புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து மிக மிக அவசியம். இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவக்கவும் பயன்படுகிறது.புரதச்சத்து ஜீரணநீர்கள், நொதிகள், சுரப்பிகளின் சுரப்பு நீர்கள், வைட்டமீன்கள் ‘ஹீமோ குளோபின்’ எனும் ரத்தத்தின் புரதம் இவற்றைதயார் செய்வதற்கு மிகவும் இன்றியமையாததாகும். நகம்,முடி இவை வளருவதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.
No comments:
Post a Comment