டைனொசர் ஊர்வனப் பிரிவைச் சேர்ந்த உயிரினம். சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வழ்ந்தவை. புதை படிவங்களிலிருந்து ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறோம். இவற்றில் மிகப் பெரிய உருவம் கொண்டவையும், கோழிகள் அளவில் சிறியதாகவும் இருந்திருக்கின்றன. பறவைகளின் விலா எலும்புகள் போல் அமைப்பைப் பெற்ற பறவை இன டைனொசர்கள், பல்லியின் விலா எலும்புகள் போல் அமைப்பைப் பெற்ற பல்லி இன டைனொசர்கள் என்று இரண்டு வகை டைனொசர்கள் இருந்தன.
டைனொசர்களில் தாவர உண்ணிகளும், மாமிச உண்ணிகளும் இருந்திருக்கின்றன. தாவரஉண்ணிகளில் மிகப் பெரியது பிராக்கியோசாரஸ். இது நாளொன்றுக்கு 1 டன் இலை, தளைகளைத் தின்னும். ஊன் உண்ணிகளில் மிகப் பெரியது டைரன்னொசார்ரெக்ஸ். இது 15 மீட்டர் நீளமும், 6 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் ஒவ்வொரு பல்லும் 15 செ.மீட்டர் நீளமுடையது. டைனொசரஸ் எப்படி அடியோடுமறைந்து போயின என்பது இன்றும் புரியாத புதிர்களில் ஒன்று. 15 கோடிஆண்டுகள் இப்புவியை ஆண்ட இனம் எப்படியோ மாயமாக மறைந்து விட்டது. சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியின் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாறுதல்கள் இவற்றின் அழிவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
சதுப்பு நில பகுதிகளும், ஆழமற்ற கடல்களும் அன்றைய மித வெப்பமான் சூழ்நிலையில் வளர்ந்த பலவகைத் தாவரங்களை உணவாகக் கொண்டு டைனோசர்கள் வாழ்ந்து வந்தன. காலப்போக்கில் புவியின் தட்பவெப்ப நிலையில் மாறுதல் ஏற்ப்பட்டு குளிர் அதிகமாயிற்று. பல பகுதிகள் வறண்டு போயின. புது வகை தாவரங்கள் தோன்றின. இவற்றை உணவாக ஏற்க முடியாததால் டைனோசர்கள் அழியத்தொடங்கின.
விண்வெளிக்கற்களும் காஸ்மிக் கதிர்களும் டைனோசர்களை அழித்துவிட்டன. ஆனால் மற்ற உயிர்களை விட்டுவிட்டு டைனோசர்களை மட்டும் ஏன் அழிக்கவேண்டும் என்ற கேள்விக்கு சரியான விடை தெரியவில்லை... கண்ட நகர்வு காரணமாக சில உயிரினங்கள் நீர்சூழ் பரப்பில் அகப்பட்டு உணவின்றி இறந்தன. வேறுசில ஒருவகை பாக்டீரியாவினால் நோய் தாக்கி இறந்தன.
நன்றி
தினமணி, சிறுவர்மணி,27-12-2008.
No comments:
Post a Comment