Tuesday, August 4, 2009

நவீன விலங்கியலின் தோற்றம்

கி.பி.14-15 ஆம் நூற்றாண்டுகள் விஞ்ஞான வளர்ச்சியின் மையம் மேற்கு ஐரோப்பாவிற்க்கு மாறியது. கடற்பயனிகள் முன்பு காணாத விலங்குகளை ஐரோப்பவிற்க்கு கொண்டு வரத் தொடங்கினர். வாழ்க்கைத் தேவைகளை மனிதர்கள் மீன் பிடித்தும், கடல்விலங்குகளையும், யானைகளையும், பிற விலங்குகளையும் வேட்டையாடுவதற்க்கு புதிய இடங்களை தேடிக் காண்பது அவசியமாயிற்று. காலத்தின் தேவைக்கு ஏற்ப இயற்க்கை ஆராய்ச்சி மீது இருந்த தடைகளை மதம் நீக்கியது. விஞ்ஞான அறிவு வளர்ச்சி அடைந்தது. 19ஆம் நூற்றாண்டில் 1707- 1778 உலகில் இருந்த விலங்கியல் அறிஞர்கள் சுவீடன் நாட்டின் பிரபல விஞ்ஞானி கார்ல் லின்னேயஸ் என்பவரை பின்பற்றி விலங்குகளை ஆராய்ந்து அவற்றைக் குழுக்களாக வகைபடுத்துவதே விலங்கியலின் முக்கிய கடமை எனக் கருதிவந்தார்கள். விலங்கியலில் உண்மையான அடிப்படை மாற்றம் ஏற்படுத்தியவர் மாபெரும் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1809-1882 ஆவார். ”இனங்களின் தோற்றம்” எனும் அவரது முதன்மையான நூல் 1859-ல் வெளியாயிற்று. அரிஸ்டாட்டில் விலங்குகளில் 454 இனங்களையே அறிந்திருந்தார். இப்போது ஏறத்தாழ 15 லட்சம் இனங்களுக்கு மேல் அறியப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் வாழும் விலங்குகளின் தகவல்கள் மட்டுமே ''சோவியத் யூனியனின்விலங்கினங்கள்'' எனும் பல தொகுதிகள் கொண்ட பெரிய நூலாக உருவாகியுள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற அறிவியல் நூல் இயற்றப்படவில்லை.

No comments:

Post a Comment