Tuesday, September 29, 2009

இந்திய சட்டம்

`இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).

கல்லீரல்

பித்தநீர் என்ற ஜீரண நீரை உற்பத்தி செய்வது கல்லீரல். அல்புமின் என்ற புரதத்தை தயாரிக்கும் உறுப்பு கல்லீரல். கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் பிற இன வைரஸ்களில் முக்கியமானது சைட்டோ மெக்லோ வைரஸ், எப்ஸ்டெயின் பார் வைரஸ். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் முதலாக 1963 ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ம் ந்தேதி செய்யப்பட்டது. இந்த சிகிச்சை செய்த டாக்டர்கள் தாமஸ், ஸ்டார்ஸ்டல். இந்தியாவில் முதன் முதலில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் (1996-ல்) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.

Friday, September 25, 2009

ஜப்பானியர்கள்

ஜப்பானில் 4 ராசியில்லாத எண்ணாக கருதப்படுகிறது.

ஜப்பானியர்கள் சாப்பிடுவதற்கு முன் ‘இட்டாகிமசூ’ என்று சொல்வார்கள். இதற்கு அர்த்தம் ‘இந்த உணவுப் பொருளைத் தயாரித்து வழங்கியவர்களுக்கு நன்றி’ என்பதாகும்.

புத்தாண்டின் அதிஷ்டம்

புத்தாண்டு துவங்கவதற்கு முன்பாக நள்ளிரவின் கடைசி 12 வினாடிகளில் திராட்சைப் பழம் சாப்பிடுவதை மரபாக வைத்துள்ளனர் ஸ்பெயின் மக்கள். அப்போதுதான், புத்தாண்டு அதிஷ்டகரமாக இருக்கும் என்பது அவைகளின் நம்பிக்கை.

அறிவோமா?

  • நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள் பி மற்றும் சி.
  • முட்டையின் வெளீ ஓட்டில் உள்ள வேதிப் பொருள்கள் கால்சியம் கார்பனேட்.
  • அமாவாசை அன்று பூமிக்கு ஒரே பக்கத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன. இதனால், புவியீர்ப்பு விசை உச்சத்தில் இருக்கும்.
  • இரு தேசியக்கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.
  • ஏப்ரல் முதல் நாள் மீன்களின் தினமாகக் கொண்டாடும் நாடு பிரான்ஸ்.
  • இரவும் பகலும் 5 மணி நேரமாகக் கொண்ட கிரகம் வியாழன்.
  • சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலச் செய்தித்தாளின் பெயர் ‘மதராஸ் கூரியர்’
  • இந்தியாவில் விவசாய உற்பத்தியில் முன்னனியில் நிற்கும் மாநிலம் பஞ்சாப்.
  • சென்னையிலுள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் ராய் சாவித்திரி.
  • திருக்குறள் 1887 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்தது.
  • சர்வதேச நீதி மன்றம் ஹாலந்து நாட்டிலுள்ள தி ஹேக் நகரில் உள்ளது.
  • நண்டுக்கு பத்து கால் உள்ளது.
  • திருவள்ளுவர் பிறந்த ஊர் மையிலாப்பூர்.
  • மாம்பழத்தின் பிறப்பிடம் இந்தியா.
  • மனிதனின் தலை முடி வருடத்திற்கு 6 அங்குலம் வரை வளர்கிறது.
  • திருப்பதியைக் கட்டிய சோழ மன்னன் கருணாகரத் தொண்டைமான்.
  • ரமண மகரிஷியின் இயற்பெயர் வேங்கடராமன்.
  • ஒரு காலத்தில் எகிப்தியர்கள் பூனைகளை கடவுளாக வழிபட்டனர்.
  • உலகில் பெரும்பாலொர் சட்டையின் பட்டனைக் கீழிருந்து மேலாகத்தான் போடுகிறார்கள்.
  • அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையில் உள்ள ஆள் காட்டி விரலின் நீளம் 8 அடியாம். நகத்தின் நீளம் 10 அங்குலம்.

கடலைப்பற்றி

கடலில் ஆழம் காண பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் பாத்தேமீட்டர்.

கடல் நீரில் இருந்து முதலில் பெறப்பட்ட தனிமம் புரோமின்.

கருங்கடல் கனிம வாயுக் கிடங்கு எனப்படுகிறது.

கடற்கறை மணலை சுத்தம் செய்யும் கருவியின் பெயர் பீச் கோம்பர்.

அனகோண்டா!

உலகின் மிகப் பெரிய பாம்பான அனகோண்டா திரைப்படங்களில் காணப்படுவது போல் கொடூர குணமுடையது அல்ல. 22 அடி நீளம் வளர்ந்தாலும் கோழி, வாத்து, நாய், ஆடு, மான், முயல் போன்றவற்றை உண்ணணும். இதன் எடை 200 கிலோ. ஒரு தடவைக்கு 100 முட்டைகள் வரை இடும். இதன் ஆயுட்காலம் சராசரி 40 ஆண்டுகள். நமது மண்ணில் காணப்படும் மண்ணுளிப் பம்புகள் அனகோண்டா பாம்புகளின் தூரத்து உறவினமாகும்.

Tuesday, September 22, 2009

லால்பகதூர் சாஸ்திரியும், செவ்வாய் கிழமையும்

இந்தியாவில் இரண்டாவது பிரதமராகிய லால்பகதூர் சாஸ்திரிக்கும் செவ்வாய் கிழமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. லால்பகதூர் சாஸ்திரி பிறந்தது, மாநில அமைச்சரானது, மத்திய அமைச்சரானது, காங்கிரஸ் தலைவரானது, உள்துரை அமைச்சரானது, இந்தியப் பிரதமரானது, பாரத ரத்னா விருது வாங்கியது,புகழ் பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அவர் இறந்தது இவை அனைத்தும் செவ்வாய் கிழமையில் தான்.

அறிவியல்துணுக்கு

அதிக ஞாபகசக்தி உள்ள விலங்கு யானை.

ஈரானின் பழைய பெயர் பாரசீகம்

சணத்திலிருந்து மீத்தேன் வாயு கிடைக்கிறது.

மீன்களுக்கு உமிழ் நீர் சுரப்பிகள் இல்லை.

சிவப்பு நிற ஒளிக்கு அலை நீளம் அதிகம் இருப்பதால் அது போக்குவரத்து சிக்னலில் பயன்படுகிறது.

தொலைக் காட்சியை ‘ஆன்’ செய்தவுடன் படம் வருவதற்கு முன் ‘ஒலி’ வந்து விடும். காரணம், படத்தை உருவாக்கும் பிக்சர் டியூப் சூடாக சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது.

காற்றில் ஒலியின் வேகம்

  • வெள்ளி கிரகம் இரவு நேரத்தில் ஊதா வண்ணத்தில் ஒளி வீசுகிறது.
  • சூரியனின் குறுக்களவு 13,92,000 கிலோ மீட்டர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • காற்றில் ஒலியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 380 மீட்டர்களாகும்.
  • சூரிய ஒளியானது பூமியை அடைய 8 நிமிடங்களும், 20 விநாடிகளும் ஆகின்றது.
  • மழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால்தான் நீண்டதூரத்திற்கு ஒலியைக் கேட்கமுடிகிறது.
  • செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
  • நீரின் ஒலியின் வேகம் விநாடிக்கு சுமார் 1,600 மீட்டர்.

அஞ்சல் தலை

*இந்தியாவில் தற்போதுள்ள அஞ்சல் முறையினை முதன் முதலில் புகுத்தியவர் ராபர்ட் கிளைவ்.

*பிரிட்டனில் தான் முதன் முதலில் அஞ்சல் தலை ஒட்டும் வழக்கம் 1840-ல் தொடங்கியது.

*அஞ்சல் தலையை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நாடு இந்தியாதான்.

*காமன்வெல்த் நாடுகளில் ‘ஏர்மெயில்’ அஞ்சல் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு இந்தியாவே.

*உலகின் முதன் முதலாக விமான கடிதப் போக்குவரத்தைத் தொடங்கிய நாடும் இந்தியாவே!.

உயிரினங்களின் வகைகள்

  • வவ்வால்களில் 2,000 வகைகள் இருக்கின்றன.
  • குரங்கு இனங்களில் 200வகைகள் உள்ளன.
  • தவளையில் 4,000 இனங்கள் உள்ளன.
  • ஆமை இனத்தில் 40 வகைகள் உள்ளன.
  • கடலுக்குள் 13,000 வகை மீன்கள் உள்ளன.
  • உலகில் பூச்சி இனங்களில் 7 லட்சம் வகைகள் உள்ளன.

பாம்புகள்

  • பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.
  • பாம்பு இனத்தில் மிகப் பெரியது அனகோண்டா.
  • பாம்புக்கு வாசனை அறியும் சக்தி அதன் நாவில் உள்ளது.
  • பாம்புகள் பல மாதங்கள் உண்ணாமல் இருக்கும் ஆற்றல் உடையது.
  • பாம்புகளுக்கு காதுகள் இல்லை. ஆனால் ஒலியை உணரும் ஆற்றல் உண்டு.
  • இங்கிலாந்தில் 50 செ.மீ நீளமுள்ள பாம்புகள் உள்ளன.
  • நன்கு வளர்ந்த ராஜநாகம் 18 அடி நீளம் வரை இருக்கும்.
  • மலைப் பாம்புகளுக்கு விஷம் கிடையாது.

போலார் கரடி

* லிமை மிகுந்த போலார் கரடி 1,320 பவுண்டு எடை இருக்கும். வளர்ந்த மனிதனை விட 10 மடங்கு அதிகம். மண்ணில் காணப்படும் மிகப்பெரிய மாமிசம் திண்ணும் பாலூட்டி இனம் இது தான். வளர்ந்த கரடி ; மீன் மற்றும் சீலை தங்கள் எடைக்கு நிகரான பெலூகா திமிங்கலத்தையும் விருப்பத்துடன் சாப்பிடும்.

வேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.

புதிதாய் பூமியைப் பார்த்த போலார் கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அதிஷ்டவசமாக அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.


வட ஐரோப்பா, வட ஆசியா, மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. ஆர்டிக் சமுத்திரம் உறையவில்லை என்றாலும் தங்களின் கம்பளித் தோலின் உதவியால் அட்டகாசமாய் நீச்சலடிக்கும்.

வாலபீஸின் அதிசயப் பால்

வாலபீஸ் என்பது சிறிய வகை கங்காரு. இவை ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது ஒரு வகை டாமர் வாலபி. இது நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது. பென்சிலின் மருந்தைவிட சக்தி வாய்ந்தது.

டாமர் வாலபியின் பால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தது. இது கோல்டன் ஸ்டாப் மற்றும் சால்மோனிலா வைரசையும் அழிக்க வல்லது. மிகவும் பயங்கரமான நோயை கோல்டன் ஸ்டாப் வைரஸ் உருவாக்குகிறது. தோலில் கொப்பளம், நுரையீரல் வீக்கம், மூளைத் தண்டுவடம பாதித்தல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

வாலபி பிறக்கும் போது இதயம் இருக்கும். ஆனால், நுரையீரல் இருக்காது. இதன் சந்ததிகள் பலவீனமாகவே பிறக்கின்றன. ஆனால், தாய்ப்பால் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகின்றன. விஞ்ஞானிகளை குறைப்பிரசவக் குழந்தைகளை பாதுகாப்பதற்கான மருந்தை வலபிஸிடம் இருந்து தயாரிப்பதற்குப்முயன்று வருகின்றனர்.

உலகின் மிகப் பெரிய மீன் மார்கட்

  • உலகின் மிகப்பெரிய மீன் மார்கட் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2,500 டன் அளவுக்கு மீன்கள் விற்பனையாகின்றன.
  • உலகிலேயே மாபெரும் கப்பல் கட்டும் தளம் அமெரிக்காவில் நியுஆர்லியன்ஸ் என்ற இடத்தில் உள்ளது.
  • ஜப்பானியர்களின் கல்விக் கடவுளுக்கு டென்ஜின் என்று பெயர்.
  • ஆப்பிரிக்காவில் ஓடும் தஜீரா என்ற ஆறு கடலில் உற்பத்தியாகி ஏரியில் கலக்கின்றது.
  • ஒரு மின்னலில் உள்ள மின் சக்தியின் அளவு சுமார் 250 கோடிவோல்ட்.
  • இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த போது மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமராக பணியாற்றினார்.
  • வண்ணத்துப் பூச்சிகளுக்கான பிரத்தியோக மியூசியம் மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங் நகரில் உள்ளது.
  • ரோபோ என்பது சொக்கோஸ்லோவாகிய மொழிச்சொல் ஆகும்.
  • இந்தியாவில் விளையாட்டு உபகரணங்கள் அதிக அளவில் ஜலந்தர் நகரில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் தான் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

முதுகெலும்பு இல்லாத உயிரினம்

லகில் உள்ள உயிரினங்களில் முதுகெலும்பில்லாத உயிரினங்களே அதிகம் சுமார் 10 லட்சம் உயிரினங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்டவை முதுகெலும்பு இல்லாதவைகளாகும். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை பல பகுதிகளாக பகுத்துள்ளனர் அறிவியல் அறிஞர்கள். அவற்றுள் புரோட்டோசோவா ஒரே உயிரணுவால் இயங்கும் இனமாகும். மற்ற உயிரினங்கள் செய்யும் சுவாசித்தல்,உணவு உண்ணல், உணவை ஜீரணித்தல், எஞ்சும் கழிவுப் பொருட்களை வெளியயேற்றுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் ஓரணுவுக்குள்ளே செய்கின்றது. ஆனால், இந்த ஓரணு உயிரினங்கள் அளவில் மிக நுண்ணியவைகளாக இருப்பதால் அவற்றை மைக்ரோ ஸ்கோப் மூலமாகத் தான் பார்க்க முடியும். இவற்றில் சிலவற்றில் மேற்பகுதி சற்று கடினத் தன்மை கொண்ட ஓடுகளால் அமைந்தது. இந்த நுண்ணுயிரிகளின் இறந்த தொகுதியே கடலில் கிடைக்கும் சீமைச் சுண்ணாம்பு ஆகும். புரோட்டோசோவா உயிரினங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய் பிரிந்து தனித்தனி உயிர்களாய் பெருக்கமடைகின்றன. புரோட்டோசோவா உயிரினங்களில் 30 ஆயிரம் வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மற்றோரு வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி, ஜெல்லி மீன் போன்றவைகளாகும். நாடாப்புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப் புழுக்கள் எனும் வேறு வகையைச் சார்ந்தது. கொக்கிப் புழு, நாக்குப் புழு, நரம்பு சிலந்திப் புழு போன்றவை உருண்டைப் புழு என்ற மற்றோர் வகையைச் சார்ந்தததாகும். கிளிஞ்சல், நத்தை போன்றவை சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும்.

ஆக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இவ்வகையைச் சார்ந்தது. நட்சத்திரமீன், கடல் வெள்ளரி போன்ற கடல் வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளே. முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மிகப் பெரியவை கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு ஆகும். முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை அளிப்பவையும், தீமை அளிப்பவையும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்பவை. விசத்தன்மை கொண்ட பாம்புகள்,பூச்சிகள் ஏராளம் உள்ளன.

Monday, September 21, 2009

உலகத் தமிழ் மாநாடு



உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

வரலாறு

1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.


முதல் மாநாடு

தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடாத்தப்பட்டது.

இரண்டாம் மாநாடு

1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.

மூன்றாவது மாநாடு

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 9170 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.

இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.

நான்காவது மாநாடு

1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது[1]. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

5வது முதல் 8வது மாநாடு வரை

முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது[2].

ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் இடம்பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் இடம்பெற்றன.

ஒன்பதாவது மாநாடு

எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள்ளது.


வில்ங்குகள் எங்கே, எப்படி?

இலங்கை தீவிலுள்ள காடுகளில் புலிகள் இல்லை. சிறுத்தைகளே வாழ்கின்றன.

களிறு என்றால் தமிழில் ஆண் யானை என்று அர்த்தம். பிடி என்றால் பெண் யானை . மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, இம்மடி, கைம்மா என யானைக்குப் பல பெயர்கள் உண்டு.

காண்டாமிருகத்தின் கொம்புகள் உரோமங்களால் ஆனவை.

ஓடும் விலங்குகளில் அதி வேகமாக ஓடுவது சிறுத்தைதான்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்காவில் குரங்குகள் இல்லை. ஆசியா, ஆப்பிரிக்காவின் தென் பகுதிகளில் மட்டுமே குரங்குகள் உண்டு.

ஆங்கில சுருக்கெழுத்து முறையை பிட்மேன் என்பவர் கண்டுபிடித்தார்.

இந்திய நூலகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் எஸ்.ஆர். ரங்கநாதன்.

சாயப் பொருளைக் கண்டுபிடித்தவர் ஹாப்மன்.

தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் சுதேசமித்திரன்.

தட்டச்சு இயந்திரம் 1873-ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரைட்டர்ஸ் பில்டிங்’ என்ற கட்டடம் கல்க்கத்தாவில் உள்ளது.

ஏழைகள் பசு என அழைக்கப்படுவது ஆடு.

மயில் துத்தம் நீரில் கரைவதில்லை.

உலகின் மிகச் சிறிய கடல் எனப்படுவது ஐரோப்பாவில் உள்ள காஸ்பியன் கடல் ஆகும்.

சுனாமி என்ற வார்த்தை ஜப்பானிய சொல்.

தலைகீழாகத் தொங்கும் ஒரே பாலூட்டி வவ்வால்.

பனிச் சிறுத்தைகள் இமயமலைப் பிரதேசத்தில் வசிக்கின்றன.

மிகப்பெரிய கண்கள் உடைய உயிரினத்தின் பெயர் ராட்சச ஸ்க்விட்.

ஹாக் என்ற மான் இலங்கையில் வயல்வெளி மான் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரக்கூன் என்ற உயிரினம் பிண்ந்தின்னி என அழைக்கப்படுகிறது.

J.J தாம்சன் எலட்ரானை கண்டுபிடித்தார்.

கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர்.

இந்தியக் கப்பல் படை

*இந்தியக் கப்பல் படையின் தலைமையகம் ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ளது.

*இந்தியக் கப்பல் படையின் பயிற்சி நிலையம் கோவாவில் உள்ளது.

*இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் தலைமையகம் டில்லியில் உள்ளது.

*இந்திய இராணுவ அறிவுக் கூர்மை பயிற்சிப் பள்ளி புனே நகரில் உள்ளது.


*இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் கோவா.

பாலைவனப் பூனை

மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் பாலைவனங்களில் பாலைவனப் பூனை காணப்படுகிறது. ஊறுதியான பாதங்களைக் கொண்ட இந்த பாலைவனப் பூனைக்கு சிறுத்தையின் குணாதிசயங்கள் அப்படியே உண்டு. ஒடுவதிலும் இது அதி வேகம். மணல் பரப்பிலும் 60 கி. மீ வேகத்தில் பாய்ந்தோடும் ஆற்றல் பெற்றது.சற்றுத் தாழ்வாகப் பறந்து வரும் பறவைகளை தாவிப் பிடித்து இரையாக்கி விடும்.

Sunday, September 20, 2009

’நதிக் குகை’

லாவோஸ் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘நேசனல் ஜியாகிராபிக்’ குழுவால் ‘சேபான் பாய் நதிக் குகை’ கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகிலேயே பெரிய நதிக் குகைகளில் ஒன்றாகும். இதன் மொத்த நீளம் ஒன்பதரை கி.மீ. ஆகும். இந்த குகைக்குள் பிரமாண்ட சிலந்திகள் காணப்படுகின்றன. சில சிலந்திகள் 25 செ.மீ. அளவுக்குப் பெரியவை ஆகும். இதன் கூரைப் பகுதியில் உயர்ந்த கூம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. என்வே இந்த குகையின் ஒரு பகுதி ‘தேவாலயம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்த குகைக்குள் தண்ணீர் தொடர்ந்து சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறதோ அது நதிக் குகை என்கிறார்கள். குகை வழியாக நீண்ட காலமாகப் பாயும் தண்ணீர், நீண்ட ஓர் ஒழுங்கற்ற பாதையை உருவாக்குகிறது. இந்த குகைக்குள் சொட்டு சொட்டாக வடியும் தண்ணீரால் தாதுக்கள் சேர்ந்து பாறைப் படிவுகள் உருவாகின்றன. குகையின் மேற்பகுதியிலிருந்து தொங்கும் பாறைப் படிவுகள் ‘ஸ்டாலக்டைட்ஸ்’ என்றும் தரைப் பகுதியிலிருந்து மேலே எழுபவை ‘ஸ்டாலக் மைட்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

பாசிகள்

தாவர, விலங்கினங்கள் வாழவே முடியாத இடங்களிலும் ஒருவகைப் பாசிகள் காணப்படுகினறன. உலகிலேயே உயர்ந்த சிகரமான எவரஸ்டில் சில இடங்களில் பனியில் சிவப்பு வண்ணம் காணப்படுவதை மலை ஏறுபவர்கள் கண்டுபிடித்தனர். அந்தப் பனி மாதிரிகளை ஆராய்ந்த போது அவற்றில் ஒரு வகை ‘சிவப்பு பாசி’ படர்ந்திருப்பது தெரியவந்தது.அவை மிகக் கடுமையான குளிரிலும் தாக்குப்பிடிக்கக் குடியவையாக இருந்தன. உண்மையிலேயே பாசிகள் எல்லா வகையான சூழல்களிலும் காணப்படுகின்றன. குமில் விடும் கந்தக வெந்நீர் ஊற்றுகளிலும் கூட அவை காணப்படுகின்றன. இன்னும் சில ‘பாசிகள்’ எழுமிச்சைசாறு போல நூறு மடங்கு அதிக அமிலத் தன்மை வாய்ந்தது.

பாலைவனத்தில் மறையும் ஆறு

உலகெங்கிலும் மீதப்படும் ஆற்றுநீர் கடலில் கலப்பது வழக்கம் ஆனால் அங்கோலா நாட்டில் உற்பத்தியாகும் 'குபாஸ்கோ’ என்ற ஆறு 1590 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி கலகாரி பலைவனத்தில் பய்ந்து ஆவியாகிப் போகிறது.

புகையிலை

புகையிலை புற்று நோயை உண்டாக்கக்கூடியது. ஆனால் அதே நேரம் மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படக்கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியையும் உண்டாக்கக்கூடியது.

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள்

இந்தியாவில் உள்ள மொத்த அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 103.

லாஸ் ஏஞ்சல்ஸ்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம் அதன் முழுப் பெயர், எல்டியூப் லோடி நியூஸ் டிரா செனராலா ரெய்னா - டி - லாஸ் ஏஞ்சல்ஸ் என்பதாகும்.உலகிலேயே மிக நீளமான பெயர் கொண்ட நகரம் இதுதான்.

கார் நிஜமாகவே பறக்கும்

*1949 ம் ஆண்டு அமெரிக்காவின் கண்டுபிடிப்பாளர் மோல்ட் டெய்லர் பிற்காலத்தில் விமானமாக மாறிய கார் ஒன்றை வடிவமைத்தார். 1953 ம் ஆண்டிற்குள் இந்த கார் 25,000 மைல்கள் பறந்துவிட்டது.

*1950 களில் அமெரிக்க கார் வடிவமைப்பாளர்கள் கூர்மையான மீனின் செதில்கள் போன்ற துண்டு பகுதிகளை காரின் பின் பகுதியில் இணைக்க ஆரம்பித்தனர். அந்த காலத்தில் சண்டை போட உதவும் ஜெட்களின் வடிவமைப்பை காப்பியடித்து காரில் அது போல செய்தனர். காரின் வால்பகுதி செதில்களில் வரிசையாய் எப்பொழுதும் விளக்குகள் இருக்கும். இந்தப் பெரிய, நீண்ட கார் உலோக வகை பூச்சுகளை தாங்கிய உடலமைப்புடன் இருந்தன.

*’கல்’
என்பது மிக நீண்ட சிறகுகள் உடைய கடற்பறவை. 1952 ம் ஆண்டில் வந்த மெர்சிடீஸ் 300 எஸ்.எல். கார் மாடலில் ‘கல்’ பறவை போல மேல்புறம், விரியும் கதவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மாடல், விபத்தின் போது கதவுகளை திறக்க முடியாதபடி ஜாமாகி விடுவதால் கைவிடப்பட்டது.

*போர்டு கார் கம்பனியின், ‘இடிப்பறவை’ என்னும் காருக்கான செல்லப் பெயர் தான் ‘டீ- பறவை’. இதன் முதல் மாடல் 1953 ம் ஆண்டு அறிமுகமானது. மிகப் பெரிய மாற்றிக் கொள்ளத் தக்க இரண்டு இருக்கை கொண்டது.1950 ம் ஆண்டு வாக்கில் அமெரிக்க தயாரிப்பாளர்கள் எரிவாயுவில் இயங்கக்கூடிய பெரிய இடிப் பறவை போன்ற கார்களைத் தயாரித்தனர்.

உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பார்ம்!

*உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்கு வங்கத்திலுள்ள கரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ளது.

*’பறக்கும் ராணி’ என்ற எக்ஸ்பிரஸ் மும்பையிலிருந்து சூரத் நகர் வரை இயக்கப்படுகிறது.

*இந்திய ரயில்வேயில் 16 மண்டலங்கள் உள்ளன.

*இந்தியாவில் முதல் மின்சார ரயில் டெக்கான் குயின்.

*மிக நீளமான ரயில்வே பலம் சோனிபாலம்.

அறிவுக்கு

பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.

கடல் சிங்கங்கள் அண்டார்டிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றது.

சிட்டுக்குருவியின் அறிவியல் பெயர் புளோசிடாபாசர்.

இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்.

திருக்குறள் அனத்தும் குறள் வெண்பா வகையைச் சேர்ந்தவை. வெண்பாவால் ஆன முதல் நூலும் ஒரே நூலும் இதுவே.

1967-ல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெர்னார்ட் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையைசெய்தார்.

கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அல்ராசவுண்டு மூலம் அறியும் முறை முதன் முதலில் 1958 - ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் கிரிக்கட் அசோசியேசன் 1926-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கிரிக்கட் வர்ணணை 1936-ம் ஆண்டு பம்பாய் நகரில் ரேடியோ நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் இது வரை யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. காரணம் நோபல் பரிசினை நிறுவிய ஆல்ப்ரெட் நோபல் எழுதி வைத்த குறிப்பில் விண்வெளி ஆராய்ச்சி இடம் பெறவில்லை.

உலகின் பெரிய நீர் வீழ்ச்சி நயாகரா.

தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரங்களில் ஒன்று தொட்டப்பெட்டா.

ராபர்ட் கிளைவ்

பம்பாய் கடற்படைப் புரட்சி 1946- ல் நடந்தது.

1954-ம் ஆண்டு பிரஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றது.

1956 - ம் ஆண்டு இந்தியாவில் மொழிவாரி மாநிலம் உருவாக்கப்பட்டது.

1774 -ம் அண்டு ராபர்ட் கிளைவ் உயிரிழந்தார்.

1640 -ல் சென்னையில் வணிக வளாகம் அமைக்க கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

1945 ம் ஆண்டு ஐ. நா. சபை தோற்றுவிக்கப்பட்டது.

மன்னர்

*இங்கிலாந்தை ஆண்ட மன்னர்களுள் ஒருவரான முதலாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆட்சி மொழியான ஆங்கிலம் பேசத் தெரியாது.

*இணையற்ற வீரராக இத்தாலியை வென்ற மாவீரன் நெப்போலியனுக்கு பூனை என்றால் மிகவும் பயம்.


விளையாட்டு

*ஒரு மில்லி மீட்டரில் 1,500 பாக்டீரியாக்கள் உள்ளன.

*ஆங்கிலக் கால்வாயின் நீளம் 564 கிலோ மீட்டர்.

*பேரியாழில் 21 தந்திக் கம்பிகள் உள்ளன.

*ஒருஅவுன்ஸ் என்பது 28.34 கிராம்.

*சிறந்த விளையாட்டு வீரருக்கான அர்ஜுனா விருது முதன் முதலில் 1961-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*செல்போனின் தந்தை என அழைக்கப்படுபவர் மார்ட்டின் கூப்பர்.

*லெனின் இயற்பெயர் விளாடிமிர் இலியிச் உல்யானோவ்.

*இமாச்சலப் பிரதேசத்தில் கஸ்தூரி மான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

*இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் ‘கோர்ட்டான்சர்’.

*விளையாட்டுத் துறையில் சிறந்த பயிற்சியாளருக்கு அளிக்கப்படும் துரோணாச்சாரியா விருது முதன் முதலில் 1985 - ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

*முதன் முதலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930 - ல் உருகுவே நாட்டில் நடைபெற்றது.

சத்தமிடும் மரங்கள்

மிகுந்த ஓசையை உண்டாக்கக் கூடிய மரங்கள் கினியா நாட்டில் உள்ளன. இம் மரங்கள் எப்போதும் ஒசை எழுப்பிக் கொண்டே இருக்கும். இதற்குக் காரணம், இம் மரத்தின் பழங்கள் மிகப் பெரியதாய் இருப்பதல் நீண்ட காம்புகளுடன் ஆடிக் கொண்டும், ஒன்றோடொன்று மோதிக் கொண்டும் பலத்த ஓசையை எழுப்புகின்றன. வெடிவெடிப்பது போல் பெரிய சத்தத்தை ஏற்படுத்தும். இதயம் பலகீனம் உள்ளவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டால் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும்.

Saturday, September 19, 2009

டைனோசர்

டைனொசர் ஊர்வனப் பிரிவைச் சேர்ந்த உயிரினம். சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வழ்ந்தவை. புதை படிவங்களிலிருந்து ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறோம். இவற்றில் மிகப் பெரிய உருவம் கொண்டவையும், கோழிகள் அளவில் சிறியதாகவும் இருந்திருக்கின்றன. பறவைகளின் விலா எலும்புகள் போல் அமைப்பைப் பெற்ற பறவை இன டைனொசர்கள், பல்லியின் விலா எலும்புகள் போல் அமைப்பைப் பெற்ற பல்லி இன டைனொசர்கள் என்று இரண்டு வகை டைனொசர்கள் இருந்தன.

டைனொசர்களில் தாவர உண்ணிகளும், மாமிச உண்ணிகளும் இருந்திருக்கின்றன. தாவரஉண்ணிகளில் மிகப் பெரியது பிராக்கியோசாரஸ். இது நாளொன்றுக்கு 1 டன் இலை, தளைகளைத் தின்னும். ஊன் உண்ணிகளில் மிகப் பெரியது டைரன்னொசார்ரெக்ஸ். இது 15 மீட்டர் நீளமும், 6 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் ஒவ்வொரு பல்லும் 15 செ.மீட்டர் நீளமுடையது. டைனொசரஸ் எப்படி அடியோடுமறைந்து போயின என்பது இன்றும் புரியாத புதிர்களில் ஒன்று. 15 கோடிஆண்டுகள் இப்புவியை ஆண்ட இனம் எப்படியோ மாயமாக மறைந்து விட்டது. சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியின் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்கள் இவற்றின் அழிவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

சதுப்பு நில பகுதிகளும், ஆழமற்ற கடல்களும் அன்றைய மித வெப்பமான் சூழ்நிலையில் வளர்ந்த பலவகைத் தாவரங்களை உணவாகக் கொண்டு டைனோசர்கள் வாழ்ந்து வந்தன. காலப்போக்கில் புவியின் தட்பவெப்ப நிலையில் மாறுதல் ஏற்ப்பட்டு குளிர் அதிகமாயிற்று. பல பகுதிகள் வறண்டு போயின. புது வகை தாவரங்கள் தோன்றின. இவற்றை உணவாக ஏற்க முடியாததால் டைனோசர்கள் அழியத்தொடங்கின.

விண்வெளிக்கற்களும் காஸ்மிக் கதிர்களும் டைனோசர்களை அழித்துவிட்டன. ஆனால் மற்ற உயிர்களை விட்டுவிட்டு டைனோசர்களை மட்டும் ஏன் அழிக்கவேண்டும் என்ற கேள்விக்கு சரியான விடை தெரியவில்லை... கண்ட நகர்வு காரணமாக சில உயிரினங்கள் நீர்சூழ் பரப்பில் அகப்பட்டு உணவின்றி இறந்தன. வேறுசில ஒருவகை பாக்டீரியாவினால் நோய் தாக்கி இறந்தன.

நன்றி
தினமணி, சிறுவர்மணி,27-12-2008.


அவ்லெட் அந்துப்பூச்சி

அவ்லெட் அந்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்தது. 35,000 வகை அந்துப்பூச்சிகள் உலகம் முழுவதும் பறந்து காணப்படுகிறது. இது பெரிய வகை அந்துப்பூச்சி. இரவு நேரங்களின் பூக்களில் தேன் குடிக்க வரும். வவ்வால்கள் சில வகை அந்துப்பூச்சிகளை விரும்பிசாப்பிடும் அவ்லெட் பூச்சியை எளிதில் பிடிக்க முடியாது. ஏனென்றால் இது பாதுகாப்பான உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. வவ்வால்கள் பயங்கரமான சத்தத்தை எழுப்பிஅந்த சத்தம் இரையின் மீது பட்டு எதிரொலிக்கக்கூடிய சத்தத்தை வைத்து திடீரென பாய்ந்து இருட்டில் வேட்டையாடும்.

வவ்வால் வரும் சத்தத்தை அவ்லெட் தன் சிறிய காதுகள் மூலம் அறிந்து நைசாக தப்பிவிடும் அந்துப்பூச்சியின் இறக்கைகள் வவ்வால்களின் சத்தத்தை கேட்டதும் ஒருவகை பயம் எற்படும். பயம் ஏற்படும் போதுஇறக்கைகளை வேகமாக அடித்தபடி வளைந்து வளைந்து பறக்கிறது. இதனால் வவ்வால்கள் எளிதில் இவற்றை பிடிக்கமுடிவதில்லை

அறிவியல்

லில்லி மலர் பிரான்ஸ் நாட்டின் தேசிய சின்னம்.

இந்தியாவில் யானை சந்தை நடைபெறும் இடம் சோனேபூர்(பீகார்).

கள்ளோ, காவியமோ என்ற நாவலை எழுதியவர் மு. வரதராசனார்.

புயல் காற்றுக்கு மையமுண்டு எனக் கூறியவர் வில்லியம் ரெட் பீல்ட்.

கண்ணாடியை அறுக்க, அரைக்க பயன்படுவது கார்போராண்டம்.

ஆல்ப்ஸ் மலையை பளிங்கு மலை என அழைக்கப்படுகிறது.

திருமாவளவன் என்ற பெயர் கொண்ட மன்னர் கரிகாலச்சோழன்.

சத்ருக்கனின் மனைவி பெயர் ஸ்ருதகீர்த்தி.

சளுக்கிய அரசை முதன் முதலில் நிறுவியவர் புலிகேசி.

பாரதிதாசனின் இயற்ப்பெயர் கனகசுப்புரத்தினம்.

Friday, September 18, 2009

கதை - மூன்று கேள்விகள்!

சோழர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அநபாயன் என்ற மன்னன் சீறும் சிறப்புமாக ஆண்டு வந்தான். தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
ஒரு நாள் அவனுக்கு சில சந்தேகங்கள் வந்தன. உலகை விட பெரியது எது? கடலை விடப் பெரியது எது? மலையை விடப் பெரியது எது? என்பது தான் சந்தேகம். வெகுநேரம் சிந்தித்தும் அவனால் இக்கேள்விகளுக்கு விடைகளை காணமுடியவில்லை. மூன்று சந்தேகங்களையும் ஓர் ஓலையில் எழுதி அந்த ஓலயை உடனடியாக தொண்டை நாட்டு மன்னனுக்கு அனுப்பி அதற்குறிய பதிலை தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டான்.தொண்டை மன்னனும் சிறந்த அறிவாளி; தமிழ் பற்று மிக்கவன் . அவனாலும் இக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. எனவே, மன்னன் தன்னுடைய அரசகவி வெள்ளியங்கிரி முதலியாருக்கு இந்த ஓலையை அனுப்பி வைத்தான்.

”புலவரே..... சோழ மன்னனின் இந்த சந்தேகங்களை தீர்த்துவைத்தால்
தொண்டை நாட்டு புலவர்களின் அறிவுத் திறன் கண்டு தொண்டை நாட்டுக்கு புகழும் பெருமையும் உண்டாகும்!’’ என்று குறிப்பிட்டிருந்தான்.
அரச கவியும் அக்கேள்விகளைப் பற்றி நீண்ட நேரம் சிந்தனை செய்தும் எதுவும் புலப்படவில்லை. அரச கவியான தனக்கு இந்த கேள்விகளுக்கு விடை தெரியாததால் அவமானத்தால் கூனிக் குறுகினார். இவரது மகன் அருண் மொழித் தேவர் இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்தவன், சிறந்த அறிவாளி. தந்தை கவலையுடன் இருப்பதை கண்டான். “தந்தையே ஏன் உங்கள் முகமிப்படி சோர்ந்து போயிறுக்கிறது. என்ன பிரச்சனை தந்தையே ... சொல்லுங்கள்!” என்றான். “மகனே ... தொண்டை நாட்டு மன்னருக்கு மூன்று சந்தேகங்கள் வந்துள்ளன. அதற்கான பதிலை நான் சொல்ல வேண்டும் என்று மன்னர் ஓலை அனுப்பி இருக்கிறார்.அந்தக் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை மகனே!அதுதான் மனதுக்கு கவலையாக இருக்கிறது! என்றார். “ அப்பாஅந்த கேள்விகளை என்னிடம் கூறுங்கள். என்னால் முடிந்த பதிலை கூறுகிறேன்!” என்றார்.
”மகனே... அவை மிகவும் சிக்கலான கேள்விகளப்பா!” என்றார். தந்தையே... திருக்குறளில் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு. அதில் இல்லாத கருத்துக்களே இல்லை. எனவே, நீங்கள் சொல்லும் கேள்விகளுக்கு என்னால் நிச்சயமாக பதில் சொல்ல முடியும்!”. ”மலையை விடப் பெரியது எது?”
“தந்தையே!”
”நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும், மானப் பெரிது”. இந்தக் குறளின் அர்த்தம். தன்னுடைய நிலை அறிந்து அடக்கமாக வாழ்பவன் எவனோ, அவன் மலையை விடப் பெரிதாக தோற்றம் அளிப்பான்!”.இந்த பதிலில் மனம் மகிழ்ந்த கவிஞர் இரண்டாவது கேள்வியை கூறினார்.
”கடலை விடப் பெரியது எது?”
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்
தூக்கின் நன்மை கடலிற் பெரிது .”
பயன் கருதாமல் செய்த உதவியுடைய தன்மையை ஒருவன் ஆரய்ந்து பார்த்தால் அது கடலை விடப் பெரியதாகும்.
“ஆஹா... அற்புதம் மகனே!”
மூன்றாவது கேள்வியை கூறினார்.
“ உலகைவிடப் பெரியது எது?”
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மானப் பெரிது”.
தக்க சமயத்தில் செய்யப்பட்ட உதவி சிறியதாக இருந்தாலும் அது உலகை விட மிகவும் பெரியதாகும், என்றார்.
“அருமை மகனே என்னைக் காப்பாற்றி இந்த தொண்டை மண்டலத்தின் புகழை காப்பற்றினார்.தொண்டை மண்டல மன்னனின் புகழையும் நிலை நிறுத்தினாய்,”என்று பாராட்டினார்.
அந்த பதில்களை ஓர் ஓலையில் எழுதி தொண்டை மண்டல மன்னனுக்கு அனுப்பி வைத்தார். மன்னன் அதைக் கண்டு புகழ்ந்து போற்றி, சோழ மன்னன் அநபாயனுக்கு அந்தபதில்களை அனுப்பி வைத்தார். அநபாயன் அவற்றைக் கண்டு பெருமகிழ்வுற்றான். அந்த பதில்களை கூறிய அம்மேதையை நேரில் காண விரும்பினான். வீரர்கள் தொண்டை மண்டலம் சென்று மன்னனிடம் விசாரித்து, அருண் மொழித்தேவனை அரசர் முன் அழைத்து வந்தனர்.
அருண் மொழித் தேவரை சோழ மன்னன் மிகவும் பாராட்டினார். அவருக்கு “உத்தம சோழன் ‘ என்ற பட்டத்தையும் அளித்தான். அது மட்டுமின்றி அவரை தன் முதலமைச்சராகவும் ஆக்கினான். அந்த அருண் மொழித் தேவர் தான் பிற்காலத்தில் “சேக்கிழார்” என்ற பெயரில் புகழப்பட்டார்.

நன்றி-தினமலர் சிறுவர்மலர் 31-10-2008

நிலநடுக்கோடு!

நிலநடுக்கோடு ஒரு கற்பனைக் கோடு. அச்சக் கோடுகளில் மிகப் பெரியது நிலநடுக்கோடு. இதை பூமத்திய ரேகை என்றும் கூறுவர். பூமியின் நடு பாகத்திலுள்ள இந்தக் கோடு பூமியை இரு பகுதிகளாக பிரித்துக் காட்டுகிறது. வடக்கே இருப்பது வட கோளம். தென் பகுதி தென் கோளம். நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் வெப்பக்கதிர் நேர் செங்குத்தாய் விழுகிறது அதனால் வெப்பம் அதிகம்.

முதல் ரயில் எஞ்சின்

1804, ரிச்சர்ட் ட்ரவிதிக் என்னும் சுரங்கப் பொறியாளர் முதன் முதலில் ஒரு நகரும் எஞ்சினை தண்டவாளத்தின் மீது வெள்ளோட்டமிட்டு காட்டினார். அது 70 மக்களையும், 10 டன் இரும்பு தாது ஆகியவற்றை திரளான கூட்டத்தினர் ஆச்சர்யத்துடன் பார்க்க இழுத்துச் சென்றது.

பயணிகளை சுமந்த முதல் ரயில்

  • 1825 ம் ஆண்டு, ஸ்டாக்டான் மற்றும் டார்லிங்டான் என்னும் இங்கிலாந்தின் பொது ரயில்பாதையினிடையே பயன்படுத்தப்பட்ட முதல் புகைவண்டி, ஜார்ஜ் ஸ்டீபன்சன் புகைவண்டியாகும்.

குதிரைகளால் இழுக்கப்பட்ட ரயில்

  • ஆஸ்திரியா மற்றும் வேல்ஸில் 1800 மற்றும் 1825 ஆண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் ரயில் பெட்டிகள் என்ஞின் இல்லாமல் இருந்தன. தண்டவாளங்களின் வழியே குதிரைகள் பெட்டிகளை இழுத்துச் சென்றது. அது சலை வழி பயணத்தை விட சொகுசாக இருந்தது.

புரதச்சத்து!

புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து மிக மிக அவசியம். இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவக்கவும் பயன்படுகிறது.புரதச்சத்து ஜீரணநீர்கள், நொதிகள், சுரப்பிகளின் சுரப்பு நீர்கள், வைட்டமீன்கள் ‘ஹீமோ குளோபின்’ எனும் ரத்தத்தின் புரதம் இவற்றைதயார் செய்வதற்கு மிகவும் இன்றியமையாததாகும். நகம்,முடி இவை வளருவதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.

இருவாச்சி பறவை

தமிழகத்துக்கு எத்தனையோ பெருமை உண்டு. இதோ ஒரு பறவையின் பெருமை. அரிய பறவையான இருவாச்சி, தனது ஜொடியை உயிர் பிரியும் வரை மற்றிக்கொள்வதில்லை. இருவாச்சியின் பூர்வீகம் தமிழ்நாடு தான். அழகிய நீண்ட வளைவான அலகு ,கொம்பு போன்று உள்ளது. இந்த அலகைக் கொண்டு பொந்துகளில் அழகிய கூடு கட்டுகிறது. பிரவுன், கருப்பு, கருஞ்சிவப்பு, மஞ்சள் போன்ற நான்கு வண்ணங்களைக் கொண்டது. பறக்கும் போது ஹெலிகாப்டர் பறப்பதை போன்ற ஒலி எழுப்பும்
பெண் பறவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் மட்டும் காய்ந்த மரத்தில் பொந்தை அமைக்கும். பெண் பறவை மட்டுமே கூட்டில் வசிக்கும். பெண் பறவை முட்டையிடும் காலம் வரை ஆண் பறவையே இரையை சேகரித்துக் கொடுக்கும். குளுமையாக வைத்திருக்க பொந்தில் பசும் இலை, தலைகளை கொண்டு ஆண் பறவை நிரப்பும். தாயின் மூன்று மாத அரவணைப்புக்குப் பிறகு குஞ்சுகள் தானே இரை தேடச் செல்லும்.

வாயு மண்டலம்

* பூமியைச் சுற்றிலும் வாயு மண்டலம் நூற்றுக்கணக்கான மைல் உயரம் வரை பரவி உள்ளது. இதன் எடை 50 லட்சம் கன கிலோ மீட்டர் தண்ணீரின் எடைக்குச் சமம். ஆனல் இது பூமியின் மொத்த எடையில் 10 லட்சத்தில் ஒரு பகுதிதான்.

* கடல் மட்டத்தில் ஒரு சதுர செண்டிமீட்டர் பரப்பளவில் காணப்படும் காற்றழுத்தம் 1,033 கிராம்கள்.

* காற்றின் எடை உயரத்திற்க்கு தகுந்தாற் போல்மாறும். தரைமட்டப் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் இருக்கும். இங்கு ஒரு கனமீட்டர் அளவுள்ள கற்றின் எடை சுமார் 1.290 கிராம்கள். 20 கி. மீ உயரத்தில் ஒரு கன சென்டிமீட்டர் அளவுள்ள காற்றின் எடை சுமார் 90 கிராம்கள். 140 கி.மீ உயரத்தில் 4 கிராம் மட்டும்தான்.

* காற்றுக்கும் எடை உண்டு என்பதை நாம் 17 - ம் நூற்றாண்டில் தான் அறிந்து கொண்டோம். 19 - ம் நூற்றாண்டில் இறுதியில் காற்றில் பறக்கும் பலூன்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

* வாயு மண்டலம் நீண்ட கோழிமுட்டை வடிவத்தில் காணப்படுகிறது. இந்த வாயுமண்டலத்துக்கு 1 லட்சம் கி.மீ நீளமுள்ள ஒரு வால் இருக்கிறது. இந்த வால்பகுதி சூரிய கிரகணங்களின் அழுத்தத்தால் ஒன்றுபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

* வாயு மண்டலத்தில் அதிகமாக காணப்படுவது நைட்ரஜன் வாயு. இது காற்றில் 78 சதவீதம் நிரம்பி இருக்கிறது. அடுத்ததாக பிராணவாயு எனப்படும் ஆக்ஸிசன் 21 சதவீதம் உள்ளது.

*வளி மண்டலத்தில் வாயுக்களைத் தவிர துசி துகள்களும் நிரம்பி இருக்கின்றன. எரிமலை வெடிப்புகள், பாறைச் சிதைவுகள், எரியும் பொருட்களில் இருந்து கிளம்பும் தாவரப் பொருட்களே வாயு மண்டலத்தில் தூசுகளாக கலந்திருக்கின்றன.

*வாயு மண்டலத்தில் ரேடியம், கால்சியம், மக்னீசியம்,இரும்பு போன்ற உலோகங்களும் மிக மிக குறைந்த அளவில் காணப்படுகின்றன.

*மின் வீச்சு மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் பிராண வாயு பாதிக்கப்பட்டு ஓசோனாக பரிணமிக்கிறது.

பாட்மிண்டன்

பூப்பந்தாட்டம் 1850 -க்கு முன்பே பூனா என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்தது. இதைக் கண்ட ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டில் சென்று பட்மிண்டன் என்ற எஸ்டேட்டில் விளையாடினார்கள். பின்னர் அதுவே அந்த விளையாட்டின் பெயராக நிலத்துவிட்டது.

Thursday, September 17, 2009

உடலைப்பற்றி

  • ஒரு மனிதனுக்கு நாள்தோறும் தேவைப்படும் அயோடின் அளவு - 150 மைக்ரோகிராம்.
  • மரபு குவியம் கரணமாக ஆண்களுக்கு எற்படும் நோய் - கிளின்பெல்டர்.
  • சின்னம்மைக்கு காரணமான வைரஸ் - பாரிசெல்லா ஜோஸ்டர்.
  • மரபு குவியம் காரணமாக பெண்களுக்கு எற்படும் நோய் - டர்னர்.
  • கருப்பை குழாய்களை பரிசோதிப்பதற்காக பயன்படுத்தப்படுவது - டியூப்போஸ்கோப்பி.
  • இந்தியாவில் முதன்முதலில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த ஆண்டு - 1986 ஆகஸ்டு மாதம் 6 - ம் தேதி.
  • உடலின் சாதாரண வெப்பநிலை - 98.4 பாரன்ஹீட்.
  • மனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை - 639.
  • மனித உடலில் உள்ள எழும்புகளின் எண்ணிக்கை - 206.
  • ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும் -1லட்சம்.
  • மனித வழ்விற்க்கு தேவையான ஆக்ஸிசன் அளவு - 6.9 சதவீதம்.
  • பச்சைகுத்தும் போது தொற்றும் நோய் - டெட்டனஸ்.

அறிவோமா?

  • உலகிலேயே மிகச் சிறிய சிறைச்சாலை சார்க் தீவில் உள்ளது. இந்த சிறையில் 2 கைதிகளை மட்டுமே அடைக்கமுடியும்.
  • ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட ஆண்டு 1913.
  • உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்சிக்கோ வளைகுடா.
  • மேட்டுர் அணை கட்டப்பட்ட ஆண்டு 1932.
  • உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி டென்மார்க் நாட்டுடையது.
  • போபால் விசக்கசிவு நிகழ்ந்த ஆண்டு 1984.
  • உலகின் மிக உயரமான புத்தர் சிலை (132அடி) தைவானில் உள்ளது.
  • கணினியில் சுட்டெலி (மவுஸ்) பயன்படுத்த தொடங்கிய ஆண்டு 1970.
  • ஒரு நாளைக்கு மனிதன் முச்சுவிடும் எண்ணிக்கை சுமார் 23,000.
  • உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு மைதானம் எஸ்ட்ரா கிவி ஸ்டேடியம்.
  • சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் 30-12-2006.
  • உலகிலேயே மிக நீளமான தேசியகீதம் உள்ள நாடு கிரீஸ்.
  • வவ்வாலுக்கு 20 முதல் 38 பற்கள் உண்டு.
  • பசிக்கும் நேரத்தில் உணவு கிடைக்காவிட்டால் நண்டுகள் தன் இனத்தையே பிடித்து உண்டுவிடும்.
  • உலகிலேயே 15 நிமிடங்கள் மட்டும் அரசராக இருந்தவர் ஆறாம்லூயி.
  • ஜப்பானில் 100 வயதை கடந்த அனைவருக்கும் அந்த நாட்டின் பிரதமரால் ஜப்பானிய தேசிய தினத்தன்று பரிசுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
  • சிக்க தேவராஜா என்பவர் 1687-ம் ஆண்டில் மராட்டியரிடம் இருந்து பெங்களூரை 3 லட்சத்திற்கு விலைக்கு வாங்கினார்.
  • புனைகளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளநாடு எகிப்து.
  • பாம்பை விரும்பிசாப்பிடும் பறவை செகரட்டரி பறவை.
  • ரஸ்யாவின் தேசிய விலங்கு கரடி.
  • ஆலமரத்தை தன் கொடியில் கொண்டுள்ள நாடு லெபனான்.

மூக்கின் அதிசயம்

வெளிக்காற்று சில நாட்களில் மிகவும் வெப்பமாக இருக்கும். வேறு சில நாட்களில் மிகவும் குளிர்சியாக இருக்கும். நாம் மூக்கின் வழியே காற்றை சுவாசிக்கும் போது அதிக வெப்பமாக உள்ள காற்று 98.5 டிகிரிக்கு கூட்டப்படும் சுவாசப்பைகளுக்கு செல்கின்றன. ஏர்கண்டிசன் போல இந்த அரிய பணியைச் செய்யும் ஆற்றல் நமது மூக்குக்கு உள்ளது.

நோபல் பரிசு - பொருளாதாரம் 2008

அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்க பேராசிரியர் பால் க்ரூக்மேனுக்கு (வயது 55) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. தடையில்லா வர்த்தகம், உலகமயமாக்கலின் விளைவுகள், நகரமயமாதலுக்கான காரணிகள் எவை? போன்றவைகளுக்கு புதிய பொருளாதார கோட்பாடுகளின் மூலம் விடை கண்டுள்ளார். இவர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறையில் பேராசிரியராக பணியற்றி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் கூட. பன்னாட்டு வணிகம் பொருளாதார புவியியல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து ஆரய்ந்தது போன்ற பொருளாதாரத் துறை சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துறை நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நோபல் பரிசு - அமைதி 2008

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் சர்வதேச மோதல்களுக்கு தீர்வு எற்பட அமைதி முயற்சிகளை மேற்கொண்டவர், பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி வயது 71. இந்தோனேசிய அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. இதில் 15 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மார்ட்டி அதிசாரி மேற்பார்வையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் கடந்த 2005 - ம் ஆண்டில் தீர்வு எற்பட்டது. ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தனது 36 - வது வயதில் தூதர் பொறுப்பிற்கு வந்தார். 1994 - ம் ஆண்டில் பின்லாந்தின் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமையைப் பெற்றார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Wednesday, September 16, 2009

SWINE FLU CONTROVERCY 1977: Public Health

Swine flu controversy.

The swine flu vaccination program was suspended in December 1976 by then Assistant Secretary for Health Dr. Theodore Cooper, who acted after reviewing studies showing a possible connection between use of the swine flu vaccine and the development of a severe neurological disorder called the Guillain-Barr‚ syndrome. According to statistics compiled by the Center for Disease Control, of 1,104 cases of Guillain-Barr‚ syndrome reported in late 1976, 535, including 28 resulting in death, had apparently followed inoculation of the patient against swine flu. Early in February, however, HEW Secretary Califano partially lifted the moratorium on the use of the vaccine because of an outbreak of A-Victoria influenza, against which one type of swine flu vaccine (the bivalent) was effective. Later, the Public Health Service advised that elderly persons and those with chronic illnesses receive inoculations against A-Victoria and B-Hong Kong influenza to prepare for the 1977-1978 flu season. The general suspension of the swine flu inoculation program remained in force, however.

Meanwhile, a group of consumer organizations, later joined by the Pharmaceutical Manufacturers' Association, urged Califano to establish a national immunization commission to develop and oversee a national vaccination policy.

Saccharin ban.

The Food and Drug Administration proposed on March 9 that the artificial sweetener saccharin be banned in itself and as a food additive. Recently released Canadian studies had linked administration of large quantities of saccharin to laboratory animals with development of bladder cancer. Although a storm of protest from diabetics, dieters, and soft-drink manufacturers followed this announcement, the FDA's case apparently was strengthened in June, when a report was released of a Canadian epidemiological study that appeared to demonstrate a definite association between consumption of saccharin and the development of bladder cancer in human males. Though the FDA had by that time already modified its proposal, to permit the sale of saccharin as an over-the-counter drug, Congress acted to delay implementation of the proposed ban. In September and October both houses gave approval to measures appropriating funds for further saccharin studies and postponing any FDA ban until such studies were completed.

Abortion funding.

The Center for Disease Control reported an increase of 12 percent in the number of legal abortions in the United States in 1975. About one-third of those having abortions were teenagers. According to the CDC statistics, the ratio of abortions to live births in 1975 was 272 per 1,000.

Meanwhile, Congress was sharply divided over whether to continue for fiscal 1978 a ban on the use of federal medicaid funds to pay for most abortions for poor women. (The ban, first voted for fiscal 1977, was actually not in effect until late in the fiscal year because of court challenges.) After the Senate modified the ban by approving all 'medically necessary' medicaid abortions, the House voted to adhere to the original terms of the ban, which prohibited the use of federal medicaid funds for all abortions except those required to save the mother's life. The ensuing deadlock over this issue stalled passage of the $60.3 billion appropriations bill to operate the Departments of Labor and HEW during the fiscal year beginning October 1. A House concession, on October 12, allowed federal funding of medical procedures for victims of rape and incest, but a final agreement between both houses was still awaited.

FTC actions.

The Federal Trade Commission has recently begun to gather information on the alleged lack of competition in the delivery and financing of health-care services. In one of its first actions in this area, the FTC on April 20 ordered the Minnesota State Medical Society to refrain from developing and publicizing 'relative value scales' and dollar conversion factors to guide physicians in setting fees. Relative value scales had been used to equate certain medical services and to rate some services as inherently more valuable than others. According to the FTC, publication of the scales amounted to illegal price fixing by the medical society.

In a related matter, the FTC indicated its concern about the American Medical Association's role in the Liaison Committee on Graduate Medical Education, the accrediting agency for medical schools. The commission focused its attention on a possible conflict of interest by the AMA in exerting influence over medical education. The FTC also issued a staff report which concluded that health maintenance organizations could stimulate competition in their areas of operation, and thus reduce health-care costs.

Foreign doctor phaseout.

Under a federal statute that took effect on January 10, foreign medical school graduates will be barred after 1980 from completing their medical education in the United States. Although the bill provides for waivers on a case-by-case basis if health services would otherwise be adversely affected, the American Hospital Association foresaw major problems resulting from the ban, particularly in big-city public hospitals, whose staffs traditionally have included significant percentages of foreign doctors. Presently, foreign medical school graduates make up 30 percent of the 50,000 interns and residents in U.S. hospitals, and as much as 80 percent of the house staffs at some metropolitan hospitals. In order to soften the impact of the ban, recruitment of foreign doctors will be phased out gradually over the next two years.

THANKS TO Microsoft ® Encarta ® 2007.

SWINE FLU IN EARLY DAYS-1918

Swine flu and insurance.

In January some army recruits at Fort Dix, N.J., reported to the infirmary with what appeared to be bad colds. By February 13 further investigation, in cooperation with the federal Center for Disease Control in Atlanta, indicated that the recruits had so-called swine influenza, a relative of the Spanish flu that had broken out in the closing days of World War I and killed 500,000 persons in the United States and 20 million around the world in 1918 and 1919. This March 24, President Gerald Ford announced a program to inoculate everyone in the United States against the swine flu virus. The four largest U.S. drug firms began work to prepare the vaccine. In June, however, the Warner-Lambert Company, which was expected to supply half the vaccine, notified the federal government that it was losing its liability insurance on the vaccine program July 1. The other companies reported they too were having difficulty with their insurance programs. It was feared by the insurers that they would face not just the usual quality control and related problems involved in such a large crash program, but that the controversial nature of the mass inoculation drive would lead to the filing of a great number of lawsuits. The insurers estimated that it would cost them $25 billion in legal expenses just to defend the suits, in addition to any monetary settlements awarded by the courts. The pharmaceutical companies asked for governmental intervention.

In August, after long debate, Congress passed legislation under which people claiming injury as a result of the vaccination program would sue the federal government rather than the drug firms. The government in turn would be able to sue the drug firms and medical personnel involved to recover money paid out in cases where negligence was proved. But the firms were freed of the responsibility—and the cost—of defending unwarranted suits. Nobody could predict at the time what the cost of this risk assumption will be to the government. In the past there have been few negligence claims in connection with flu shots. Public health officials think the cost may be only a few million dollars. However, based on their medical malpractice experience, some insurance executives believe the cost might run into the billions.

Product liability.

The swine flu insurance problem is, essentially, one of product liability. Increasingly, consumers have turned to courts to obtain reparations for injury resulting from purchased goods or services. A recent study estimated that about 1 million product liability cases were filed this year. As in the swine flu situation, just the cost of appearing in court to answer the suits can be a staggering sum for the insurers.

Several proposals have been made to deal with this cost problem, including the substitution of arbitration for jury determination of awards; the establishment of a relatively short period during which claims could be made; and the elimination or restriction of the contingent fee basis for paying lawyers. It has been charged that this fee system, under which lawyers receive payment only if they win a case, leads some lawyers to encourage suits.

Property and liability companies.

There was an overall improvement this year in the financial position of property and liability insurance firms, which in 1975 experienced their worst year ever in terms of losses from claims. The firms' earnings on investments rose this year, in part because of the recovery of the stock market. Increases in insurance rates and a slowing of inflation (which had helped drive up such costs as automobile repair) also benefited insurers. Reflecting the industry's improved position, indexes of insurance stocks went up even faster this year than general stock market indexes. The increasing prosperity of the insurance companies will do much to solve one problem that appeared in recent years. Property and liability companies had been unable to meet the need for new policies because losses on claims and poor investments left them with insufficient funds to satisfy state requirements for capital necessary to write insurance. Thus, even some well-qualified applicants were being refused coverage.

THANKS TO

Microsoft ® Encarta ® 2007.

நோபல் பரிசு - இலக்கியம் 2008

வட அப்பிரிக்க பாலைவனப் பகுதியில் மறைந்து போன கலாச்சாரத்தை தழுவி 1980- ம் ஆண்டில் எழுதிய ‘டிசெர்ட்’ என்ற புகழ் மிக்க நாவலின் மூலம் தன்னை உலகத்தரம் வாய்ந்த படைப்பாளியாக அடையாளம் காட்டியவர் ஜீன் மேரி குஸ்தவ் லி கிளெசியா என்ற பிரஞ்சு நாவலாசிரியர். புதிய பரிணாமத்தில் கவிதை நடையில் நாவல் எழுதும் வல்லமை படைத்தவரான இவர், 2007 - ம் ஆண்டில் எழுதிய ’பலாசினர்’ என்ற புத்தகம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்துறையின் வரலாறு, தன் வாழ்வில் திரைப்படக் கலை பெற்றுள்ள முக்கியத்துவம் பற்றியும் விவரித்துள்ளார். குழந்தைகளுக்கான புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரது இலக்கிய சேவைக்கு மகுடம் சூட்டும் விதமாக 2008 - ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Sunday, September 13, 2009

நோபல் பரிசு - வேதியல் 2008

”ஒளிரும் ஜெல்லி மீன் புரதமானது உயிரினங்களின் நோய் குறித்து ஆராய உதவுகின்கிறது. மூளைவளர்ச்சி, டியூமர் என்று அழைக்கப்படும் கட்டிகள் எற்படுதல், புற்றுநோய் செல்களின் பெருக்கம் போன்றவைகளை கண்டறிய ஜெல்லிமீன் புரதம் பயன்படுகிறது. மேலும் ஞாபகமறதி நோய் கரணமாக நரம்பு செல்களுக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆராயவும் இது உதவுகிறது. அறிவியலில் நுணணோக்கி எவ்வளவு முக்கியமோ அது போன்று ஜெல்லி புரதமும் முக்கியமானதாக விளங்குகிறது. ஜெல்லிமீன்களின் உடலில் பச்சை நிறத்தில் ஒளிரும் செல்களை சிகிச்சைக்கு உட்படுத்தி கேன்சர் செல்கள் பரவுவதையும் கண்டறியமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயனுள்ள ஆய்வுக்காக ஜப்பான் பேராசிரியர் ஒசாமு சிமோமுரா, அமெரிக்க விஞ்ஞானிகள் மார்ட்டின் ஷால்பி, ரோஜர்சியன் ஆகியோர் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசு - இயற்பியல் 2008

மூன்று பேர் இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொருட்கள் சிதறி காணப்படுவதற்கான காரணத்தையும், உப அணுநுட்பங்களை சரியாக ஆராய்ந்ததற்காகவும், அமெரிக்காவைச்சேர்ந்த ஜப்பானிய வம்சாவளி பேராசிரியர் யாசிரோ நம்பு என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மொத்த பரிசுத்தொகையில் சரிபாதி வழங்கவேண்டும். துணை அணு நுண் பொருட்களின் 3 குடும்பங்கள் இயற்கையில் இருப்பதை கணிக்க உதவும் கண்டுபிடிப்புக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் மஸ்காவா, கோபயாசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும்சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் உழகப்புகழ் பெற்றது.

நோபல் பரிசு - மருத்துவம் 2008


எய்ட்ஸ், புற்றுநோய் தாக்குதலுக்கான வைரஸ்களை கண்டறிந்த மூன்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு 2008 -ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.பெண்களின் கழுத்து, கருப்பையில் வரும் புற்றுநோய்களுக்கு காரணமான வைரஸ் அமைப்பை கண்டறிந்தவர் ஜெர்மனி விஞ்ஞானி ஹெரால்டு சுர்ஹாசன். இவருக்கு மொத்த பரிசுத் தொகையில் பாதியான ரூ. 6.5 கோடி வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகை பிரான்ஸ் ஆராய்சியாளர்கள் மான்டேனியருக்கும், பாரேசிவுன்சி என்ற பெண்மணிக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவரும் எய்ட்ஸ் தொடர்பான ஆய்வுகளில் வெற்றி கண்டவர்கள்.அதாவது எய்ட்ஸ் குறித்து அறிந்து கொள்வதற்கும், அதன் சிகிச்சை முறைக்கும், தாயிடம் இருந்து குழந்தைக்கு எவ்வாறு எய்ட்ஸ் பரவுகிறது என்பதையும் இவர்களது ஆய்வு தெளிவாக விளக்குகிறது. 1980 -ம் ஆண்டுகளில் இவர்கள் இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

முதல் இடம்

*இந்தியாவின் முதல் பெண் ரயில் டிரைவர் - சுரேகா சங்கர் யாதவ்.

*பெண்களுக்கு வக்குரிமை அளித்த முதல் நாடு - நியூசிலாந்து.

*தமிழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - முத்துலட்சுமிரெட்டி.

மாநிலங்களின் சிறப்பு

ஆண்களைவிட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் - கேரளா.

மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் - மேற்குவங்காளம்.

மக்கள் அடர்த்தி குறைந்த மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்.

கம்பளி ஆடை தயாரிப்பு தொழில் மிகுந்து காணப்படும் மாநிலங்கள் - பஞ்சாப், காஷ்மீர்.

நிலக்கடலை உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலங்கள் - குஜராத், தமிழ்நாடு.

சணல் உற்பத்தி செய்யும் மநிலங்கள் - மேற்குவங்காளம், அசாம்.

மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலம் - உத்தரப்பிரதேசம்.

படிப்பறிவு குறைந்த மநிலம் - பீகார்.

படிப்பறிவு மிகுந்த மநிலம் - கேரளா.

Saturday, September 12, 2009

களஞ்சியம்

பாராசூட்

கெமலின் என்பவரால் 1797-ம் ஆண்டு பாராசூட் கண்டுபிடிக்கப்பட்டது.

புலியின் கோடுகள்

புலியின் உடம்பில் சராசரியாக 100 கோடுகள் உள்ளன.

செங்கிஸ்கான்

மாவீரன் செங்கிஸ்கானுக்கு எழுத, படிக்கத் தெரியாது.

14-வது பிள்ளைகள்

டாக்டர் அம்பேத்கர், ரவீந்திரநாத் தாகூர், பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோர் தமது பெற்றொருக்கு 14-வது பிள்ளைகளாகப் பிறந்தனர்.

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தியைக் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள். ஆனால் பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தியயை ஏற்றி, ஊதி அனைப்பதை அறிமுகப்படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள்.

கிரகாம்பெல்லுக்கு அஞ்சலி

தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்ஸ்சாண்டர் கிரகாம்பெல் 1922-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமெரிக்காவில் அனைத்து தொலைபேசிகளையும் ஒரு நிமிடத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டன.

’டியூப் லைட்’

டியூப் லைட்டின் இரு முனைகளிலும் மின் இழைகள் உள்ளன. டியூப் லைட்டை ‘ஆன்’ செய்யும் போது மின்னிழைகள் அதீத வெப்பதுக்கு உள்ளாகின்றன. அதனால் அந்த இழை உலோகம் சிறிதளவு ஆவியாகிறது. அந்த ஆவி, குளிர்ந்த டியூப் லைட் கண்ணாடியில் படிகிறது. நாளாக நாளாக இந்தப் படிவு அதிகமாவதால் டியூப் லைட்டின் இரு புறமும் கருப்பாகத் தெரிகிறது.

Tuesday, September 8, 2009

பட்டாணி எப்படி பெரிதாகிறது

பட்டாணி உலர்வாக காணப்பட்டாலும் அதற்குள்ளும் சிறிதளவு நீருள்ளது. அதில் தான் பட்டாணியின் திடப்பொருள்கள் அடங்கியிருக்கின்றன.பொதுவாக அடர்த்தி அதிகமுள்ள திரவம், அடர்த்தி குறைந்த திரவத்துடன் மெல்லிய சவ்வால் பிரிக்கப்படும் போது, அடர்த்தி குறைந்ததிரவம் மெல்லிய சவ்வில் உள்ள நுண் துளைகள் வழியாக அடர்த்தி அதிகமான திரவத்துக்குள் சென்றுவிடும். அந்த வகையில், பட்டாணி தண்ணீரில் ஊற வைக்கப்படும் போது, பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் அடர்த்தி குறைவாக உள்ளதால் அது பட்டாணியின் தோல் வழியாக பட்டாணிக்குள் ஊடுருவுகிறது.அதனால் தான் தண்ணீரில் இட்ட பட்டாணி சில மணி நேரத்துக்குப் பிறகு உருவில் பெரிதாகிறது.

பொது அறிவு

1.ஆல்ககால்(Alcohol) சதவீதத்தை எந்த திரவமானி மூலம் தெரிந்து கொள்ளலாம்? பொதுத்திரவமானி.

2.பெருமூளையின் நேரடித் தொடர்பில்லாமல் உடலில் நடைபெறும் செயலை எப்படி கூறுவர்?
அனிச்சைசெயல்.


3.லண்டன் மாநகரம் பெரிய தீவிபத்துக்கு உள்ளான ஆண்டு எது?
1666.


4.ஈரான் நாட்டின் தலைநகர் எது?
டெக்ரான்.

5.மனித உடலில் ஒவ்வொரு செயலையும் நடத்துவது எது?
மூளை.

6.தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சி?
துகேலா.

7.ஒரு ஒளி ஆண்டு என்பது எவ்வளவு தூரமாகும்?
5,88,000 கோடி மைல்கள்.

8.பாலாறு எங்கு உற்பத்தியாகிறது?
நந்திதுர்க்கத்தில்.(கர்நாடகா மாநிலம்)


9.தொழில் புரட்சி முதலில் தோன்றிய நாடு எது?
இங்கிலாந்து.

10.உடலுக்கு கவசமாக திகழ்வது எது?
தோல்.

11.நமது தேசிய சின்னத்தில் இடம் பெற்றுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ என்பதன் பொருள் யாது?
வாய்மையெ வெல்லும்.

12.கலோரி மீட்டர் எதை அளக்க உதவுகிறது?
வெப்பம்.


13.பார்சி மதத்தின் புனித நூல் எது?
ஜெண்ட் அவஸ்தா.


14.ஒலி நாடாக்களில், ஒலிப்பதிவு செய்யும் முறையை கண்டுபிடித்தவர் யார்? போல்சன்.

15.கிரீஸ் நாட்டின் தலைநகர் எது?
ஏதென்ஸ்.

16.மாவீரன் அலெக்சாண்டர் எங்கு மரணம் அடைந்தார்?
பாபிலோனியா.

17.இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
கொல்கத்தா.


18.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை எப்போது திறக்கப்பட்டது?
1.1.2000.


19.அருணாச்சலப்பிரதேசம் எப்போது முதல் தனி மாநிலமாக செயல்பட்டு வருகிறது?
20.2.1987.


20.பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படைக் காரணம் எது?
வகுப்புவாத உணர்வு.

21.பசிபிக் கடலில் மிக ஆழமான பகுதி எது?
மரியானாட்ரென்ச்.

22.சாணக்கியரின் இயற்பெயர் என்ன?
விஷ்ணுகுப்தர்.

23.விதைகளில் காணப்படும் உணவுச் சத்து எது?
புரதம்.


24.என்.கே.வால்நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்? மூன்றறை ஆண்டுகள்.

25.பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1956.


26.கால அளவிடும் கருவியை கண்டுபிடித்தவர் யார்?
ஜான்ஹாரிசன்.

27.இந்தியாவின் பரப்பளவு என்ன?
சுமார் 33 மில்லியன் சதுர கிலோமீட்டர்.

28.விண்ணிலுள்ள மிகப் பெரிய நட்சத்திரத்தின் விட்டம் எவ்வளவு?
1.6 பில்லியன் கிலோமீட்டர்.

29.ஐ.நா.கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சாரக்கழகம்(யூனெஸ்கோ) எந்த ஆண்டு உருவானது?
1946.

30.அறிவின் வாசல்கள் என்று எதைக் கூறுவர்?
ஐம்பொறிகள்.

புற்றுநோய்

புற்றுநோய் பற்றிய அறிவியல் படிப்பு - ஆங்காலஜி.

மரபு வழியாக தோன்றும் புற்றுநோய் - ரெட்டினொ பிளாஸ்டோமா.

ரத்தப்புற்றுநோய் - கதிரியக்கம் மூலம் எற்படுகிறது.

தொல்புற்றுநோய் - சூரிய ஒளி மூலம் ஏற்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய் - புகைப்பிடிப்பதன் மூலம் ஏற்படுகிறது.

பால் சுரப்பியை தாக்கும் புற்றுநோய் - கார்சினோமா.

ரத்தசெல்லை தாக்கும் புற்றுநோய் - லுக்கேமியா.

எலும்பு தசையை தாக்கும் புற்றுநோய் - சார்கோமா.

ரத்த வெள்ளை அணுக்களை தாக்கும் புற்று நோய் - லிம்போமா.

உலகத் தமிழ் மாநாடு

உலகத் தமிழ் மாநாடு நடந்த இடங்கள்:-

1.கோலாலம்பூர் -- 1966

2.சென்னை -- 1968

3.பாரிஸ் -- 1970

4.யாழ்ப்பாணம் -- 1974

5.மதுரை -- 1981

6.கோலலம்பூர் -- 1987

7.மொரீசியஸ் -- 1989

8.தஞ்சாவூர் -- 1995

போர்கள்

சில வரலாற்றுப் போர்கள்பற்றி ...

முதல் மைசூர் போர்
1767 - 1769 (ஹைதரலி -ஸ்மித்)

இரண்டாம் மைசூர் போர் 1780 -1784 (ஹைதரலி - ஆங்கிலேயர்கள்)

முதல் கர்நாடகப் போர் 1744 - 1748 (அன்வர்தீன் - சூப்பிலிக்ஸ்)

இரண்டாம் கர்நாடகப் போர் 1748 - 1755 (சாந்தாசாகிப் - ராபர்ட்கிளைவ்)

பிளசிப் போர் - 1757 (ராபட்கிளைவ் - சிராஜ் உத்தவுலா)

பக்ஸார் போர் - 1764(மர்காசிம் - மேஜர்மண்டுரா)

முதல் மாரத்தான் போர் -1775 -1782 (ஏகோவா - நானாபர்ணாவிஸ்)

இரண்டாம் மாரத்தான் போர் -1803(போன்ஸிலி - வெல்லஸ்லி)

பிண்டாரி போர் 1814 - 1816 (ஹாஸ்டிங் -அமீன்கான்)

சிலியன்வாலா போர் - 1849 (ஆங்கிலேயர் - ஷெர்சாசிங் சீக்கியப்படை)

தீப்பிடிக்காத கூடு கட்டும் பறவை

பறவைகள் பொதுவாக இனப்பெருக்க காலத்தில் கூடு கட்டுவதில் அலாதி கவனம் எடுத்துக்கொள்வதை நாம் அறிவோம்.நேரிலும் பார்த்திருக்கலாம். ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு பறவை இனம் தீப்பிடிக்காத வகையில் கூடுகட்டுவது தெரியவந்து உள்ளது.

ஆஸ்திரேலியாவில் காணப்படும் குறிப்பிடதக்க பறவைஇனம் பவ்வர். பூனைப்பறவை என்றும் அழைக்கப்படும் இந்த இனத்தின் ஆண் பறவை, பெண் ஜோடியை கவருவதற்காக அழகிய கூடுகட்டும் தன்மை உடையது. இதன் கூடுகள் சுமார் 6 அடி நீளம் வரை கூட இருக்கும். ஒரே இடத்தில் 20 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கும்.

இந்தக் கூடுகளில் எலும்புத்துண்டுகள், கற்கள், ஓடுகள், பழத்தோல்கள் போன்றவை கலந்திருக்கும். படுக்கை வசதிக்காக தனியாக தீப்பற்றாத தன்மை உடைய இலைகளும் சேர்த்து அமைக்கப்பட்டு இருக்கும்.

ஜப்பானைச் சேர்ந்த க்யூசு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மிக்காமி என்பவர் தலைமையில் இந்த பறவைகளைக் கண்காணித்து வந்தனர். 2006-ம் ஆண்டில் 9 பறவைகள் இருந்ததில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பறவைகள் அழிந்துபோனது.

மற்ற பறவைகள் எப்படி தப்பின என்பது பற்றி ஆய்வு செய்தபோதுதான் மேற்கண்ட வகையில் அதன் கூடு அழகுற வடிவமைக்கப்பட்டு இருப்பது தீப்பிடிக்காததற்குக் காரணம் என்பது தெரியவந்தது.

கதை - பணம்

நல்லசாமி ஒரு ஏழை விவசாயி. தினமும் நேரம் பாராது உழைத்து வந்தான். சில காலத்துக்கு பிறகு கையில் ஓரளவுக்கு பணப்புழக்கம் அதிகரித்தது. பிறகு கூலி ஆட்களை வேலைக்கு அமர்த்தி வேலை செய்தான்.

ஒரு நாள் மோட்டார் வாகனத் தரகர் ஒருவர் வந்தார்.நல்ல மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வருவதாகவும் அதை வாங்கிக்கொள்கிறீர்களா? என்றும் கேட்டார். உள்ளுக்குள் மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை நல்லசாமிக்கு இருந்ததால் வாங்கிவிட்டான்.

மறு நாள் தரகர் வந்தார். தம்பீ, நீங்கள் வாங்கிய வாகனத்தை மற்றொருவர் கூடுதல் விலைக்கு கேட்கிறார். கொடுத்தால் வரும் லாபத்தில் உங்களுக்கு ஒரு பங்கு என்று ஆசை காட்டினார்.இதற்கு சம்மதித்த நல்லசாமிக்கு ரூபாய் 5,000 வரை கூடுதல் லாபம் கிடைத்தது.

இதையடுத்து நல்லசாமியும்,தரகர் மூலம் வாகனம் வாங்கி விற்கத்தொடங்கினார். தொடர்ந்து நல்ல லாபம் வந்தது. விளைச்சலும் லாபகரமாக இருந்தது.

இதனால் நல்லசாமிக்கு ஊரில் நல்ல அந்தஸ்து கிடைத்தது. அவரது தாத்தா, பணம் சேறுவது கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதை போலத்தான் எனவே நல்ல காரியங்களுக்கு செலவிட்டு நல்லபலனைத் தேடிக்கொள்ளுமாறு யோசனை கூறினார்.

ஆனால் நல்லசாமி, தாத்தாவின் யோசனையை கண்டும் காணாமல் இருந்தான். ஒரு நாள் பக்கத்து நட்டு உயர்ரக வாகனம் ஒன்று விற்பனைக்கு வந்தது. விலை ருபாய் 15 லட்சம் வரை போனது. மகிழ்சியில் இருந்த அவனை திடீரென்று போலீசார் கைது செய்தனர். அந்த வெளிநாட்டு வாகனம் திருடப்பட்டது என்று தெரியவந்தது. இதனால் பல ஆண்டு லாபம் ஒரேயடியாக கரைந்தது.

அப்போதுதான் நல்லசாமிக்கு தனது தாத்தா கூறியது ஞாபகத்தில் எதிரொலித்தன.

‘கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று’


இதன் பொருள்,பெருஞ்செல்வம் செருவது கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது. அச்செல்வம் கூத்து முடிந்ததும் கலைந்துபோகும் கூட்டத்தைப் போல மறைந்துவிடும் என்பதாகும்.

எனவே பொருளை சேர்க்கும் விதத்தில் சேர்த்து நல்ல வகைக்கு பயன்படுத்த வேண்டும்.

Sunday, September 6, 2009

அதிசயக் கிளி

குறைவான அறிவு உடையவர்களை ‘பறவை மூளைக்காரர்கள்’ என்று கூறுவார்கள்.அப்படிக் கூறுபவர்கள்’அலெக்ஸ்’ என்ற கிளியைப் பற்றி அறிந்தால் தொடர்ந்து அப்படிக் கூறமாட்டார்கள். இந்த ஆப்பிரிக்க பழுப்பு நிறக் கிளி உலகப் புகழ்பெற்றது. இந்தக் கிளி ஆங்கிலத்தில் 150 வார்த்தைகளை அறிந்திருந்தது. மொழிப்பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சி குரங்குகளை விட இது திறமை வாய்ந்ததாக இருந்தது.
அலெக்ஸ் கடினமான வாக்கியங்களை உருவாக்கிப் பேசியது, பல்வெறு வடிவங்கள், நிறங்களை அடையாளம் கண்டது. ஐரின் பெப்பர் பர்க் என்ற பேராசிரியர் ஒரு வீட்டு விலங்ககள் கடையிலிருந்து இந்தக் கிளியை வாங்கிவந்தார். அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பிராண்டைஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பறவைகளுக்கான கற்பித்தல் சோதனையில் இக்கிளி சேர்க்கப்பட்டுள்ளது.

தகவல் களஞ்சியம்

பள்ளிக் குழந்தைகளுக்கான நர்சரி பாடல்களை உலகிலேயே முதல் முறையகத் தொகுத்தவர் ’தாமஸ் பிளிட்’ என்பவர் ஆவார்.


விலங்குகளில் ஊமையானது ஒட்டகச்சிவிங்கி ஆகும். இதனால் சாதாரண ஒலியைக் கூட எழுப்பமுடியாது.


முள்ளம் பன்றியின் முதுகில் உள்ள முட்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் ஆகும்.


பெருக்கலுக்கு ‘x’ என்ற குறியை முதன் முதலில் ‘ஆதிரட்’ என்ற மதகுரு பயன்படுத்தினார்.


ஞாயிற்றுக்கிழமையை முதன் முதலில் விடுமுறை நாளாக அறிவித்த ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன்.


பூமியின் நிலப்பரப்பில் இருப்பது போல கடலுக்குள்ளும் எரிமலைகள் உள்ளன. அவை வெடித்தால் பெரிய அலைகள் ஏற்ப்பட்டு கடற்கரை ஒரத்தில் உள்ள இடங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும்.