Friday, October 2, 2009

முதல் உலகப் போரின் இறுதி நாள்

இங்கிலாந்து நாடு முழுவதும் தொழில்புரட்சி எற்பட்டுக் கொண்டிருந்த நேரம். தொழில்புரட்சி மெல்ல, மெல்ல மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. ஆனால் பொருட்களின் உற்பத்தி பெருக்கத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த மூலப்பொருட்களின் பற்றாக்குறையை ஈடு செய்ய பின் தங்கிய நாடுகளான ஆப்பிரிக்க நாடுகளை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதில் போட்டிகள் ஏற்பட்டன.


ராணுவ விரிவையும், யுத்த தளவாடங்களையும் ஜெர்மனி முந்திக்கொண்டு செய்தது.இதனால் இங்கிலாந்தும், பிரான்சும் கலக்கம் அடைந்தன. இந்த நேரத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு உடன் படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன. இதைப் பார்த்து மேலும் பயம் கொண்ட எதிர் நாடுகள் இரண்டும் தற்காப்புக்காக ஒரு உடன் படிக்கையை செய்து கொண்டன. இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் நேச நாடுகள் என்றும், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய முன்று நாடுகளும் மையநாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இரு தரப்பாக இந்த நாடுகளுக்கிடையே போர் மூண்டது. 1916 - ம் ஆண்டு வரை எந்த தரப்பினருக்கும் பயன் இல்லாமல் போர் நடந்துகொண்டிருந்தது. போரின் இறுதி நாளான 11.11.1918 - ம் ஆண்டு ஜெர்மனிய படைத் தளபதி சரண் அடைந்தார். இந்தப் போரில் நேசநாடுகள் வெற்றி பெற்றன.

இதன் பின்னர் 1919 - ல் பாரிஸ் வெர்செயில்ஸ் அரண்மனையில் 75 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட 440விதிகள், 200 பக்கங்கள் அடங்கிய உடன்படிக்கையில் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் எச். முல்லார் என்பவரும், டாக்டர் பால் என்பவரும் கையேழுத்திட்டனர். இதன் மூலம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி ஜெர்மனி தனது நிலப்பரப்பில் 13 சதவிகிதத்தை இழந்தது.

1 comment: