கடல் வாழ் தாவரங்களைத் திண்பதாலும், அமைதியாய் மூர்க்க குணமற்று இருப்பதாலும் இவைகளை கடல் பசுக்கள் என்று அழைக்கிறார்கள். மீனவர்கள் ஆவுளியா என்று சொல்வார்கள். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதால் சந்தையில் கிராக்கி அதிகம். இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முரிவு மருந்து தயாரிக்கின்றனர். தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது.
மேனிட்டி
கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் கழிமுகம் வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு என்று கூட சொல்லலாம். கடல் பாசிகளையும், ஆறுகளில் உள்ள நீர் தவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து மேனிட்டிகள் ஒரு பெரியஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம்.மேனிட்டிகள் இறைச்சிக்காகவும்,தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. மேனிட்டியின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் டை 60 பவுண்ட். அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment