* பூமியைச் சுற்றிலும் வாயு மண்டலம் நூற்றுக்கணக்கான மைல் உயரம் வரை பரவி உள்ளது. இதன் எடை 50 லட்சம் கன கிலோ மீட்டர் தண்ணீரின் எடைக்குச் சமம். ஆனல் இது பூமியின் மொத்த எடையில் 10 லட்சத்தில் ஒரு பகுதிதான்.
* கடல் மட்டத்தில் ஒரு சதுர செண்டிமீட்டர் பரப்பளவில் காணப்படும் காற்றழுத்தம் 1,033 கிராம்கள்.
* காற்றின் எடை உயரத்திற்க்கு தகுந்தாற் போல்மாறும். தரைமட்டப் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் இருக்கும். இங்கு ஒரு கனமீட்டர் அளவுள்ள கற்றின் எடை சுமார் 1.290 கிராம்கள். 20 கி. மீ உயரத்தில் ஒரு கன சென்டிமீட்டர் அளவுள்ள காற்றின் எடை சுமார் 90 கிராம்கள். 140 கி.மீ உயரத்தில் 4 கிராம் மட்டும்தான்.
* காற்றுக்கும் எடை உண்டு என்பதை நாம் 17 - ம் நூற்றாண்டில் தான் அறிந்து கொண்டோம். 19 - ம் நூற்றாண்டில் இறுதியில் காற்றில் பறக்கும் பலூன்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
* வாயு மண்டலம் நீண்ட கோழிமுட்டை வடிவத்தில் காணப்படுகிறது. இந்த வாயுமண்டலத்துக்கு 1 லட்சம் கி.மீ நீளமுள்ள ஒரு வால் இருக்கிறது. இந்த வால்பகுதி சூரிய கிரகணங்களின் அழுத்தத்தால் ஒன்றுபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
* வாயு மண்டலத்தில் அதிகமாக காணப்படுவது நைட்ரஜன் வாயு. இது காற்றில் 78 சதவீதம் நிரம்பி இருக்கிறது. அடுத்ததாக பிராணவாயு எனப்படும் ஆக்ஸிசன் 21 சதவீதம் உள்ளது.
*வளி மண்டலத்தில் வாயுக்களைத் தவிர துசி துகள்களும் நிரம்பி இருக்கின்றன. எரிமலை வெடிப்புகள், பாறைச் சிதைவுகள், எரியும் பொருட்களில் இருந்து கிளம்பும் தாவரப் பொருட்களே வாயு மண்டலத்தில் தூசுகளாக கலந்திருக்கின்றன.
*வாயு மண்டலத்தில் ரேடியம், கால்சியம், மக்னீசியம்,இரும்பு போன்ற உலோகங்களும் மிக மிக குறைந்த அளவில் காணப்படுகின்றன.
*மின் வீச்சு மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் பிராண வாயு பாதிக்கப்பட்டு ஓசோனாக பரிணமிக்கிறது.
No comments:
Post a Comment