Tuesday, August 4, 2009

விலங்கியல் பற்றிய செய்திகள்

விலங்கியல் மக்களுக்கு என்ன தந்தது?

ஆதிகாலத்தில் மனிதன் பெரிய பெரிய விலங்குகளைக் கண்டு பயந்த அளவிற்கு சிறிய உயிரிகளைக் கண்டுகொள்ளவில்லை. நோய்களை தூண்டும் இம்மாதிரியான உயிர்கள் இருப்பதை அவன் அறியாத காரணத்தால் பல நோய்களுக்கு அவன் காரணம் அறியாமலே பலியாகிக்கொண்டு இருந்தான்.

குருதி உறிஞ்சும் பலவகை சிறு பூச்சிகள் மலேரியா, காலரா, ப்ளேக், டைபாயிடு போன்ற பேராபத்தை விளைவிக்கும் என்பதை நிரூபிக்க எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையயை அர்ப்பணித்து மனித குலத்திற்கு உதவி இருக்கிறார்கள்

தொண்மை வாய்ந்த நாகரீக நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பேரரசன் அசோகன் கி.மு இருனூற்று நாற்பத்து இரண்டிலேயே மீன் பிடிப்பு, வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் முதலியவற்றை ஒழுங்குபடுத்த சட்டங்கள் இயற்றினான்.

அதே சமயம்
பண்டைய கிரேக்க நாட்டில் ஜூவாலஜி என்ற பெயரில் விலங்கியல் பற்றிய படிப்பு தொடங்கியது. ஜூவாலஜி என்பதன் பொருள் விலங்குகள் பற்றிய சொல் என்பதாகும். விலங்கியலின் தந்தை என்று அழைக்கபடுபவர் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் ஆவர். அவர் கி.மு.384 முதல் 322 வரை வாழ்ந்திருநதார்.
அவர் விலங்குகள் பற்றி மக்கள்ளிடையே தெரிந்த தகவல்களை தொகுத்தார்.454 விலங்கினங்களின் வாழ்க்கை முறையையும் தொகுத்தார். பண்டைய அறிஞர்கள் தெரிந்து வைத்த விலங்குகள் பற்றிய தகவல்கள் அடுத்த தலைமுறைக்கு கல்லிலும் வரைதோலிலும் பொறிக்கபட்டன. பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தன.அன்றைய மக்கள் கல்வி இல்லாமல் வாழ்ந்தனர்.அதே காலத்தில் விலங்கியலின் வளர்ச்சி தடைபட்ட்து.விஞ்ஞான ஆராய்ச்சி ஆண்டவனுக்கு எதிரானது என்று கருதப்பட்டது.இயற்கையை ஆராய்வது குற்றமாக கருதப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி செய்பவர்கள் மத விரோதிகள் என்று கூறி சிறையில் அடைக்கவும், எரிக்கவும் செய்தனர். கிருத்துவ மத விசாரனை அதிகாரி தொர்க்விமாடொ என்பவன் கொடும் பாதகன் என்று பெயர் பெற்றான். மத விரொதிகள் எனக் கருதப்பட்ட 10,000 பேரையும் அவர்களுடைய குழந்தைகளையும் தீக்கிரையாக்கினான்.

இந்த கொடுமையால் மக்கள் பயந்தனர். அதனால் மக்கள் விஞ்ஞான வளர்ச்சியை நிறுத்திவிட்டனர். இடைகாலத்தில் கதைகளில் வரும் மரத்தில் வளரும் வாத்துக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், பாதிக்குதிரையும் பாதிமனிதனும், நாய்த்தலை மனிதர்கள பறறியும் கற்பனை கதைகள் நிறைய இருந்தன.
அப்படி இருநத போதிலும் அறிவியலைத் தேடி மக்கள் ஆய்வு செய்வதில் முன்னெறினர். இயற்கையை ஆராயவும் விலங்குகளை அறியவும் மக்கள் உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தை எந்த சிறைச்சாலைகளாலும்,
தண்டனைகளாலும் கட்டுப்படுத்தமுடியவில்லை.

No comments:

Post a Comment