Monday, June 21, 2010

அறிவுக்கு சில

சீனாவில் 750 மீட்டர் நீளத்தில் ஒரு கண்ணாடி பாலம் உள்ளது. அதன் பெயர் சைதூஸ்.

பிரான்ஸ், மேற்கு ஜெர்மனியில் குழந்தைகளுக்கு நம் விருப்பம்போல் பெயர் வைக்க முடியாது. அரசங்கம் வெளியிடும் பெயர் பட்டியலில் இருந்துதான் ஒரு பெயரை தேர்ந்தேடுக்கவேண்டும்.

சாகும் வரை வளர்ந்துகொண்டே இருக்கும் ஒரே உயிரினம் முதலைதான்.

டெல்லியில் பறவைகளுக்கென்று ஒரு மருத்துவமனை இருக்கிறது.

சுத்தமான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. அதில் வேறு தாதுக்கள் கலந்திருந்தால் மின்சாரம் கடத்தப்படும்.

கரடி

  • ரடி நாய்க் குடும்பத்தைச் சேர்ந்தது. பழுப்புக்கரடி 9 அடி நீளமும் 780 கிலோ எடையும் கொண்டது. கரடி குளிர் காலத்தை தூங்கியே கழிக்கும். கரடிக்கு மோப்பசக்தி அதிகம்.
இரவில் கரடிகள் சுறுசுறுப்பாக செயல்படும். கரடி மரங்களில் தலைகீழாக ஏறும்.

கண்டுபிடித்தது

1774 ஆகஸ்ட் 1 - ந்தேதி: காற்றில் இருந்து ஆக்ஸிஜன் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது.

1844 ஜூன் 6: ஒய்.எம். சி.ஏ .சங்கம் லண்டனில் தொடங்கப்பட்டது.

1847 நவம்பர் - 4: குளோரோபார்ம் (சர் ஜேம்ஸ் சிம்சன்) கண்டுபிடிக்கப்பட்டது.

1876 பிப்ரவரி - 14: தொலைபேசி காப்புரிமை கோரி அலெக்சாண்டர் கிரகாம்பெல் விண்ணப்பித்தார்.

கண்டுபிடித்தவர்கள்

போனோகிராப் - எடிசன்.

டிரான்சிஸ்டர் - ஷீக்லே.

கேமிரா - லூமியர் சகோதரர்கள்.

பேசும் படம் - வார்னர் சகோதரர்கள்.

காண்டாக்ட் லென்ஸ் - டேவல்.

ஈ.சி.ஜி. இயந்திரம் - ஐந்தோலன்.

சுயசரிதைகள்

கிரிக்கட் வீரர் கபில்தேவின் சுயசரிதை - ”ஸ்ட்ரெயிட் பிரம் தி ஹார்ட்”

சதாம் உசேனின் சுயசரிதை - “மென் அண்ட் எ சிட்டி”

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் சுயசரிதை - “த்விகாந்திதா”

ஹிலாரி கிளிண்டனின் சுயசரிதை - “லிவிங் ஹிஸ்டரி”

சிதார் இசை மேதை ரவிசங்கரின் சுயசரிதை - “ராகமாலிகை”

எழுத்தாளர் கமலா தாஸின் சுயசரிதை - “மை ஸ்டோரி”

முன்னால் கிரிக்கட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் சுயசரிதை - ”கட்டிங் எட்ஜ்”

Sunday, June 20, 2010

போலீஸ் உருவானவிதம்

ரு நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க ராணுவம் உள்ளது. இதைப்போலவே உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீசர் உள்ளனர். ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார்.

இந்த முறை ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு இங்கலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 - ம் ஆண்டு டிசம்பர் 7 - ந்தேதி கிழக்கிந்திய கம்பனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

அந்த காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர். 1861 - ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன. அப்போது காவல்துறைக்கு சிவப்பு மற்றும் நீலநிற உடையும் சீருடையாக தரப்பட்டன.

இன்று இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் காவல்துறை தனித்தனியாக இயங்கிவருகிறது.

Saturday, June 19, 2010

கழுதையின் ‘கான ஆசை’ (நீதிக்கதை)

ழுதை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வெட்டுக்கிளி இனிமையாக ஒலி எழுப்புவதை கழுதை கேட்டது. அதன் பாடல் கழுதையின் மனதை மயக்கியது.

வெட்டுக்கிளியைப் போல தானும் படவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டது கழுதை. அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்றுவெட்டுக்கிளியிடம் கேட்டது” நாங்கள் பனித்துளியை பருகுகிறோம் அது தான் எங்கள் இனிமையான குரலுக்குக் காரணம்!” என்றது வெட்டுக்கிளி. அன்று முதல் புல்லில் உள்ள பனித்துளியையே பருகுவது என்று தீர்மானம் செய்தது கழுதை. கடைசியில் அது பட்டினியால் இறந்துபோனது.

நீதி: மற்றவர்களைப் பார்த்து ஆசைப்படுவது ஆபத்தானது.

விவசாயியும் நாரையும் (நீதிக்கதை)

விவசாயி ஒருவர் வயலில் விதை விதைக்கும்போதெல்லாம் கொக்குகள் வந்து விதைகளைக் கொத்திச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது. என்வே, அவர் வயலில் வலை விரித்தார். அதில் ஏராளமான கொக்குகள் சிக்கிக் கொண்டன. அவற்றில் ஒரு நாரையும் அடங்கும். வலையில் இருந்து தப்பிக்கக் கடுமையாக முயற்சித்த நாரைக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த விவசாயி, வலையில் சிக்கிய கொக்குகளைப் பிடித்தார்.

“ஐயா எஜமானரே . . . தயவு செய்து இரக்கம் காட்டுங்கள்.என்னை விட்டுவிடுங்கள் ‘ என்று அவரிடம் கெஞ்சியது நாரை.

விவசாயி அதை காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்க, தொடர்ந்து கெஞ்சியது நாரை.

“ஐயா. . . என்னை இந்த முறை மட்டும் விட்டு விடுங்கள். என்னுடைய உடைந்த காலைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் ஏற்படவில்லையா? நான் கொக்கு இல்லை, நாரை! எனது சிறகுகளைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும் .நான் நல்ல குணம் கொண்டவன். நான் எனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன், அவர்களுக்கு அக்கறையாகப் பணிவிடை செய்து வருகிறேன். நான் இல்லாமல் தவித்துப்போய் விடுவார்கள்!” என்று கண்ணீர் வடித்தது.

அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த விவசாயி, “நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் எனது நிலத்தில் திருட வந்த திருடர்களான இந்தக் கொக்குகளுடன் நீயும் சேர்ந்து வந்தாயல்லவா? நீ சகத்தான் வேண்டும்!” என்று கொக்குடன் நாரையும் எடுத்துச் சென்றார்.

நீதி: தீய கூட்டணி, தீமையையே ஏற்படுத்தும்.

முதல் செயற்கைக்கோள்கள்

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆர்யபட்டா.

ரஷியாவின்முதல் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக்.

அமெரிக்காவின் முதல் செயற்க்கைக்கோள் - எக்ஸ்புளோரர்.

சீனாவின் முதல் செயற்கைக்கோள் - ஸிஸோம் -1.

பிரான்சின் முதல் செயற்கைக்கோள் - ஏ - 1.

ஜப்பானின் முதல் செயற்கைக்கோள் - ஓசுமி.

பாலைவனத்தில் மறையும் ஆறு

லகெங்கிலும் ஆறு கடைசியில் கடலில் கலப்பது வழக்கம். ஆனால் அங்கோலா நாட்டில் உற்பத்தியாகும் “குபாங்கோ” என்ற ஆறு, 1590 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி கலகாரி பாலைவனத்தில் பாய்ந்து ஆவியாகிப் போகிறது.

வடிவமைப்பாளர்கள்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - சபர்ணா ராய் சவுத்ரி.
பழைய டெல்லியை வடிவமைத்தவர் - ஷாஜகான்.
புது டெல்லியைவடிவமைத்தவர் - எட்வின் லூட்தயன்ஸ்.
கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் - ஜாப் சார்நாக்.
சண்டிகரை வடிவமைத்தவர் - லேதகார் பூசியர்.
ஐதராபாத்தை வடிவமைத்தவர் - முகமது அலி குதுப்ஷா.

புயலும் நாடுகளும்

ண்மையில் தமிழகத்தை மிரட்டிஆந்திராவில் கரையைக் கடந்தது”லைலா” புயல். இந்தப் பெயரை அளித்தது பாகிஸ்தான். புயலுக்குப் பெயர் சூட்டும்வழக்கம் அமெரிக்காவில் 1953 ம் ஆண்டில் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2004 ம் ஆண்டில் இது அமலுக்கு வந்தது. சில புயல்களும் அவற்றுக்குப் பெயர் சூட்டிய நாடுகளும் ...

நர்கீஸ் - பாகிஸ்தான்
நிஷா - வங்கதேசம்
அய்லா - மாலத்தீவு
வார்டு - ஓமன்
காய்முக் - தாய்லாந்து
பிஜிலி - இந்தியா
பியான் - மியான்மர்

சிறப்புப் பெயர்கள்

கடல்களின் அரசி - பசிபிக் பெருங்கடல்

அரபிகடலின் அரசி - கொச்சி (கேரளா)

ஏட்ரியாட்டிக்சின் அரசி - வெனிஸ் (இத்தாலி)

மலை வாழிடங்களின் அரசி - ஊட்டி (தமிழ் நாடு)

டெக்கானின் அரசி - புனே (மராட்டியம்)

பால்டிக்கடலின் பேரரசி - ஸ்டாக்ஹோம்(சுவீடன்)

கடற்கரையின் அரசி - கோவா

சாத்பூர மலையின் அரசி - பஞ்ச்மடி

மலைகளின் இளவரசி - கொடைக்கானல்(தமிழ்நாடு)

உலகின் ஐந்தாவது உயரமான அணை

லகின் 5 - வது உயரமான அணை இந்தியாவில் உள்ள டெகிரி அணை ஆகும் .இது உத்ராஞ்சல் மாநிலம் டெகிரி நகரில் அமைந்துள்ளது. கங்கையின் கிளை நதியான பாகீரதி ஆற்றின் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 261 மீட்டர் (855அடி). இந்த அணை உலகின் உயரமான அணைகளில் 5 - வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகின் நான்கவது உயரமான அணை

த்தாலியில் உள்ள வாஜோண்ட் அணை உலகின் 4 - வது உயரமான அணையாக இருக்கிறது. இது 262 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற அணைகளைவிட இதற்குரிய சிறப்பு இதன் சுவர்தான். அடித்தளத்தில் 27 மீட்டர் அகலத்திலும், உச்சியில் 3.4 மீட்டராகவும் சுவரின் தடிமன் இருக்கிறது. 1963 - ம் ஆண்டு அணை வடிவமைப்பாளர்களின் கவனக்குறைவால் புவியியல் தன்மை சரிவர சோதிக்காமல் கட்டப்பட்டதால் அணையின் மேற்பகுதியின் ஒருபுரம் உடைப்பு எற்பட்டு பல கிராமங்கள் அடியோடு அழிவுக்கு உள்ளானது. அதன் பிறகு இந்த அணை மிக உறுதியாக எழுப்பப்பட்டது.

Thursday, June 17, 2010

உலகின் மூன்றாவது உயரமான அணை

உயரமான அணைகளில் 3 - வது இடத்தில் இன்குரி அணை இருக்கிறது. ஜார்ஜியா நாட்டின் இன்குரி ஆற்றில் இது கட்டப்பட்டு உள்ளது. இது 272 மீட்டர் உயரமுடையது. இந்த அணையில் உள்ள காங்ரீட் ஆர்ச் உலகில் உயரமான ஆர்ச் என்ற சிறப்பைப் பெறுகிறது. இங்கும் நீர்மின் நிலையம் செயல்படுகிறது.

உலகின் இரண்டாவது உயரமான அணை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ”கிராண்டி டிக்ஸ்யென்ஸ்”அணை உலகின் 2 வது உயரமான அணை என்ற சிறப்புக்குறியது. காங்ரீட் அதிகமாக பயன்படுத்தப்பட்ட அணையாகவும் இது திகழ்கிறது. இதன் உயரம் 285 மீட்டர். இங்கு நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுக்கு 200 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.

உலகின் உயரமான அணை

தஜிகிஸ்தானில்தான் உலகிலேயே மிக உயரமான அணை இருக்கிறது. வாக்ஸ் ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. “நூரக் டேம்” என்பது இதன் பெயராகும். இது 1961 - ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980 - ல் கட்டி முடிக்கப்பட்டது. 314 மீட்டர் உயரமுடைய இந்த அணைதான் இதுவரை உலகின் உயரமான அணையாக இருக்கிறது.

Tuesday, June 15, 2010

அளக்கும் கருவி

அட்மாஸ்கோப் - கதிரியக்கம் உள்ளதா எனக் கண்டுபிடிக்கும் கருவி.

அனிமோ மீட்டர் - காற்றின் அளவைக் குறிக்கும் கருவி.

ஓம் மீட்டர் - மின் தடையை அளக்கும் கருவி.

கிரவிடி மீட்டர் - எண்ணை வளம் காணும் கருவி.

பைரோ மீட்டர் - சூரிய வெப்ப நிலையைக் காட்டும் கருவி.

போர்டன் அளவி - வாயு அழுத்தத்தை அளக்க உதவும் கருவி.

மைக்ரோ மீட்டர் - கோணம் பார்க்க, மிகச்சிறிய தூரங்களை அளக்கும் கருவி.

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கப்பல்

போர்க் கப்பல்
யு.எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் என்ற அமெரிக்க போர்க்கப்பல்தான் உலகில் 5 - வது பெரிய கப்பலாகும். ஏவுதளங்கள் உள்ளிட்ட போர்திறனுக்கான பல்வேறு வசதிகளைக் கொண்டது. இதன் எஞ்ஜின் 2 லட்சத்து 60 ஆயிரம் குதிரைத்திறன் உடையது. 30 நாட்டிகல் வெகத்தில் செல்லும்.

உலகின் நான்காவது மிகப்பெரிய கப்பல்

பல கைகள் மாறிய கப்பல்
உலகின் 4 - வது பெரிய கப்பல் என்ற சிறப்பை பெறுவது “பெர்ஜ்ஸ்டால்” என்ற சரக்கு கப்பலாகும். இது 1986 - ம் ஆண்டு “கூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. வேறு வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய இந்தக் கப்பல் தற்போது பி.டபுள்யூ. குரூப் என்ற சிங்கப்பூர் நிறுவனம் வசம் இருக்கிறது.

உலகின் மூன்றாவது மிகப்பெரிய கப்பல்

உல்லாச கப்பல்
2006 - ல் தயாரிக்கப்பட்ட உல்லாசக் கப்பலான “ஓயாசிஸ்” கப்பல் தான் உலகின் 3 - வது மிகப் பெரிய கப்பலாகும். பயணிகளுக்கான இக்கப்பல் ராயல் கரிபியன் இண்டர்நேசனல் நிறுவனத்திற்காக பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. இது 360 மீட்டர் நீளம் கொண்டது. உலகில் அதிக செலவில் (சில நூறுகோடி ரூபாய்)உருவாக்கப்பட்ட கப்பலும் இதுதான்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல்

பெரிய சரக்கு கப்பல்
உலகில் இரண்டாவது பெரிய கப்பல் என்ற சிறப்பை பெறுவது “எம்மா மாயர்ஸ்க்” என்ற சரக்கு கப்பலாகும். இது டென்மார்க் நாட்டின் “ஓடென்ஸ் ஸ்டீல் சிப்யார்டுடேனிஸ்” நிறுவனத்தால் 2006 - ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது 20 அடி நீளமுள்ள 11 ஆயிரம் கண்டெய்னர்களை சுமந்து செல்லக்கூடியது. கப்பலின் பெரும்பாலான பகுதி தீப்பற்றாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

உலகின் மிகப்பெரிய கப்பல்

கடல்வழி ராட்சதன்

உலகின் மிகப்பெரிய கப்பல் “நாக்நேவிஸ்’ எனப்படும் எண்ணைக் கப்பல்தான். இது ஜப்பானயர்களின் சுறுசுறுப்பான உழைப்பில் 1975-ல் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. மலையே கடல் வழியாக நகர்ந்து வருவதுபோல தோன்றும் இந்த கப்பலுக்கு அதற்கேற்ப “கடல்வழி ராட்சதன்” (seawise giant) என்ற பெயரே முதன் முதலில்வழங்கப்பட்டது.ஏறத்தாழ அரை கிலோமீட்டர் (485 மீட்டர்)நீளம் கொண்டது இந்தக்கப்பல். இதன் உயரம் பெட்ரனாஸ்டுவின்ஸ் டவரின் உயரத்திற்குச்சமமானது. உலகின் பிரபலமான கால்வாய்களான பனாமா, சுவிஸ், இங்கிலீஷ் கால்வாய் ஆகியவற்றின் வழியாக நுழைய முடியாத அளவுக்கு இந்தக் கப்பல் மிகப்பிரம்மாண்டமானது. இது 564.763 டன் எடை கொண்டது. ஒரே நேரத்தில் 41 லட்சம் பேரல்களை கொண்டு செல்லும் திறனுடையது.

டால்பின் சிகிச்சை

ஆஸ்திரேலியாவில் உள்ள மியாமி கடற்கரையில் டால்பின்களை அதிகம் காணலாம். அவைகள் எழுப்பும் விசில் போன்ற ஒருவித ஒலி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை குணப்படுத்துவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமானவர்கள் இந்த கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.

தோல்வியில் வளர்ந்தவர்

அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர். அதற்க்குமுன் அவர் சந்தித்த தோல்விகளும் கொஞ்சமல்ல. முதலில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்து முன்னேறிய அவர் சந்தித்த சில தோல்விகள்...

22 -வயதில் வியாபாரத்தில் தோல்வி,

23 - வயதில் சட்டசபை தேர்தலில் தோல்வி,

24 - வயதில் மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி,

25 - வயதில் சட்டசபையில் தோல்வி,

26 - வயதில் மனைவி மரணம்,

27 - வயதில் நரம்புத்தளர்ச்சி நோய்,

29 -வயதில் சபாநாயகர் தேர்தலில் தோல்வி,

31 - வயதில் சட்டசபையில் தோல்வி,

34 - வயதில் சட்டசபை தேர்தலில் தோல்வி,

37 - வயதில் சட்டசபைக்குத் தேர்வு,

39 - வயதில் மீண்டும் சட்டசபை தேர்தலில் தோல்வி,

46 - வயதில் மேல்சபை தேர்தலில் தோல்வி,

47 - வயதில் துணைஜனாதிபதி தேர்தலில் தோல்வி,

49 - வயதில் மேல்சபை தேர்தலில் தேர்வு,

51 - வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு.
தோல்விக்குள்ளும் வெற்றியின் விதை ஒளிந்திருக்கும் என்பதற்கு இவரது வாழ்வே சட்சி.

Monday, June 14, 2010

செயற்கை “கண்”

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண். இதிலுள்ள “கார்னியா” எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின்போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோர்ஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள்மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவத்தில் நீண்ட காலத்திற்கு செயலாற்றக்கூடியது.
முதலில் பல்வேறு வகையான சிறப்பு பாலிமார்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத்தூண்டி, பார்வையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3 ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.