செம்பருத்திப் பூவைப் பார்
சிவந்திருக்கும் அழகைப் பார்!
கொம்பினிலெ சிறிக்கும் பார்
குலுங்கி நம்மை அழைக்கும் பார்!
தோட்டத்திலெ பூக்கும்பார்
தும்பிகளை ஈர்க்கும் பார்!
நீட்டமான காம்பைப் பார்
நிறைய நிறைய இலையைப் பார்!
புனலைப் போல வடிவம் பார்
பூவின் நடுவில் தண்டு பார்!
இனிமையான தேனைப் பார்
இதுவும் மருந்துதான் கேட்டுப் பார்!
Showing posts with label chilrans songs. Show all posts
Showing posts with label chilrans songs. Show all posts
Friday, September 4, 2009
Wednesday, August 5, 2009
சிறுவர் பாடல் -ரெயில் வண்டி
சிக்கு புக்கு ரெயில்வண்டி
சீமைக்குச் செல்லும் ரெயில் வண்டி'
அக்கம் பக்கமுள்ள ஊர்களையெல்லாம்
அறிந்திடச் செய்யும் ரெயில் வண்டி'
சாதி மதமில்லா காந்திய வண்டி
சகலரும் ஏறிடச் சமத்துவ வண்டி'
ஆதியும் புதுமையும் உறவுடன் பழகிட
அன்பைக் கூட்டிடும் ரெயில்வண்டி'
”குப் குப்” என்பதே இதன் உயிர் மூச்சு
”கப் சிப்” இதனது அமைதி வழி'
எப்போதும் தூரப் பயணத்திற்கே
இன்பமாய் இருந்திடும் ரெயில் வண்டி'
சீமைக்குச் செல்லும் ரெயில் வண்டி'
அக்கம் பக்கமுள்ள ஊர்களையெல்லாம்
அறிந்திடச் செய்யும் ரெயில் வண்டி'
சாதி மதமில்லா காந்திய வண்டி
சகலரும் ஏறிடச் சமத்துவ வண்டி'
ஆதியும் புதுமையும் உறவுடன் பழகிட
அன்பைக் கூட்டிடும் ரெயில்வண்டி'
”குப் குப்” என்பதே இதன் உயிர் மூச்சு
”கப் சிப்” இதனது அமைதி வழி'
எப்போதும் தூரப் பயணத்திற்கே
இன்பமாய் இருந்திடும் ரெயில் வண்டி'
Subscribe to:
Comments (Atom)