் கடல் தான். இதற்கப்புறம் தான் மீதி 97 சதவீத கடல் இருக்கிறது. இங்கு ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்த பகுதியை ‘அபீஸ்’ என்று அலைக்கிறார்கள். இதன் உள்ளே தான் பிரம்மாண்டமான சமவெளிப் பிரதேசம், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுளிகள் , மலைத் தொடர்கள் இருக்கின்றன.
கடலுக்கடியில் சூரிய ஒளிகூட 100 அடி வரைதான் பாயும். அதற்கு கீழே போகப்போக ஒளி மங்கிக் கொண்டே இருக்கும். ஆயிரம் அடிக்கு மேல் கும்மிருட்டு அரம்பமாய்விடும். இதில் ஆய்வு செய்வது சாதாரண விஷயமில்லை. இருந்தாலும் ஆய்வுகளுக்கு பஞ்சமில்லை. எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் மூச்சை மட்டும் அடக்கிக் கொண்டு கடலுக்கு அடியில் 285 அடி ஆழம் வரை போய் வந்திருக்கிறார் ஒருவர்.
சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த பிக்கார்ட் என்பவர் நீர்முழ்கி படகு ஒன்றை தயாரித்தார். டிரையஸ்ட் என்ற அந்தப் படகில் உக்கார்ந்து செங்குத்தாக கடலுக்குள் இறங்கினார். ஐந்து மாணி நேரம் கழித்து தரையை தொட்டுவிட்டார். பசிபிக் கடலில் அவர் இறங்கிய இடம் மெரியானா ட்ரெஞ்ச். இதன் ஆழம் சுமார் ஆறேமுக்கால் மைல். 35 ஆயிரத்து 808 அடி. ஆனால் மலைச்சிகரமான எவரஸ்ட் 29 ஆயிரத்து 28 அடிதான். கடலில் மிக ஆழமான இந்த பகுதியில் இவ்வளவு ஆழத்தில் பிக்கார்ட் சுமார் 20 நிமிடம் இருந்தார். இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிக மிக ஆழமான இடம் இதுவே.

பிளாட்டினம்

பிளாட்டினம் வெள்ளை நிறம் கொண்ட தனிமம்.

இது நீரைப் போல் 21 மடங்கு எடைஉள்ளது.

பிளாட்டினம் 1773 டிகிரி வெப்ப நிலையில் தான் உருகும்.

பிளாட்டினம் துருப்பிடிக்காது.

தங்கத்தை விட விலைமதிப்பு மிக்கது.

மின்சார பல்புகளில் கம்பிகளாக பயன்படுகிறது.

தந்தைகள்

 • ஒப்பிலக்கணத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கால்டுவெல்.
 • சிறு கதையின் தந்தை செல்வகேசவராய முதலியார்.
 • இந்திய சினிமாவின் தந்தை தாதா சாஹேப் பால்கே.
 • இந்திய விண்வெளியின் தந்தை விக்ரம் சாராபாய்.
 • இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை ஹோமி பாபா.
 • இந்திய ஓவியத்தின் தந்தை ராஜா ரவிவர்மா.

மிகப்பெரிய ஆழி

கடலுக்கடியில் மிக ஆழமான பகுதிகள் ஆழிகள் ஆகும். உலகின் மிக ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா ஆழியாகும். இதன் ஆழம் 10,990 மீட்டர் ஆகும்.

விண்ணில் திடீரென எரிந்து விழுபவை நட்சத்திரங்கள் அல்ல, விண்கற்களே ஆகும். அவை புவிக்கருகில் வரும் பொழுது புவியின் ஈர்ப்பு விசையின் மூலம் ஈர்க்கப்படுகிறது. புவியின் வளிமண்டலத்திற்குள் வரும் பொழுது காற்றுடன் ஏற்படும் உராய்வினால் சூடாக்கப்பட்டு எரிந்து சாம்பலாகின்றன.

ஓரிடத்தின் வெப்பநிலை என்பது அந்த இடத்தின் தரைப் பகுதிக்கு மேல் 1.5 மீட்டர் உயரத்தில் உள்ள காற்றின் வெப்பநிலை ஆகும். ஓரிடத்தின் வெப்பநிலையை அளக்கும் போது தரையின் மீது வெப்பமானியை வைக்காமல் தரையிலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் வைத்து அளக்கின்றோம்.

சீலாகாந்த் மீன்கள்

கடலிலிருந்து வந்த ஒரு மீன் நான்கு கால் பிராணியாக ஆகியிருக்கலாம் என்ற பரிணாமக் கொள்கைக்கு ஆதாரமாக இருப்பது சீலாகாந்த் மீன்கள். இவை 1938 - ல் இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கர் தீவு அருகில் தற்செயலாகக் கண்டறியப்பட்டது.


ஆர்டிக் கண்டத்தில் உள்ள பனிப் பாறைகள் வெண்மை நிறம் உடையவை சுற்றுச்சூழல் மாசுபடுவதன் காரணமாக, தற்போது அவை உருகத்தொடங்கி இருக்கின்றன.

அறிவுக்கு சில

இன்காப் பேரரசின் மிகச் சிறந்த அரசன் சினான்சிரோக்கா.

இரண்டாம் உலகப்போர் 6 ஆண்டுகள் நடைபெற்றன.

மத்திய காலத்தில் கல்வி கற்க பயன்பட்ட மொழி லத்தீன் மொழி.

கழுகு 6 கி.மீ. வரை இறகுகளை அசைக்காமல் பறக்கும்.

அப்பாசித்துகள் காலத்திய அராபியப் பேரரசின் தலை நகர் பாக்தாத்.

முள் காடுகள் இந்தியாவில் அதிகம் உள்ள இடம் விசாகபட்டிணம்.

அதிக சத்தம் எழுப்பும் பூச்சியினம் சிகாடா.

உலகிலேயே மிக வேகமாக ஓடும் பூச்சியினம் கரப்பான் பூச்சி.

மனிதனைப் போல ஜலதோசம் பிடிக்கும் விலங்கினம் நாய், பூனை.

உலகில் தூங்காத இனம் பூச்சியினம்.

இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் இரு நதிகள் நர்மதை, தபதி.

மஞ்சள் புத்தகம் என்பது பிரேஞ்சு நாட்டின் அதிகாரபூர்வ புத்தகம்.

பனை ஓலைச் சுவடியை பண்டைய காலத்தில் பதப்படுத்தி மஞ்சள் பூசி எழுத்தாணியால் எழுதுவார்கள்.

குடவோலை முறை என்பது சோழர் காலத்தில் நடைபெறும் தேர்தல் முறையாகும்.

பப்பாளிக்காயில் இருந்து எடுக்கப்படும் பாலின் பெயர் பப்பை.

தமிழகத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டது.

வாழைப்பழத்தில் வைட்டமீன் ஏ, பி, பி2, சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

ரஷ்ய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய் 1910 - ம் ஆண்டு இயற்கை ஏய்தினார்.


பெயற் காரணம்

 • பென்சிலஸ் என்ற லத்தீன் மொழி சொல்லில் இருந்து பிறந்தது தான் பென்சில் என்ற வார்த்தை. இதற்கு வால் என்று பொருள்.
 • ஆங்கிலத்தில் புலியை ‘டைகர்’ என்று அழைக்கிறோம். டைகர் என்ற பாரசீகச் சொல்லுக்கு அம்பு என்று அர்த்தம்.
 • நாவல் என்பது இத்தாலிய மொழிச் சொல். அம்மொழியில் நாவல் என்றால் கதை என்று பொருள்.
 • குடைக்கு ஆங்கிலத்தில் ‘அம்ப்ரெல்லா’ என்கிறோம். இலத்தீன் மொழியில் அம்ப்ரா என்றால் நிழல் தரும் என்று பொருள்.
 • வீடியோ என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் நான் பார்க்கிறேன் என்பதாகும்.

Wednesday, October 7, 2009

கடல் பசு, மேனிட்டி

கடல் வாழ் தாவரங்களைத் திண்பதாலும், அமைதியாய் மூர்க்க குணமற்று இருப்பதாலும் இவைகளை கடல் பசுக்கள் என்று அழைக்கிறார்கள். மீனவர்கள் ஆவுளியா என்று சொல்வார்கள். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதால் சந்தையில் கிராக்கி அதிகம். இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முரிவு மருந்து தயாரிக்கின்றனர். தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது.

மேனிட்டி

கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் கழிமுகம் வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு என்று கூட சொல்லலாம். கடல் பாசிகளையும், ஆறுகளில் உள்ள நீர் தவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து மேனிட்டிகள் ஒரு பெரியஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம்.மேனிட்டிகள் இறைச்சிக்காகவும்,தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. மேனிட்டியின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் டை 60 பவுண்ட். அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கண்டத் தட்டு

பூமியின் மேற்பரப்பில் உள்ள பசிபிக் தட்டு, அண்டார்டிக்கா தட்டு, வட அமெரிக்கா தட்டு, தென் அமெரிக்கா தட்டு, ஆப்பிரிக்கா தட்டு, என ஏழு பெரிய தட்டுக்கள் மற்றும் பதினோரு சிறிய தட்டுக்களும் காணப்படுகின்றன. இந்த தட்டுகளின் மீது தான் கண்டங்களும், கடல்களும் உள்ளன. இவை நகர்வதால் தான் நிலப்பரப்பு காலம் காலமாக மாறுபட்டு வந்திருக்கிறது.

புறாவைப் பற்றி

 • மனிதன் வளர்க்கத் துவங்கிய முதல் பறவை புறா தான்.
 • புறாக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கில் வாழும்.
 • தூது செல்லும் புறாக்களை ஹோமர் என்று அழைப்பார்கள்.
 • புறா மணிக்கு 35 மைல் வேகத்தில் பறக்கும்.
 • பறவைகளில் புறா மட்டுமே நீரை உறிஞ்சிக் குடிக்கும்.

முட்டை உருவாகும் விதம்

முட்டை அமைப்பு மிகவும் சிக்கலானது. ஆனால் சீரானது. கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் முட்டை உருவாகிறது. கோழிக்கு இடதுபுறத்தில் ஒரே ஒரு கருப்பையே உள்ளது. சில நாட்டுப் பறவைகளுக்கு இரு கருப்பைகளும் முட்டைக் குழாய்களும் இருப்பதுண்டு. கோழியில் கருப்பை திராட்சை பழக் கொத்தை போல இருக்கும். ஒரு கோழி தனது ஆயுளில் எட்டு வருட காலத்தில் சுமார் 1515 முட்டைகளை இடுவதாக கூறப்படுகிறது.

ஒரு கோழியின் முட்டை உற்பத்தியாகும் நடைமுறை இரண்டே முக்கால் மாணி நேரத்தில் பூர்த்தியாகிறது. கோழி முட்டையிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளாக மற்றோர் மஞ்சள் கரு முழுமையாக முற்றி விடுகிறது. அப்போது, அதில் 6 அடுக்குகள் அடங்கியிருக்கும்.

மஞ்சள் கரு முழுமையாக முதிர்ச்சி அடைந்ததும் முட்டைக் குழாய்க்குள் விழுந்து விடுகிறது. முட்டைக் குழாயில் பல பிரிவுகள் உள்ளன. முதிர்ச்சியடைந்த மஞ்சள் கரு முதல் பிரிவில் வளர்த்தப்படுகிறது. இந்தப் பிரிவில் முட்டை சிலநிமிடங்களே தங்குகிறது. பிறகு அடுத்த பிரிவிற்கு செல்கிறது. அங்கு வெளிப்புறத்தில் ஒன்றும் உட்புறத்தில் ஒன்றுமாக இரண்டு மெல்லிய தோல்கள் அல்லது சவ்வுகள் கருப்புறத்தை ஓடாக்குவதற்காக உறைகளைப் போல சேர்க்கப்படுகின்றன. இந்த நடை முறை முடிவதற்கு 1 மணி 10 நிமிடம் ஆகிறது. பிறகு முட்டை கருப்பை அமைந்திருக்கும் சுரபிக்குச் செல்கிறது. அங்கு 19 மணி நேரம் தங்குகிறது. அடுத்த 14 மணிநேரத்தில் முட்டை ஓட்டின் பல அடுக்குகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர் முட்டைக்கு மெல்லிய தோல் வழங்கப்படுகிறது. இந்தத் தோல் தான் முட்டைக்கு உரிய நிறத்தை தருகிறது. இப்படியாக கோழியின் வயிற்றில் முட்டையின் வளர்ச்சி நடைபெறுகிறது.

மரங்களின் வயது

மரங்களின் வயதை கண்டறிய ஒரு எளிய முறையைக் கையாளுகின்றனர். பொதுவாக ஒரு மரத்தின் அடிப்பாகப் பகுதியை குறுக்காக வெட்டினால் அதன் நடுப்பகுதியில் இருந்து வெளி வட்டம் வரை அடுக்கடுக்காக பல வளையங்கள் காணப்படும். இந்த வளையங்களை வைத்து அந்த மரத்தின் வயதை கணக்கிடுகின்றனர். அதாவது அந்த மரத்திற்கு ஒவ்வொரு வயது ஏறும் போதும் மரத்தின் கட்டையிலும் ஒரு வளையம் உண்டாகிறது.

கைரேகை புலனாய்வு

கைரேகை புலனாய்வு முறையை முதன் முதலாக கண்டுபிடித்து உருவாக்கியவர் எட்வர்டு ஹென்றி என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல். 1890 - ல் இவர் வங்காளத்தில் பணியாற்றிகொண்டிருந்த போது முதன் முதலில் இந்த முறையில் புலனாய்வு செய்து வெற்றி பெற்றார்.

கணித மேதைகள்

கணிதத்துறையில் பல்வேறு புதுமைகளை உணர்த்திய கணித மேதைகள்.

முக்கோணவியலின் தந்தை - ஹிப்பார்க்கஸ்.

பகுமுறை வடிவியலின் தந்தை - ரெனோ டெஸ்கார்டஸ்.

வடிவியலின் தந்தை - யூக்ளிட்.

இயற்கணிதத்தின் தந்தை - டியோபாண்ட்ஸ்.

மடக்கையின் தந்தை - ஜான் நேப்பியர்.

எண்ணியலின் தந்தை - பிதாகரஸ்.

புள்ளியலின் தந்தை - ஹவிஸ்.

தொகை நுண் கணிதத்தின் தந்தை - ஆர்சி மேட்ஸ்.

வகை நுண் கணிதத்தின் தந்தை - டி. பெர்மட்.

SATURN

SATURN SLIDE SHOWஅறிவியல் செய்திகள்

மனித உடம்பில் நீளமான எழும்பு தொடை எழும்பு.

எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் ஜே. ஜே. தாம்சன்.

மொகஞ்சோதாரோ அகழ்வாராய்ச்சி 1922 - ல் செய்யப்பட்டது.

இந்தியாவில் தபால் சேவை 1854 -ல் அறிமுகமானது.

சிறுநீரகம் ரத்தத்தில் கால்சியம், பாஸ்பரஸ் அளவை சீராக வைக்கிறது.

பெட்ரோலியம் என்ற சொல்லுக்குப் பாறை எண்ணை என்று பொருள்.

250 கிராம் டங்ஸ்டனை 100 கிலோமீட்டர் நீளமுள்ள கம்பியாக நீட்ட முடியும்.

பூச்சி உண்ணும் தாவரம் டயோனியா.

உலகின் மிகப் பெரிய மரம் ஜெனரல் ஷெர்மன் என்ற மரம் 270 அடி உயரம் வளரும்.

சமாதானத்திற்கான நோபல் பரிசை தேர்வு செய்யும் குழு நார்வே நாட்டு ஐவர் குழு.

நமது உடலில் உள்ள நரம்புகளை ஒன்றாக நீட்டினால் 45 மைல்கள் இருக்கும்.

போர்த்துகீசியரிடம் கோவா

1839 - ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கம் கோவாவை போர்த்துகீசியர்களிடம் 4 கோடி ரூபய்க்கு கேட்டது. ஆனால் போர்த்துகீசியர்கள் அந்த விலைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தொடர்ந்து 122 ஆண்டுகளுக்கு போர்த்துகீசியர்கள் வசமே கோவா இருந்தது.

பாலைவனச் சோலை

பாலைவனத்திலும் ‘தண்ணீர் கண்ணில் தென்படும் பகுதிதான் பலைவனச்சோலை’ எனப்படுகிறது. இங்கே நிலத்தடி நீர் தரை மட்டத்தை அடைந்து ஒரு குளத்தையோ, நீரூற்றையோ உருவாக்குகிறது. ஒரு பாலைவனச் சோலை என்பது சில பேரீச்சை மரங்களுடன் கூடிய குளமாகவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விவசாயம் செய்து வசிக்கக்கூடிய அளவு பெரியதாகவோ இருக்கலாம். பாலைவனப் பகுதியில் முக்கியமான வர்த்தக மற்றும் போக்குவரத்து மையங்களாக பாலைவனச் சோலையாக உள்ளன. பாலைவனப் பகுதியில் பயணம் செய்பவர்கள் உணவுக்காகவும், ஓய்வுக்காகவும் பாலைவனச் சோலைப் பகுதியில் நின்று செல்வார்கள். அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ்வேகாஸ், கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ் போன்ற நகரங்கள் இயற்கையான பாலைவனச் சோலையைச் சுற்றி உருவானவையாகும்.

விண்வெளிக் கல் செரஸ்

விண்வெளிக் கற்களிலேயே பெரிதான செரஸ் சுற்றளவு 950 கிலோமீட்டர்களாகும். ரோமானிய விவசாய தேவதையின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. விண்வெளிக் கற்களிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது செரஸ். இது செவ்வாய் - வியாழன் கிரகங்களுக்கு இடையிலான சுற்று வட்டப்பாதையில் காணப்படுகிறது. இத்தாலிய விண்வெளி ஆய்வாளரான ஜியூசெப்பே பியாஸி இதை எதோச்சயாக கண்டுபிடித்தார். ஆனால் இதன் சரியான இடத்தைக் கண்டுபிடித்தவர் கணிதவியல் அறிஞரான கார்ல் காஸ்.

எத்தனை உயிரினங்கள்

உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.

வைரஸ்கள் - 1,000 வகைகள்.


பாக்டீரியாக்கள் - 3,060 வகைகள்.


பாசிகள் - 26,960 வகைகள்.


தாவரங்கள் - 2,48,428 வகைகள்.


நட்சத்திர மீன்கள் - 6,100 வகைகள்.


பூச்சிகள் - 7,51,000 வகைகள்.


மீன்கள் - 19,056 வகைகள்.


ஊர்வன - 6,300 வகைகள்.


பறப்பன - 9,040 வகைகள்.


பாலூட்டுவன - 4,000 வகைகள்.


நவரச ராகங்கள்

ஒவ்வொரு ராகமும் சில சூழ்நிலைகளையும், பண்புகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். அதில் நவரசங்களை வெளிப்படுத்தும் ராகங்கள் இதோ...

அன்பு - கமாஸ், பைரவி, கானடா.

வெறுப்பு - அடானா.

மகிழ்ச்சி - மோகனம், அம்சத்வனி, கேதாரம்.

சோகம் - சகானா, முகாரி, நீலாம்பரி.

வீரம் - பிலகரி, பேகடை, தேவகாந்தாரி.

கோபம் - அடானா, ஆரபி.

பயம் - புன்னாகவராளி.

சாந்தம் - சாமா, வசந்தா.

விந்தை (அற்புதம்) - சாரங்கா, பேகாக்.

மாநிலங்கள் சீரமைப்பு

இந்தியாவில் பல முறை மாநிலங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. அதில் சில...

1960 - ஆம் ஆண்டு மும்பை மகாராஷ்டிராவாகவும், குஜராத்தாகவும் பிரிக்கப்பட்டது.

1963 - ஆம் ஆண்டு நாகலாந்தில் இருந்து அசாம் உருவாக்கப்பட்டது.

1966 - ஆம் ஆண்டு பஞ்சாப்பிலிருந்து அரியானா உருவாக்கப்பட்டது.

1971 - ஆம் ஆண்டு இமாச்சலப்பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.

1972 - ஆம் ஆண்டு மணிப்பூருக்கும், திரிபுராவிற்கும் மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

1975 - ஆம் ஆண்டு சிக்கீம் (22 - வது )மாநிலமாக உருவாக்கப்பட்டது.

1987 - ஆம் ஆண்டு கோவா மநிலம் (25 - வது) உருவாக்கப்பட்டது.

2000 - ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து சத்திஸ்கர், உத்திரப்பிரதேசத்திலிருந்து உத்தராஞ்சல், பீகாரிலிருந்து ஜார்கண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

உறுப்பு இல்லாத உயிரினம்

ஈசலுக்கு வயிறு இல்லை.

பட்டாம்பூச்சிக்கு வாய் இல்லை.

எறும்புகள் தூங்குவதே இல்லை.

பெங்குவின் பறப்பதில்லை.

பாம்புகளுக்கு காதுகள் இல்லை.

நண்டுக்கு தலை இல்லை.

Tuesday, October 6, 2009

காசநோய்

மாலை வேளைகளில் காய்ச்சல், தொடர்ந்து இருமல், பசியின்மை, எடைக்குறைவு போன்றவை அறிகுறிகள்.

காசநோயாளிகளின் எச்சிலிலுள்ள கிருமிகள் காற்றில் பரவுகிறது. இதனால் இந்நோய் பிறருக்கும் பரவுகிறது.

தடுப்பு முறை:-

நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைக் கொதிக்கும் நீரில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி. தடுப்பூசி போட வேண்டும்.Monday, October 5, 2009

பூமியின் வடிவமும் வேகமும்

ஒரு கிரிக்கட் மைதானத்தை முழுதாக மேலிருந்து பார்க்க வேண்டும் என்றால் 50 அடி உயரத்திற்கு மேலே போனால் முழு மைதானத்தையும் பார்க்கலாம். இதைப் போன்றே பூமியை முழுவதுமாக பார்க்க வேண்டுமென்றால் எத்தனை கிலோ மீட்டர் உயரம் போக வேண்டும் தெரியுமா?

தினமும் நாம் பொதிகை சேனலில் வானிலை அறிக்கையில் பார்க்கும் இன்சாட் - 1பி செயற்கை கோளின் படம், 36 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து எடுக்கப்பட்டது. இதுவே பூமி முழு உருண்டையாக பந்து போல் தெரிவதற்கு பூமியில் இருந்து 72 ஆயிரம் கிலோமீட்டர் துரம் செல்ல வேண்டும். அந்த தூரத்தில் இருந்து பார்த்தால் பூமி ஒரு நீல நிற பந்து போல் மிதந்து கொண்டு இருக்கும்.

பூமியின் சுற்றளவு பூமத்திய ரேகையில் குறுக்காக 12 ஆயிரத்து 756 கிலோமீட்டர். இதுவே பூமி மேலும், கீழுமாக ’போலார்’ சுற்றளவில் 12 ஆயிரத்து 714 கிலோமீட்டர் உள்ளது. பூமி சுற்றும் வேகம் 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 756 கிலோமீட்டர் ஆகும். ஒரு மணி நேரத்தில் 529 . 75 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றுகிறது. இது விமானத்தின் வேகத்தை விட கூடுதலாகும்.

பூமியின் இந்தவேகம் 11 மடங்கு அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் தரையில் ஒட்டிக்கொண்டிருக்கமாட்டோம். பூமியில் இருந்து தூக்கி எறியப்படுவோம். நல்ல வேலையாக பூமியில் அதுபோன்ற பாதிப்பு எதுவும் இப்போதைக்கு ஏற்படவாய்ப்பு இல்லை. ஒரு வினாடிக்கு 29.78 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது. ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 208 கிலோமீட்டர் வேகத்தில் தனது பாதையில் இரொந்து சற்றும் விலகாமல் ஒரே வேகத்தில் சூரியனையும் சுற்றிக்கொண்டு தன்னைத்தானே சுற்றி வருகிறது.

Saturday, October 3, 2009

கால்சியம்

உறுதியான பற்களுக்கும், கெட்டியான எழும்புகளுக்கும் கால்சியம் மிகவும் அவசியம். கால்சியம் நாம் உண்ணும் உணவுகளில் எந்த அளவு இருக்கிறது என்று பார்ப்போம்.


பாதாம் ------- 230 மி.கிராம்

சோயாபீன்ஸ் ------- 240 மி.கிராம்

பால் கோவா, பாலாடை, வெண்ணை எடுத்த பால் -----790 முதல் 1,370 மி.கிராம்

கேழ்வரகு ------------ 344 மி.கிராம்

வெந்தயக்கீரை ---------- 390 மி.கிராம்

முருங்கைக்கீரை ---------- 440 மி.கிராம்

எள்ளுருண்டை ------------ 1,450 மி.கிராம்

பால் ---------- 120 முதல் 210 மி.கிராம்

செயற்கை மணல்

அறிவியலில் இது ஒரு அபார சாதனை. சமீபத்தில் சோவியத் விஞ்ஞானிகள் ஒரு வித செயற்கை மணலை உருவாக்கி இருக்கிறார்கள். 2 சதவீதம் வரை அயனிப் பொருட்களைக் கலந்து அதனுடன் 15 வகை ஊட்டச் சத்துக்களை சேர்த்து இந்த மண் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

அண்டவெளியில் ஓராண்டு காலம் பிரயாணம் செய்த சோவியத் விண்கல விஞ்ஞானிகள் தங்களுக்கு வேண்டிய பச்சைக் காய்கறிகளை இந்த மண்ணில் பயிரிட்டு பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு இந்த மண் ‘அண்டவெளி மண்’ என்ற சிறப்பு பெயரையும் பெற்றது.

பூமியில் உள்ள மணலை விட இதற்கு பல சிறப்புத் தன்மைகளும் உண்டு. உதாரணமாக ஒரு புது ரகத் தாவர இனத்தை உருவாக்க வேண்டுமெனில், இயற்கை மண்ணை விட ஐந்தில் ஒரு பங்கு காலமே இந்த செயற்கை மண்ணுக்கு போதுமானது.

விசித்திர தூக்கம்

துருவப் பிரதேசங்களில் உள்ள ஒரு வகை வாத்து பனிக்கட்டியில் ஓட்டை செய்து அதில் படுத்து தூங்கும். நியூசிலாந்தில் உள்ள கிவி பறவை பூமியில் காணப்படும் பள்ளங்கள், இடுக்குகளில் நுழைந்து கொண்டு பகல் நேரங்களில் தூங்குகிறது. கிரீப்பா என்ற பறவை மரப்பொந்துகளில் மல்லாந்து படுத்துக் கொண்டு துங்கும். வவ்வால் ஒரு காலால் ஏதாவது ஒரு கிளையை பிடித்து தலைகீழாகத் தொங்கிக்கொண்டே தூங்குகிறது. ஸ்விப்ட் எனப்படும் பறவை இனம் பெரிய பந்து போல ஒன்றையொன்று கட்டிக்கொண்டு கூட்டமாக சேர்ந்து தூங்கும்.

Friday, October 2, 2009

முதல் உலகப் போரின் இறுதி நாள்

இங்கிலாந்து நாடு முழுவதும் தொழில்புரட்சி எற்பட்டுக் கொண்டிருந்த நேரம். தொழில்புரட்சி மெல்ல, மெல்ல மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. ஆனால் பொருட்களின் உற்பத்தி பெருக்கத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த மூலப்பொருட்களின் பற்றாக்குறையை ஈடு செய்ய பின் தங்கிய நாடுகளான ஆப்பிரிக்க நாடுகளை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதில் போட்டிகள் ஏற்பட்டன.


ராணுவ விரிவையும், யுத்த தளவாடங்களையும் ஜெர்மனி முந்திக்கொண்டு செய்தது.இதனால் இங்கிலாந்தும், பிரான்சும் கலக்கம் அடைந்தன. இந்த நேரத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு உடன் படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன. இதைப் பார்த்து மேலும் பயம் கொண்ட எதிர் நாடுகள் இரண்டும் தற்காப்புக்காக ஒரு உடன் படிக்கையை செய்து கொண்டன. இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் நேச நாடுகள் என்றும், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய முன்று நாடுகளும் மையநாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இரு தரப்பாக இந்த நாடுகளுக்கிடையே போர் மூண்டது. 1916 - ம் ஆண்டு வரை எந்த தரப்பினருக்கும் பயன் இல்லாமல் போர் நடந்துகொண்டிருந்தது. போரின் இறுதி நாளான 11.11.1918 - ம் ஆண்டு ஜெர்மனிய படைத் தளபதி சரண் அடைந்தார். இந்தப் போரில் நேசநாடுகள் வெற்றி பெற்றன.

இதன் பின்னர் 1919 - ல் பாரிஸ் வெர்செயில்ஸ் அரண்மனையில் 75 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட 440விதிகள், 200 பக்கங்கள் அடங்கிய உடன்படிக்கையில் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் எச். முல்லார் என்பவரும், டாக்டர் பால் என்பவரும் கையேழுத்திட்டனர். இதன் மூலம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி ஜெர்மனி தனது நிலப்பரப்பில் 13 சதவிகிதத்தை இழந்தது.

Tuesday, September 29, 2009

இந்திய சட்டம்

`இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).

கல்லீரல்

பித்தநீர் என்ற ஜீரண நீரை உற்பத்தி செய்வது கல்லீரல். அல்புமின் என்ற புரதத்தை தயாரிக்கும் உறுப்பு கல்லீரல். கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் பிற இன வைரஸ்களில் முக்கியமானது சைட்டோ மெக்லோ வைரஸ், எப்ஸ்டெயின் பார் வைரஸ். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் முதலாக 1963 ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ம் ந்தேதி செய்யப்பட்டது. இந்த சிகிச்சை செய்த டாக்டர்கள் தாமஸ், ஸ்டார்ஸ்டல். இந்தியாவில் முதன் முதலில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் (1996-ல்) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.

Friday, September 25, 2009

ஜப்பானியர்கள்

ஜப்பானில் 4 ராசியில்லாத எண்ணாக கருதப்படுகிறது.

ஜப்பானியர்கள் சாப்பிடுவதற்கு முன் ‘இட்டாகிமசூ’ என்று சொல்வார்கள். இதற்கு அர்த்தம் ‘இந்த உணவுப் பொருளைத் தயாரித்து வழங்கியவர்களுக்கு நன்றி’ என்பதாகும்.

புத்தாண்டின் அதிஷ்டம்

புத்தாண்டு துவங்கவதற்கு முன்பாக நள்ளிரவின் கடைசி 12 வினாடிகளில் திராட்சைப் பழம் சாப்பிடுவதை மரபாக வைத்துள்ளனர் ஸ்பெயின் மக்கள். அப்போதுதான், புத்தாண்டு அதிஷ்டகரமாக இருக்கும் என்பது அவைகளின் நம்பிக்கை.

அறிவோமா?

 • நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள் பி மற்றும் சி.
 • முட்டையின் வெளீ ஓட்டில் உள்ள வேதிப் பொருள்கள் கால்சியம் கார்பனேட்.
 • அமாவாசை அன்று பூமிக்கு ஒரே பக்கத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன. இதனால், புவியீர்ப்பு விசை உச்சத்தில் இருக்கும்.
 • இரு தேசியக்கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.
 • ஏப்ரல் முதல் நாள் மீன்களின் தினமாகக் கொண்டாடும் நாடு பிரான்ஸ்.
 • இரவும் பகலும் 5 மணி நேரமாகக் கொண்ட கிரகம் வியாழன்.
 • சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலச் செய்தித்தாளின் பெயர் ‘மதராஸ் கூரியர்’
 • இந்தியாவில் விவசாய உற்பத்தியில் முன்னனியில் நிற்கும் மாநிலம் பஞ்சாப்.
 • சென்னையிலுள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் ராய் சாவித்திரி.
 • திருக்குறள் 1887 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்தது.
 • சர்வதேச நீதி மன்றம் ஹாலந்து நாட்டிலுள்ள தி ஹேக் நகரில் உள்ளது.
 • நண்டுக்கு பத்து கால் உள்ளது.
 • திருவள்ளுவர் பிறந்த ஊர் மையிலாப்பூர்.
 • மாம்பழத்தின் பிறப்பிடம் இந்தியா.
 • மனிதனின் தலை முடி வருடத்திற்கு 6 அங்குலம் வரை வளர்கிறது.
 • திருப்பதியைக் கட்டிய சோழ மன்னன் கருணாகரத் தொண்டைமான்.
 • ரமண மகரிஷியின் இயற்பெயர் வேங்கடராமன்.
 • ஒரு காலத்தில் எகிப்தியர்கள் பூனைகளை கடவுளாக வழிபட்டனர்.
 • உலகில் பெரும்பாலொர் சட்டையின் பட்டனைக் கீழிருந்து மேலாகத்தான் போடுகிறார்கள்.
 • அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையில் உள்ள ஆள் காட்டி விரலின் நீளம் 8 அடியாம். நகத்தின் நீளம் 10 அங்குலம்.

கடலைப்பற்றி

கடலில் ஆழம் காண பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் பாத்தேமீட்டர்.

கடல் நீரில் இருந்து முதலில் பெறப்பட்ட தனிமம் புரோமின்.

கருங்கடல் கனிம வாயுக் கிடங்கு எனப்படுகிறது.

கடற்கறை மணலை சுத்தம் செய்யும் கருவியின் பெயர் பீச் கோம்பர்.

அனகோண்டா!

உலகின் மிகப் பெரிய பாம்பான அனகோண்டா திரைப்படங்களில் காணப்படுவது போல் கொடூர குணமுடையது அல்ல. 22 அடி நீளம் வளர்ந்தாலும் கோழி, வாத்து, நாய், ஆடு, மான், முயல் போன்றவற்றை உண்ணணும். இதன் எடை 200 கிலோ. ஒரு தடவைக்கு 100 முட்டைகள் வரை இடும். இதன் ஆயுட்காலம் சராசரி 40 ஆண்டுகள். நமது மண்ணில் காணப்படும் மண்ணுளிப் பம்புகள் அனகோண்டா பாம்புகளின் தூரத்து உறவினமாகும்.

Tuesday, September 22, 2009

லால்பகதூர் சாஸ்திரியும், செவ்வாய் கிழமையும்

இந்தியாவில் இரண்டாவது பிரதமராகிய லால்பகதூர் சாஸ்திரிக்கும் செவ்வாய் கிழமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. லால்பகதூர் சாஸ்திரி பிறந்தது, மாநில அமைச்சரானது, மத்திய அமைச்சரானது, காங்கிரஸ் தலைவரானது, உள்துரை அமைச்சரானது, இந்தியப் பிரதமரானது, பாரத ரத்னா விருது வாங்கியது,புகழ் பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அவர் இறந்தது இவை அனைத்தும் செவ்வாய் கிழமையில் தான்.

அறிவியல்துணுக்கு

அதிக ஞாபகசக்தி உள்ள விலங்கு யானை.

ஈரானின் பழைய பெயர் பாரசீகம்

சணத்திலிருந்து மீத்தேன் வாயு கிடைக்கிறது.

மீன்களுக்கு உமிழ் நீர் சுரப்பிகள் இல்லை.

சிவப்பு நிற ஒளிக்கு அலை நீளம் அதிகம் இருப்பதால் அது போக்குவரத்து சிக்னலில் பயன்படுகிறது.

தொலைக் காட்சியை ‘ஆன்’ செய்தவுடன் படம் வருவதற்கு முன் ‘ஒலி’ வந்து விடும். காரணம், படத்தை உருவாக்கும் பிக்சர் டியூப் சூடாக சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது.

காற்றில் ஒலியின் வேகம்

 • வெள்ளி கிரகம் இரவு நேரத்தில் ஊதா வண்ணத்தில் ஒளி வீசுகிறது.
 • சூரியனின் குறுக்களவு 13,92,000 கிலோ மீட்டர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
 • காற்றில் ஒலியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 380 மீட்டர்களாகும்.
 • சூரிய ஒளியானது பூமியை அடைய 8 நிமிடங்களும், 20 விநாடிகளும் ஆகின்றது.
 • மழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால்தான் நீண்டதூரத்திற்கு ஒலியைக் கேட்கமுடிகிறது.
 • செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
 • நீரின் ஒலியின் வேகம் விநாடிக்கு சுமார் 1,600 மீட்டர்.

அஞ்சல் தலை

*இந்தியாவில் தற்போதுள்ள அஞ்சல் முறையினை முதன் முதலில் புகுத்தியவர் ராபர்ட் கிளைவ்.

*பிரிட்டனில் தான் முதன் முதலில் அஞ்சல் தலை ஒட்டும் வழக்கம் 1840-ல் தொடங்கியது.

*அஞ்சல் தலையை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நாடு இந்தியாதான்.

*காமன்வெல்த் நாடுகளில் ‘ஏர்மெயில்’ அஞ்சல் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு இந்தியாவே.

*உலகின் முதன் முதலாக விமான கடிதப் போக்குவரத்தைத் தொடங்கிய நாடும் இந்தியாவே!.

உயிரினங்களின் வகைகள்

 • வவ்வால்களில் 2,000 வகைகள் இருக்கின்றன.
 • குரங்கு இனங்களில் 200வகைகள் உள்ளன.
 • தவளையில் 4,000 இனங்கள் உள்ளன.
 • ஆமை இனத்தில் 40 வகைகள் உள்ளன.
 • கடலுக்குள் 13,000 வகை மீன்கள் உள்ளன.
 • உலகில் பூச்சி இனங்களில் 7 லட்சம் வகைகள் உள்ளன.

பாம்புகள்

 • பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.
 • பாம்பு இனத்தில் மிகப் பெரியது அனகோண்டா.
 • பாம்புக்கு வாசனை அறியும் சக்தி அதன் நாவில் உள்ளது.
 • பாம்புகள் பல மாதங்கள் உண்ணாமல் இருக்கும் ஆற்றல் உடையது.
 • பாம்புகளுக்கு காதுகள் இல்லை. ஆனால் ஒலியை உணரும் ஆற்றல் உண்டு.
 • இங்கிலாந்தில் 50 செ.மீ நீளமுள்ள பாம்புகள் உள்ளன.
 • நன்கு வளர்ந்த ராஜநாகம் 18 அடி நீளம் வரை இருக்கும்.
 • மலைப் பாம்புகளுக்கு விஷம் கிடையாது.

போலார் கரடி

* லிமை மிகுந்த போலார் கரடி 1,320 பவுண்டு எடை இருக்கும். வளர்ந்த மனிதனை விட 10 மடங்கு அதிகம். மண்ணில் காணப்படும் மிகப்பெரிய மாமிசம் திண்ணும் பாலூட்டி இனம் இது தான். வளர்ந்த கரடி ; மீன் மற்றும் சீலை தங்கள் எடைக்கு நிகரான பெலூகா திமிங்கலத்தையும் விருப்பத்துடன் சாப்பிடும்.

வேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.

புதிதாய் பூமியைப் பார்த்த போலார் கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அதிஷ்டவசமாக அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.


வட ஐரோப்பா, வட ஆசியா, மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. ஆர்டிக் சமுத்திரம் உறையவில்லை என்றாலும் தங்களின் கம்பளித் தோலின் உதவியால் அட்டகாசமாய் நீச்சலடிக்கும்.

வாலபீஸின் அதிசயப் பால்

வாலபீஸ் என்பது சிறிய வகை கங்காரு. இவை ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது ஒரு வகை டாமர் வாலபி. இது நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது. பென்சிலின் மருந்தைவிட சக்தி வாய்ந்தது.

டாமர் வாலபியின் பால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தது. இது கோல்டன் ஸ்டாப் மற்றும் சால்மோனிலா வைரசையும் அழிக்க வல்லது. மிகவும் பயங்கரமான நோயை கோல்டன் ஸ்டாப் வைரஸ் உருவாக்குகிறது. தோலில் கொப்பளம், நுரையீரல் வீக்கம், மூளைத் தண்டுவடம பாதித்தல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

வாலபி பிறக்கும் போது இதயம் இருக்கும். ஆனால், நுரையீரல் இருக்காது. இதன் சந்ததிகள் பலவீனமாகவே பிறக்கின்றன. ஆனால், தாய்ப்பால் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகின்றன. விஞ்ஞானிகளை குறைப்பிரசவக் குழந்தைகளை பாதுகாப்பதற்கான மருந்தை வலபிஸிடம் இருந்து தயாரிப்பதற்குப்முயன்று வருகின்றனர்.

உலகின் மிகப் பெரிய மீன் மார்கட்

 • உலகின் மிகப்பெரிய மீன் மார்கட் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2,500 டன் அளவுக்கு மீன்கள் விற்பனையாகின்றன.
 • உலகிலேயே மாபெரும் கப்பல் கட்டும் தளம் அமெரிக்காவில் நியுஆர்லியன்ஸ் என்ற இடத்தில் உள்ளது.
 • ஜப்பானியர்களின் கல்விக் கடவுளுக்கு டென்ஜின் என்று பெயர்.
 • ஆப்பிரிக்காவில் ஓடும் தஜீரா என்ற ஆறு கடலில் உற்பத்தியாகி ஏரியில் கலக்கின்றது.
 • ஒரு மின்னலில் உள்ள மின் சக்தியின் அளவு சுமார் 250 கோடிவோல்ட்.
 • இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த போது மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமராக பணியாற்றினார்.
 • வண்ணத்துப் பூச்சிகளுக்கான பிரத்தியோக மியூசியம் மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங் நகரில் உள்ளது.
 • ரோபோ என்பது சொக்கோஸ்லோவாகிய மொழிச்சொல் ஆகும்.
 • இந்தியாவில் விளையாட்டு உபகரணங்கள் அதிக அளவில் ஜலந்தர் நகரில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் தான் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

முதுகெலும்பு இல்லாத உயிரினம்

லகில் உள்ள உயிரினங்களில் முதுகெலும்பில்லாத உயிரினங்களே அதிகம் சுமார் 10 லட்சம் உயிரினங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்டவை முதுகெலும்பு இல்லாதவைகளாகும். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை பல பகுதிகளாக பகுத்துள்ளனர் அறிவியல் அறிஞர்கள். அவற்றுள் புரோட்டோசோவா ஒரே உயிரணுவால் இயங்கும் இனமாகும். மற்ற உயிரினங்கள் செய்யும் சுவாசித்தல்,உணவு உண்ணல், உணவை ஜீரணித்தல், எஞ்சும் கழிவுப் பொருட்களை வெளியயேற்றுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் ஓரணுவுக்குள்ளே செய்கின்றது. ஆனால், இந்த ஓரணு உயிரினங்கள் அளவில் மிக நுண்ணியவைகளாக இருப்பதால் அவற்றை மைக்ரோ ஸ்கோப் மூலமாகத் தான் பார்க்க முடியும். இவற்றில் சிலவற்றில் மேற்பகுதி சற்று கடினத் தன்மை கொண்ட ஓடுகளால் அமைந்தது. இந்த நுண்ணுயிரிகளின் இறந்த தொகுதியே கடலில் கிடைக்கும் சீமைச் சுண்ணாம்பு ஆகும். புரோட்டோசோவா உயிரினங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய் பிரிந்து தனித்தனி உயிர்களாய் பெருக்கமடைகின்றன. புரோட்டோசோவா உயிரினங்களில் 30 ஆயிரம் வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மற்றோரு வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி, ஜெல்லி மீன் போன்றவைகளாகும். நாடாப்புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப் புழுக்கள் எனும் வேறு வகையைச் சார்ந்தது. கொக்கிப் புழு, நாக்குப் புழு, நரம்பு சிலந்திப் புழு போன்றவை உருண்டைப் புழு என்ற மற்றோர் வகையைச் சார்ந்தததாகும். கிளிஞ்சல், நத்தை போன்றவை சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும்.

ஆக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இவ்வகையைச் சார்ந்தது. நட்சத்திரமீன், கடல் வெள்ளரி போன்ற கடல் வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளே. முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மிகப் பெரியவை கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு ஆகும். முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை அளிப்பவையும், தீமை அளிப்பவையும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்பவை. விசத்தன்மை கொண்ட பாம்புகள்,பூச்சிகள் ஏராளம் உள்ளன.

Monday, September 21, 2009

உலகத் தமிழ் மாநாடுஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு
என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

வரலாறு

1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.


முதல் மாநாடு

தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடாத்தப்பட்டது.

இரண்டாம் மாநாடு

1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.

மூன்றாவது மாநாடு

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 9170 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.

இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.

நான்காவது மாநாடு

1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது[1]. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

5வது முதல் 8வது மாநாடு வரை

முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது[2].

ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் இடம்பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் இடம்பெற்றன.

ஒன்பதாவது மாநாடு

எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள்ளது.