வட அப்பிரிக்க பாலைவனப் பகுதியில் மறைந்து போன கலாச்சாரத்தை தழுவி 1980- ம் ஆண்டில் எழுதிய ‘டிசெர்ட்’ என்ற புகழ் மிக்க நாவலின் மூலம் தன்னை உலகத்தரம் வாய்ந்த படைப்பாளியாக அடையாளம் காட்டியவர் ஜீன் மேரி குஸ்தவ் லி கிளெசியா என்ற பிரஞ்சு நாவலாசிரியர். புதிய பரிணாமத்தில் கவிதை நடையில் நாவல் எழுதும் வல்லமை படைத்தவரான இவர், 2007 - ம் ஆண்டில் எழுதிய ’பலாசினர்’ என்ற புத்தகம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்துறையின் வரலாறு, தன் வாழ்வில் திரைப்படக் கலை பெற்றுள்ள முக்கியத்துவம் பற்றியும் விவரித்துள்ளார். குழந்தைகளுக்கான புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரது இலக்கிய சேவைக்கு மகுடம் சூட்டும் விதமாக 2008 - ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment