ஒரு வியாபாரி, கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு மைனாவை விலைக்கு வாங்கிவந்து தனது படுக்கையறை ஜன்னல் அருகே தொங்கவிட்டார். அவர் ஆச்சர்யப்படும் விதமாக பகல் முழுவதும் அமைதியாக இருந்த மைனா ,இரவில் சத்தமாகப் பாடியது. மைனாவின் சத்தத்தை தொல்லையாகக்கருதிய வியாபாரி,கூண்டை தோட்டத்தில் கொண்டுபோய் வைத்தார்.
ஒரு நாள் இரவு ஒரு வவ்வால் மைனாவின் கூண்டருகே பறந்து வந்தது. யாரும் கேட்காத இரவு நேரத்தில் ஏன் இந்த மைனா பாடிக்கொண்டிருக்கிறது என்று அந்த வவ்வால் நினைத்தது. ‘ஏன் இப்படி உனது அழகான குரலை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய்?’ என்று மைனாவிடம் கேட்டது.
உடனே அந்த மைனா,’அதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது’. ஒரு நாள் நான் மரத்தில் அமர்ந்து சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தேன்.எனது பாடலால் கவரப்பட்டு அங்கு வந்த ஒரு வேடன், பொறி வைத்து என்னைப் பிடித்துவிட்டான். அவன் என்னைப் பிடித்ததுமேஇந்த வியாபாரியிடம் விற்றுவிட்டான்’. என்றது அந்த மைனா.
தொடர்ந்து கூறிய மைனா ‘அன்று நான் நல்ல பாடம் கற்றேன். அன்று முதல் நான் பகலில் பாடுவதில்லை.இரவில் தான் பாடுகிறேன் என்றது.
அதிக் கேட்ட வவ்வால் சிரித்தது.’அதை நீ இப்போது உணர்ந்து என்ன பயன்? நீ பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்படும் முன் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்றது.
நீதி: கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யலாமா?.
No comments:
Post a Comment