Wednesday, October 21, 2009

நில நடுக்கம்

நில நடுக்கம், பூகம்பம் என்பது பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நடுக்கம் அல்லது அதிர்வைக் குறிக்கும். சில சமயங்களில் பூமியின் அடித்தளத்தில் லேசாக ஏற்படும் பல பூகம்பங்கள் வெளியே தெரியாமலேயே போவதும் உண்டு. தீவிரமான பூகம்பத்தால் தான் பூமியின் மேற்பரப்பு பிளந்து கட்டிடங்கள் விழுந்து நொறுங்குகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போகிறார்கள்.

பூமியின் மேல் பகுதியில் சிறியதும், பெரியதுமாக பல பாறைகள் இருக்கின்றன. பூமிக்குள் இருக்கும் அழுத்தம் எல்லாப்பகுதிகளிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. அதனால் நிலத்தினுள் கொந்தளிப்பு ஏற்படுகிறது. இதனால் பறைகள் உருக்குலைந்து போகின்றன. அளவுக்கு மீறிய அழுத்தம் பாறைகளில் ஏற்படும் போது பாறை அடுக்குகளில் திடீரென விரிசல்கள் ஏற்படுகின்றன. பாறைகள் உடைந்து மேலும், கீழும் போகின்றன. பூமிக்கு அடியில் பாறைகளில் ஏற்படும் இந்தமாதிரியான அசைவுகளால் பூமியின் மேற்பரப்பில் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சியால் உண்டாகும் அதிர்வு அலைகள் நிலத்தின் மேற்பரப்பில் பரவுகிறது. அதிர்வு அலைகள் பயணம் செய்யும் இடங்கள் நில நடுக்கத்தினால் பாதிக்கப்படுகின்றன. கட்டிடங்கள் விழுகின்றன. உயிர்கள் மடிகின்றன.

நிலநடுக்கம் தொடங்கும் இடத்தை நிலநடுக்க முனை என்று குறிப்பிடுகிறார்கள். சில இடங்களில் தொடர்ந்து நிரந்திரமாக பூகம்பம் வந்துகொண்டே இருக்கும். ஜப்பானில் மிக அதிகமாக நிலநடுக்கங்கள் உண்டாகின்றன. ஜப்பான் நாட்டின் நில அமைப்பு ஏற்றதாழ்வுகள் நிறைந்ததாகும். எனவே பூகம்பங்கள் அங்கு அதிகம். நிலநடுக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சீஸ்மோ-கிராப் என்ற கருவி பயன்படுகிறது. உலகின் பல பகுதியில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. இவை நில நடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.

No comments:

Post a Comment