Monday, October 12, 2009

அழியும் நிலையில் உள்ள விலங்குகள்

உலகில் அழியும் நிலயில் உள்ள சில வித்தியாசமான விலங்குகள் மீது கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறது ’லண்டன் விலங்கியல் கழகம்’. இலங்கையில் காணப்படும் மிகவும் ஒல்லியான, சிறிய ’லோரிஸ்’ முதல் கோபி பாலைவனப் பகுதியில் காண்ப்படும் இரட்டைத் திமில் ஒட்டகங்கள் வரை அவற்றில் அடங்கும். அவை போன்ற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கு என்றே ‘பரிணாம அடிப்படையில் தனித்தன்மை வாய்ந்த மற்றும் உலக அளவில் அருகிவரும் விலங்குகள் பாதுகாப்புத் திட்டத்தை’ உருவாக்கியிருக்கிறார்கள்.

அழிந்து வரும் வேறு சில விலங்குகள், ஜனப்புழக்கம் நிறைந்த சேறும் சகதியுமான சீனாவின் யாங்ஸி நதியில் காணப்படும் டால்பின், கரீபியத் தீவில் காணப்படும் எலி அளவு விலங்கான சோலேநடான் (நச்சு நிறைந்த எச்சிலை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சில பாலூட்டிகளில் ஒன்று), ஆப்பிரிக்காவின் குட்டி நீர் யானை, உலகிலேயே சிறிய பாலூட்டியான பம்பிள்பீ வவ்வால் போன்றவை.

எல்லாவற்றிலும் வித்தியாசமானது நியூகினியாவில் காணப்படும் நீண்ட மூக்கு கொண்ட ‘எச்சிட்னா’ ஆகும். இதன் மூக்கு 30 அங்குல நீளம் வரை இருக்கும். எறும்பு திண்ணியைப் போலவே இதுவும் எறும்புகள், கரையான்கள், சிறுபூச்சிகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. எப்படிப்பட்ட கடினமான உணவுப் பொருளையும் இது வாய்க்குள் அரைத்து விடுகிறது. முள்ளம் பன்றி போல இதன் உடம்பு முழுவதும் முட்களாக நிறைந்திருக்கும். புதிதாக ஈனப்பட்ட ‘குட்டி எச்சிட்னா’ ஒரு கூலாங்கல் அளவில் தான் இருக்கும். ’பிளாடிபஸ்’ விந்தயான விலங்கு. முட்டையிடும் ஒரே பாலூட்டி இதுதான்.

No comments:

Post a Comment