நிலச் சரிவு என்பது மண், பாறைகள் போன்றவை நிலையற்ற மலை உச்சிகளில் இருந்து கீழ்நோக்கிச் சரியும் நிகழ்வாகும். இதற்கு முக்கியக் காரணம் புவியீர்ப்பு விசைதான். நில நடுக்கம், எரிமலை சீற்றம், மண் அரிப்பு, கடுமையான மழை தவிர, கட்டுமானம், காடுகள் அழிப்பு போன்ற இயற்கைக்கு எதிரான மனித செயல்பாடுகளாலும் நிலச் சரிவுகள் ஏற்படுகின்றன. திடீரென ஏற்படும் நிலச்சரிவுகளால் உயிருக்கும், உடைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்ப்படுகிறது.
1998 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்திரபிரதேச மாநிலப் பகுதியில் கடும் மழை காரணமாக பெரும் நிலச் சரிவு ஏற்பட்டது. அதில் ‘மால்பா’ என்ற கிராமம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. அதில் இறந்த 205 பேரில் கிராமத்தினரும், மானசரோவருக்குச் சென்ற புனித யாத்ரீகர்களும்,புகழ் பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான புரோத்திமா பெடியும் அடங்குவர்.
No comments:
Post a Comment