Friday, September 4, 2009

’ஒலி’ யில் ஒரு சாதனை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் அமர்போஸ், புகழ்பெற்ற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளார். மின்னியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவரான போஸ், அலெக்சாண்டர் கிரகாம்பெல்,தமஸ் ஆல்வா எடிசன் போன்ற புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவில் வளர்க்கப்ப்பட்ட போஸின் அப்பா இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்.அம்மா அமெரிக்காவைச் சேர்ந்தவர். இரும்புக்கழிவை இறக்குமதி செய்து விற்பனை செய்துவந்த போஸின் தந்தை,இந்தியாவில் ஆங்கிலேயரின் அடக்குமுறை பற்றி போஸிடம் கூறி வந்தார். 12 வயதில், சாரண சிறூவனான போஸ், வனொலிகளை பழுது பார்பதற்குத் தானகவே கற்றுக்கொண்டார்.அது தொடர்பான ஒரு தொழிலைத் தொடங்கி, உள்ளூரிலேயே பெரியதாக்கினார்.1956-ம் ஆண்டு போஸ் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபோது தனது முதல் நவீன ‘டேப் ரெக்கார்டரை’ வாங்கினார். அதன் ஒலித் துல்லியம் அவரைக் கவர்ந்தது. உடனே கல்லூரி ஒலி ஆய்வகத்துக்குள் புகுந்து அல்லும்பகலும் ஆய்வு மேற்கொண்ட போஸ்,ஓர் அற்புதமான ஒலிபெருக்கியை உருவாக்கினார்.அவை கச்சேரி அரங்கில் நேரடியாகக் கேட்பதைப் போன்ற உணர்வை உருவாக்கின. தற்போது ‘போஸ் ஸ்பீக்கர்கள்’உலகம் முழுவதும் ‘நம்பர் 1’ ஆக உள்ளாது.

No comments:

Post a Comment