Thursday, September 17, 2009

நோபல் பரிசு - பொருளாதாரம் 2008

அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்க பேராசிரியர் பால் க்ரூக்மேனுக்கு (வயது 55) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. தடையில்லா வர்த்தகம், உலகமயமாக்கலின் விளைவுகள், நகரமயமாதலுக்கான காரணிகள் எவை? போன்றவைகளுக்கு புதிய பொருளாதார கோட்பாடுகளின் மூலம் விடை கண்டுள்ளார். இவர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறையில் பேராசிரியராக பணியற்றி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் கூட. பன்னாட்டு வணிகம் பொருளாதார புவியியல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து ஆரய்ந்தது போன்ற பொருளாதாரத் துறை சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துறை நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment