அவ்லெட் அந்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்தது. 35,000 வகை அந்துப்பூச்சிகள் உலகம் முழுவதும் பறந்து காணப்படுகிறது. இது பெரிய வகை அந்துப்பூச்சி. இரவு நேரங்களின் பூக்களில் தேன் குடிக்க வரும். வவ்வால்கள் சில வகை அந்துப்பூச்சிகளை விரும்பிசாப்பிடும் அவ்லெட் பூச்சியை எளிதில் பிடிக்க முடியாது. ஏனென்றால் இது பாதுகாப்பான உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. வவ்வால்கள் பயங்கரமான சத்தத்தை எழுப்பிஅந்த சத்தம் இரையின் மீது பட்டு எதிரொலிக்கக்கூடிய சத்தத்தை வைத்து திடீரென பாய்ந்து இருட்டில் வேட்டையாடும்.
வவ்வால் வரும் சத்தத்தை அவ்லெட் தன் சிறிய காதுகள் மூலம் அறிந்து நைசாக தப்பிவிடும் அந்துப்பூச்சியின் இறக்கைகள் வவ்வால்களின் சத்தத்தை கேட்டதும் ஒருவகை பயம் எற்படும். பயம் ஏற்படும் போதுஇறக்கைகளை வேகமாக அடித்தபடி வளைந்து வளைந்து பறக்கிறது. இதனால் வவ்வால்கள் எளிதில் இவற்றை பிடிக்கமுடிவதில்லை
No comments:
Post a Comment