Tuesday, September 8, 2009

தீப்பிடிக்காத கூடு கட்டும் பறவை

பறவைகள் பொதுவாக இனப்பெருக்க காலத்தில் கூடு கட்டுவதில் அலாதி கவனம் எடுத்துக்கொள்வதை நாம் அறிவோம்.நேரிலும் பார்த்திருக்கலாம். ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு பறவை இனம் தீப்பிடிக்காத வகையில் கூடுகட்டுவது தெரியவந்து உள்ளது.

ஆஸ்திரேலியாவில் காணப்படும் குறிப்பிடதக்க பறவைஇனம் பவ்வர். பூனைப்பறவை என்றும் அழைக்கப்படும் இந்த இனத்தின் ஆண் பறவை, பெண் ஜோடியை கவருவதற்காக அழகிய கூடுகட்டும் தன்மை உடையது. இதன் கூடுகள் சுமார் 6 அடி நீளம் வரை கூட இருக்கும். ஒரே இடத்தில் 20 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கும்.

இந்தக் கூடுகளில் எலும்புத்துண்டுகள், கற்கள், ஓடுகள், பழத்தோல்கள் போன்றவை கலந்திருக்கும். படுக்கை வசதிக்காக தனியாக தீப்பற்றாத தன்மை உடைய இலைகளும் சேர்த்து அமைக்கப்பட்டு இருக்கும்.

ஜப்பானைச் சேர்ந்த க்யூசு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மிக்காமி என்பவர் தலைமையில் இந்த பறவைகளைக் கண்காணித்து வந்தனர். 2006-ம் ஆண்டில் 9 பறவைகள் இருந்ததில் சமீபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பறவைகள் அழிந்துபோனது.

மற்ற பறவைகள் எப்படி தப்பின என்பது பற்றி ஆய்வு செய்தபோதுதான் மேற்கண்ட வகையில் அதன் கூடு அழகுற வடிவமைக்கப்பட்டு இருப்பது தீப்பிடிக்காததற்குக் காரணம் என்பது தெரியவந்தது.

No comments:

Post a Comment