Sunday, September 20, 2009

அறிவுக்கு

பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.

கடல் சிங்கங்கள் அண்டார்டிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றது.

சிட்டுக்குருவியின் அறிவியல் பெயர் புளோசிடாபாசர்.

இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்.

திருக்குறள் அனத்தும் குறள் வெண்பா வகையைச் சேர்ந்தவை. வெண்பாவால் ஆன முதல் நூலும் ஒரே நூலும் இதுவே.

1967-ல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெர்னார்ட் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையைசெய்தார்.

கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையை அல்ராசவுண்டு மூலம் அறியும் முறை முதன் முதலில் 1958 - ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் கிரிக்கட் அசோசியேசன் 1926-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கிரிக்கட் வர்ணணை 1936-ம் ஆண்டு பம்பாய் நகரில் ரேடியோ நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் இது வரை யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. காரணம் நோபல் பரிசினை நிறுவிய ஆல்ப்ரெட் நோபல் எழுதி வைத்த குறிப்பில் விண்வெளி ஆராய்ச்சி இடம் பெறவில்லை.

உலகின் பெரிய நீர் வீழ்ச்சி நயாகரா.

தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரங்களில் ஒன்று தொட்டப்பெட்டா.

No comments:

Post a Comment