Sunday, October 11, 2009

பாலக்னுமா அரண்மனை!

இந்திய கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் பல அரண்மனைகள் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று, ஐதராபாத்தை ஆண்ட நிஜாம்களின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்த பாலக்னுமா அரண்மனை.

19 - ம் நூற்றாண்டில் ஐதராபாத்தின் பிரதம அமைச்சராக இருந்த நவாப் விகார் உல் உல்மாராவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ஆறாவது நிஜாமால் அவரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டது.
பாலக்னுமா அரண்மனை இத்தாலிய மற்றும் ‘டுடார்’ கட்டிட வடிவமைப்பு பாணியில் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடம் ஒரு தேள் வடிவில் உள்ளது. அதன் இரு பக்கவாட்டுக் கொடுக்குகளைப் போல இரு புறமும் கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. ’வால்’ பகுதியில் சமயலறை அமைந்துள்ளது.
அந்தக் கட்டிடத்தில் அதிகமாகக் கவர்பவை நிஜாம்கள் சேகரித்த விலையுயர்ந்த நகைகள், ஓவியங்கள், சிலைகள், மரப்பொருள்கள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் போன்றவை ஆகும்.
அந்த அரண்மனையில், மிகச் சிறப்பாக உள் அழங்காரம் செய்யப்பட்ட 220 அறைகள், மேற் கூரைகள், வண்ண ஜன்னல் கண்ணாடிகள், பளிங்கு படிக்கட்டுகள், அலங்கார நீருற்றுகள், 138 அலங்கார சாரவிளக்குகள்,ஒரே நேரத்தில் 100பேர் சாப்பிடக் கூடிய சாப்பாட்டு மேஜை, தங்கப்பாத்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்கின்றன.அந்த கால நிஜாம்களின் ஆடம்பர வாழ்க்கை முறையையும் காட்டுகின்றன.

No comments:

Post a Comment