Tuesday, September 8, 2009

கதை - பணம்

நல்லசாமி ஒரு ஏழை விவசாயி. தினமும் நேரம் பாராது உழைத்து வந்தான். சில காலத்துக்கு பிறகு கையில் ஓரளவுக்கு பணப்புழக்கம் அதிகரித்தது. பிறகு கூலி ஆட்களை வேலைக்கு அமர்த்தி வேலை செய்தான்.

ஒரு நாள் மோட்டார் வாகனத் தரகர் ஒருவர் வந்தார்.நல்ல மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வருவதாகவும் அதை வாங்கிக்கொள்கிறீர்களா? என்றும் கேட்டார். உள்ளுக்குள் மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை நல்லசாமிக்கு இருந்ததால் வாங்கிவிட்டான்.

மறு நாள் தரகர் வந்தார். தம்பீ, நீங்கள் வாங்கிய வாகனத்தை மற்றொருவர் கூடுதல் விலைக்கு கேட்கிறார். கொடுத்தால் வரும் லாபத்தில் உங்களுக்கு ஒரு பங்கு என்று ஆசை காட்டினார்.இதற்கு சம்மதித்த நல்லசாமிக்கு ரூபாய் 5,000 வரை கூடுதல் லாபம் கிடைத்தது.

இதையடுத்து நல்லசாமியும்,தரகர் மூலம் வாகனம் வாங்கி விற்கத்தொடங்கினார். தொடர்ந்து நல்ல லாபம் வந்தது. விளைச்சலும் லாபகரமாக இருந்தது.

இதனால் நல்லசாமிக்கு ஊரில் நல்ல அந்தஸ்து கிடைத்தது. அவரது தாத்தா, பணம் சேறுவது கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதை போலத்தான் எனவே நல்ல காரியங்களுக்கு செலவிட்டு நல்லபலனைத் தேடிக்கொள்ளுமாறு யோசனை கூறினார்.

ஆனால் நல்லசாமி, தாத்தாவின் யோசனையை கண்டும் காணாமல் இருந்தான். ஒரு நாள் பக்கத்து நட்டு உயர்ரக வாகனம் ஒன்று விற்பனைக்கு வந்தது. விலை ருபாய் 15 லட்சம் வரை போனது. மகிழ்சியில் இருந்த அவனை திடீரென்று போலீசார் கைது செய்தனர். அந்த வெளிநாட்டு வாகனம் திருடப்பட்டது என்று தெரியவந்தது. இதனால் பல ஆண்டு லாபம் ஒரேயடியாக கரைந்தது.

அப்போதுதான் நல்லசாமிக்கு தனது தாத்தா கூறியது ஞாபகத்தில் எதிரொலித்தன.

‘கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று’


இதன் பொருள்,பெருஞ்செல்வம் செருவது கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது. அச்செல்வம் கூத்து முடிந்ததும் கலைந்துபோகும் கூட்டத்தைப் போல மறைந்துவிடும் என்பதாகும்.

எனவே பொருளை சேர்க்கும் விதத்தில் சேர்த்து நல்ல வகைக்கு பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment