சுறாக்களில் பல வகை உண்டு. வெள்ளை சுறா தான் மிகவும் பயங்கரமானது, மனிதனையும் தின்பது. திமிங்கலச் சுறாதான் சுறாமீன் இனத்தில் பெரியது. அதிகபட்ச நீளம் 60 அடி. சுத்தித்தலை சுறாவும் கொடுமையான வகையைச் சார்ந்தது தான். சுறாக்களில் மந்தமான சுறாக்களும் உண்டு. இரையை வேட்டையாடுவதில் சுறாவுக்கு வழிமையான தாடையும், கூர்மையான பற்களும் உள்ளன. பொதுவாக, சுறா இறந்த பிராணிகளை தின்று விடும். எனவே, சுறாவை நீந்தும் தோட்டி என்பர்.
200 பவுண்ட் எடையுள்ள ஆமையைக்கூட ஒரு சுறாமீன் தின்றுவிடும். சுவாச உறுப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு அது எப்போதும் வளைந்து வளைந்து சுழலும். மனிதனைத் தின்னும் சுறாமீன் கரையோரங்களுக்கு இரையைத் தேடி வருவதுண்டு. ஆட்களை இழுத்துக் கொண்டு உடனே கடலுக்குள் திரும்பிவிடும்.
ஆழ்கடலில் உணவுத் தட்டுப்பாடு சில சமயம் மீன்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை எதிர்கொள்ள பல மீன்கள் தனிச் சிறப்பான ஏற்பாடுகளை பெற்றுள்ளன. பெருந்தீனி விழுங்கிகள் (கியாஸ்மோடஸ்நிகர்) என்று ஒரு வகை மீன்கள் உண்டு. இவற்றின் வாய்களின் அளவைப் போன்று மும்மடங்கு பெரிய அளவுள்ள பிற உயிர்களை விழுங்குவதற்கு ஏற்ப அவற்றின் வயிறு நெகிழ்ந்து கொடுத்து விரிவடையும். இம்மீன்களின் வளைவான பிச்சுவாக்கத்தி போன்ற பற்கள் பிடித்த இரையை தப்பி விடாதவாறு பாதுகாக்கின்றன.
No comments:
Post a Comment