கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்ற கேள்வி மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இந்தக் கேள்வி பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டில் கடலுக்கு அடியில் சுவரஸ்யமான பல விசயங்கள் இருப்பதாக கூறினார். அவருடைய சிஸ்யர் அலக்சாண்டர் கூட கண்ணாடி பலூன் மாதிரிஒன்றை செய்து அதற்குள் உக்கார்ந்து கொண்டு கடலுக்குள் கொஞ்சதூரம் போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். கரையில் இருந்து கடலுக்குள் ஒரிருமைல் வரை இருக்கும் பகுதியை கண்டங்களின் நிஜ எல்லை என்கிறார்கள். இதன் சராசரி ஆழம் 600 அடி. இதற்கு அப்பால் தான் நிஜக்கடல் ஆரம்பமாகிறது. ’காண்டினேண்டல் ஷெல்ப்’ என்று சொல்லக் கூடிய கண்டங்களின் எல்லையில் இருப்பது வெரும் 3 சதவீதம் கடல் தான். இதற்கப்புறம் தான் மீதி 97 சதவீத கடல் இருக்கிறது. இங்கு ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்த பகுதியை ‘அபீஸ்’ என்று அலைக்கிறார்கள். இதன் உள்ளே தான் பிரம்மாண்டமான சமவெளிப் பிரதேசம், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுளிகள் , மலைத் தொடர்கள் இருக்கின்றன.
கடலுக்கடியில் சூரிய ஒளிகூட 100 அடி வரைதான் பாயும். அதற்கு கீழே போகப்போக ஒளி மங்கிக் கொண்டே இருக்கும். ஆயிரம் அடிக்கு மேல் கும்மிருட்டு அரம்பமாய்விடும். இதில் ஆய்வு செய்வது சாதாரண விஷயமில்லை. இருந்தாலும் ஆய்வுகளுக்கு பஞ்சமில்லை. எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் மூச்சை மட்டும் அடக்கிக் கொண்டு கடலுக்கு அடியில் 285 அடி ஆழம் வரை போய் வந்திருக்கிறார் ஒருவர்.
சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த பிக்கார்ட் என்பவர் நீர்முழ்கி படகு ஒன்றை தயாரித்தார். டிரையஸ்ட் என்ற அந்தப் படகில் உக்கார்ந்து செங்குத்தாக கடலுக்குள் இறங்கினார். ஐந்து மாணி நேரம் கழித்து தரையை தொட்டுவிட்டார். பசிபிக் கடலில் அவர் இறங்கிய இடம் மெரியானா ட்ரெஞ்ச். இதன் ஆழம் சுமார் ஆறேமுக்கால் மைல். 35 ஆயிரத்து 808 அடி. ஆனால் மலைச்சிகரமான எவரஸ்ட் 29 ஆயிரத்து 28 அடிதான். கடலில் மிக ஆழமான இந்த பகுதியில் இவ்வளவு ஆழத்தில் பிக்கார்ட் சுமார் 20 நிமிடம் இருந்தார். இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடலின் ஆழத்தில் மிக மிக ஆழமான இடம் இதுவே.
No comments:
Post a Comment