Sunday, September 20, 2009

கார் நிஜமாகவே பறக்கும்

*1949 ம் ஆண்டு அமெரிக்காவின் கண்டுபிடிப்பாளர் மோல்ட் டெய்லர் பிற்காலத்தில் விமானமாக மாறிய கார் ஒன்றை வடிவமைத்தார். 1953 ம் ஆண்டிற்குள் இந்த கார் 25,000 மைல்கள் பறந்துவிட்டது.

*1950 களில் அமெரிக்க கார் வடிவமைப்பாளர்கள் கூர்மையான மீனின் செதில்கள் போன்ற துண்டு பகுதிகளை காரின் பின் பகுதியில் இணைக்க ஆரம்பித்தனர். அந்த காலத்தில் சண்டை போட உதவும் ஜெட்களின் வடிவமைப்பை காப்பியடித்து காரில் அது போல செய்தனர். காரின் வால்பகுதி செதில்களில் வரிசையாய் எப்பொழுதும் விளக்குகள் இருக்கும். இந்தப் பெரிய, நீண்ட கார் உலோக வகை பூச்சுகளை தாங்கிய உடலமைப்புடன் இருந்தன.

*’கல்’
என்பது மிக நீண்ட சிறகுகள் உடைய கடற்பறவை. 1952 ம் ஆண்டில் வந்த மெர்சிடீஸ் 300 எஸ்.எல். கார் மாடலில் ‘கல்’ பறவை போல மேல்புறம், விரியும் கதவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மாடல், விபத்தின் போது கதவுகளை திறக்க முடியாதபடி ஜாமாகி விடுவதால் கைவிடப்பட்டது.

*போர்டு கார் கம்பனியின், ‘இடிப்பறவை’ என்னும் காருக்கான செல்லப் பெயர் தான் ‘டீ- பறவை’. இதன் முதல் மாடல் 1953 ம் ஆண்டு அறிமுகமானது. மிகப் பெரிய மாற்றிக் கொள்ளத் தக்க இரண்டு இருக்கை கொண்டது.1950 ம் ஆண்டு வாக்கில் அமெரிக்க தயாரிப்பாளர்கள் எரிவாயுவில் இயங்கக்கூடிய பெரிய இடிப் பறவை போன்ற கார்களைத் தயாரித்தனர்.

No comments:

Post a Comment