பட்டாணி உலர்வாக காணப்பட்டாலும் அதற்குள்ளும் சிறிதளவு நீருள்ளது. அதில் தான் பட்டாணியின் திடப்பொருள்கள் அடங்கியிருக்கின்றன.பொதுவாக அடர்த்தி அதிகமுள்ள திரவம், அடர்த்தி குறைந்த திரவத்துடன் மெல்லிய சவ்வால் பிரிக்கப்படும் போது, அடர்த்தி குறைந்ததிரவம் மெல்லிய சவ்வில் உள்ள நுண் துளைகள் வழியாக அடர்த்தி அதிகமான திரவத்துக்குள் சென்றுவிடும். அந்த வகையில், பட்டாணி தண்ணீரில் ஊற வைக்கப்படும் போது, பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் அடர்த்தி குறைவாக உள்ளதால் அது பட்டாணியின் தோல் வழியாக பட்டாணிக்குள் ஊடுருவுகிறது.அதனால் தான் தண்ணீரில் இட்ட பட்டாணி சில மணி நேரத்துக்குப் பிறகு உருவில் பெரிதாகிறது.
No comments:
Post a Comment