Sunday, September 13, 2009
நோபல் பரிசு - மருத்துவம் 2008
எய்ட்ஸ், புற்றுநோய் தாக்குதலுக்கான வைரஸ்களை கண்டறிந்த மூன்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு 2008 -ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.பெண்களின் கழுத்து, கருப்பையில் வரும் புற்றுநோய்களுக்கு காரணமான வைரஸ் அமைப்பை கண்டறிந்தவர் ஜெர்மனி விஞ்ஞானி ஹெரால்டு சுர்ஹாசன். இவருக்கு மொத்த பரிசுத் தொகையில் பாதியான ரூ. 6.5 கோடி வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகை பிரான்ஸ் ஆராய்சியாளர்கள் மான்டேனியருக்கும், பாரேசிவுன்சி என்ற பெண்மணிக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவரும் எய்ட்ஸ் தொடர்பான ஆய்வுகளில் வெற்றி கண்டவர்கள்.அதாவது எய்ட்ஸ் குறித்து அறிந்து கொள்வதற்கும், அதன் சிகிச்சை முறைக்கும், தாயிடம் இருந்து குழந்தைக்கு எவ்வாறு எய்ட்ஸ் பரவுகிறது என்பதையும் இவர்களது ஆய்வு தெளிவாக விளக்குகிறது. 1980 -ம் ஆண்டுகளில் இவர்கள் இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment