Saturday, September 5, 2009

சிறுவர் பாடல் - இந்தியா ஜொலிக்கும்

இந்தியா ஜொலிக்கும்

முத்தான குழந்தைகளே
முதல் மணி அடிக்கும்முன்
வகுப்பினில் இருப்போம்
கடைசிமணி அடித்தபின்
விவேகமாய் பறப்போம்!

கவனமாய் கற்போம்
பயன்தரும் என்றும்
ஒழுங்காய் நிற்போம்
உயர்வோம் என்றும்!

மாலையில் மனம் போல்
விழையாடி முடிப்போம்
உடல் சுத்தம் செய்து
படிக்கத் துடிப்போம்!

வீட்டுப்பாடம்
செய்ய மறவோம்
நாட்டு நடப்பை
நாளிதழில் அறிவோம்!

தொலைக்காட்சிப் பெட்டிக்கு
காய் விட்டுவிடுவோம்
தொழிற்கல்வி சேர்ந்தபின்
இணையம் தொடுவோம்!

நமக்குள் இருக்கும்
திறமைகள் ஒளிரும்
நாளைய இந்தியா
நம்மால் மிளிரும்!

No comments:

Post a Comment