Thursday, September 17, 2009

நோபல் பரிசு - அமைதி 2008

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் சர்வதேச மோதல்களுக்கு தீர்வு எற்பட அமைதி முயற்சிகளை மேற்கொண்டவர், பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி வயது 71. இந்தோனேசிய அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. இதில் 15 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மார்ட்டி அதிசாரி மேற்பார்வையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் கடந்த 2005 - ம் ஆண்டில் தீர்வு எற்பட்டது. ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தனது 36 - வது வயதில் தூதர் பொறுப்பிற்கு வந்தார். 1994 - ம் ஆண்டில் பின்லாந்தின் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமையைப் பெற்றார். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment