Tuesday, February 7, 2012

மருந்தாகும் ’மா’ விதை

முக்கனிகளில் ஒன்று மா. உலகில் அதிக அளவில் உற்பத்தி ஆகும் கனிகளில் மாங்கனி 5வது இடத்தைப் பெற்றுள்ளது. நாம் மாங்கனிகளை சுவைத்துவிட்டு கொட்டைகளை வீசி எறிந்து விடுகிறோம். ஆனால் மாங்கொட்டைகளில் மருத்துவ குணம் இருப்பதாக கனடா நட்டில் கண்டுபிடித்து உள்ளனர்.

உணவுப் பண்டங்களை கெட்டுப்போகச்செய்யும் பாக்டீரியா இனம் லிஸ்டீரியா.இதனால் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர்.மாங்கொட்டையில் உள்ள ஒரு ரசாயனம் இந்த பாக்டீரியாக்களை எதிர்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது.இதனால் லிஸ்டீரியாசிஸ் வியாதியை தடுக்கலாம்.

மேலும் பாக்டீரியா நுண்நுயிரிகளால் எற்படும் பல்வேறு வியாதிகளுக்கு இதை மருந்தாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.இது போல மற்ற கனிகளின் விதையிலும் இந்த ரசாயனம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment