Monday, October 12, 2009

அரியலூரில் 61\2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள்


அரியலூர் பகுதியில் சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசரின் முட்டைப் படிவங்கள், முட்டையிட்ட இடங்கள், எலும்புத் துண்டுகள், அவை வாழ்ந்த காலத்தில் இருந்த நன்னீர் ஏரி, ஆற்றுப் பாதை ஆகியவற்றை முதன் முறையாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.




அரியலூரில் கிடைத்துள்ள டைனோசர் முட்டைகள் அனைத்தும் 61/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது. மிகவும் கொடூர குணமுடைய `கார்னோசர்' வகை டைனோசர் மற்றும் இலை, தழைகளை சாப்பிடும் `சவுரோப்போட்' வகை டைனோசர் ஆகியவற்றின் முட்டையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

`சவுரோப்போட்' வகையை சேர்ந்த டைனோசர்கள், ராட்சத உருவமாக வளரும் தன்மை கொண்டவை என்பதும் நீண்ட கழுத்துடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைனோசர் முட்டைகளில் சிவப்பு நிற தூசி மற்றும் சாம்பல்கள் காணப்படுகின்றன. எனவே, எரிமலை வெடித்து சிதறும்போது வெளியேறிய நெருப்பு குழம்பில் டைனோசர் முட்டைகள் உருட்டி வரப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தக்காண பீடபூமியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாகவே இங்கிருந்த டைனோசர்கள் அழிந்தன என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. எரிமலைக் குழம்புகள் உருகி ஓடியதற்கான தடயங்களும் இங்குள்ளன என்றார்.
டைனோசர் படிமங்கள் இவ்வளவு அதிகளவில் கிடைப்பது அகில இந்திய அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து சுமார் 60 முட்டைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment