முட்டை அமைப்பு மிகவும் சிக்கலானது. ஆனால் சீரானது. கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் முட்டை உருவாகிறது. கோழிக்கு இடதுபுறத்தில் ஒரே ஒரு கருப்பையே உள்ளது. சில நாட்டுப் பறவைகளுக்கு இரு கருப்பைகளும் முட்டைக் குழாய்களும் இருப்பதுண்டு. கோழியில் கருப்பை திராட்சை பழக் கொத்தை போல இருக்கும். ஒரு கோழி தனது ஆயுளில் எட்டு வருட காலத்தில் சுமார் 1515 முட்டைகளை இடுவதாக கூறப்படுகிறது.
ஒரு கோழியின் முட்டை உற்பத்தியாகும் நடைமுறை இரண்டே முக்கால் மாணி நேரத்தில் பூர்த்தியாகிறது. கோழி முட்டையிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளாக மற்றோர் மஞ்சள் கரு முழுமையாக முற்றி விடுகிறது. அப்போது, அதில் 6 அடுக்குகள் அடங்கியிருக்கும்.
மஞ்சள் கரு முழுமையாக முதிர்ச்சி அடைந்ததும் முட்டைக் குழாய்க்குள் விழுந்து விடுகிறது. முட்டைக் குழாயில் பல பிரிவுகள் உள்ளன. முதிர்ச்சியடைந்த மஞ்சள் கரு முதல் பிரிவில் வளர்த்தப்படுகிறது. இந்தப் பிரிவில் முட்டை சிலநிமிடங்களே தங்குகிறது. பிறகு அடுத்த பிரிவிற்கு செல்கிறது. அங்கு வெளிப்புறத்தில் ஒன்றும் உட்புறத்தில் ஒன்றுமாக இரண்டு மெல்லிய தோல்கள் அல்லது சவ்வுகள் கருப்புறத்தை ஓடாக்குவதற்காக உறைகளைப் போல சேர்க்கப்படுகின்றன. இந்த நடை முறை முடிவதற்கு 1 மணி 10 நிமிடம் ஆகிறது. பிறகு முட்டை கருப்பை அமைந்திருக்கும் சுரபிக்குச் செல்கிறது. அங்கு 19 மணி நேரம் தங்குகிறது. அடுத்த 14 மணிநேரத்தில் முட்டை ஓட்டின் பல அடுக்குகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர் முட்டைக்கு மெல்லிய தோல் வழங்கப்படுகிறது. இந்தத் தோல் தான் முட்டைக்கு உரிய நிறத்தை தருகிறது. இப்படியாக கோழியின் வயிற்றில் முட்டையின் வளர்ச்சி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment