* வலிமை மிகுந்த போலார் கரடி 1,320 பவுண்டு எடை இருக்கும். வளர்ந்த மனிதனை விட 10 மடங்கு அதிகம். மண்ணில் காணப்படும் மிகப்பெரிய மாமிசம் திண்ணும் பாலூட்டி இனம் இது தான். வளர்ந்த கரடி ; மீன் மற்றும் சீலை தங்கள் எடைக்கு நிகரான பெலூகா திமிங்கலத்தையும் விருப்பத்துடன் சாப்பிடும்.
வேட்டையாடும் போது போலார் கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்துவிடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.
புதிதாய் பூமியைப் பார்த்த போலார் கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவைகள் மிக விரைவாக குண்டாக கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே அதிஷ்டவசமாக அவற்றின் தாய்ப்பால் மிக செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.
வட ஐரோப்பா, வட ஆசியா, மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. ஆர்டிக் சமுத்திரம் உறையவில்லை என்றாலும் தங்களின் கம்பளித் தோலின் உதவியால் அட்டகாசமாய் நீச்சலடிக்கும்.
No comments:
Post a Comment