Sunday, September 6, 2009

அதிசயக் கிளி

குறைவான அறிவு உடையவர்களை ‘பறவை மூளைக்காரர்கள்’ என்று கூறுவார்கள்.அப்படிக் கூறுபவர்கள்’அலெக்ஸ்’ என்ற கிளியைப் பற்றி அறிந்தால் தொடர்ந்து அப்படிக் கூறமாட்டார்கள். இந்த ஆப்பிரிக்க பழுப்பு நிறக் கிளி உலகப் புகழ்பெற்றது. இந்தக் கிளி ஆங்கிலத்தில் 150 வார்த்தைகளை அறிந்திருந்தது. மொழிப்பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சி குரங்குகளை விட இது திறமை வாய்ந்ததாக இருந்தது.
அலெக்ஸ் கடினமான வாக்கியங்களை உருவாக்கிப் பேசியது, பல்வெறு வடிவங்கள், நிறங்களை அடையாளம் கண்டது. ஐரின் பெப்பர் பர்க் என்ற பேராசிரியர் ஒரு வீட்டு விலங்ககள் கடையிலிருந்து இந்தக் கிளியை வாங்கிவந்தார். அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பிராண்டைஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பறவைகளுக்கான கற்பித்தல் சோதனையில் இக்கிளி சேர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment