Sunday, October 11, 2009

வானியல் அறிஞர் கார்ல் சாகன்

கார்ல் சாகன் அமெரிக்க வானியல் அறிஞர். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளரும் கூட. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’வின் ஆலோசகராகவும் இவர் இருக்கிறார். சில விண்வெளிப் புதிர்களை விடுவிப்பதில் சாகன் உதவியுள்ளார். 1960 - க்கு முன்புவரை, புதன் கிரகத்தின் காலநிலை பூமியைப் போலவே இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்பினர். புதன் கிரகத்தின் நில வெப்பநிலை 500 டிகிரி செல்சியஸ் (932 பாரன்ஹீட்) என்று சகன் கண்டுபிடித்தார். அதன் காலநிலை மிகவும் வறட்சியானது என்று சாகன் அறிவித்தார். ஒருவித பசுமைக்கூட விளைவால் தான் புதன் கிரகத்தில் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது என்று அவர் விளக்கினார்.

சனி கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஒரு சிவப்பு நிறப் படலம் காணப்படுகிறது. கூட்டு ‘ஆர்கானிக்’ மூலக்கூறுகள் டைட்டனில் தொடர்சியாக மழையாகப் பொழிந்து அந்த சிவப்புநிறப் படலத்தை உருவாக்குகின்றன என சாகன் கண்டுபிடித்தார். செவ்வாயின் நிலப்பரப்பில் உருவாகும் பகுதி பருவ மாற்றங்கள் அங்கு காற்றுவீச்சின் தூசிகளால் ஏற்படுகின்றன என்றும் சாகன் தெரிவித்தார். வேற்றுகிரகங்களின் உயிர்கள் உண்டா என்ற தீவிரமான ஆராய்ச்சியிலும் சாகன் ஈடுபட்டார்.

மிக அதிகமான விற்பனையான பல புத்தகங்களை கார்ல் சாகன் எழுதியுள்ளார். அவற்றில் இவர் இணைந்து எழுதிய, ‘விண்வெளி: ஒரு தனிப்பட்ட பயணம்’ என்ற நூலும் அடக்கம். அது தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட போது பிரசித்தி பெற்ற ‘எம்மி விருதை’ப் பெற்றது. சாகன் எழுதிய ‘கண்டாக்ட்’ என்ற நாவலை ராபர்ட் ஜெமிக்ஸ் 1997 - ல் படமாக உருவாக்கினார். மனித அறிவுத்திறனின் பரிணாமம் எப்படி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் அடிப்படையில் சாகன் 1978 - ல் ‘ஏடனின் டிராகன்கள்’ என்ற தனது நூலுக்காக புகழ்பெற்ற ‘புலிட்சர் விருதை’ கார்ல் சாகன் பெற்றார். தனது படைப்புகளுக்காக பல்வேறு கவுரவங்கள், விருதுகளை கார்ல் சாகன் பெற்றார்.

No comments:

Post a Comment