தமிழகத்துக்கு எத்தனையோ பெருமை உண்டு. இதோ ஒரு பறவையின் பெருமை. அரிய பறவையான இருவாச்சி, தனது ஜொடியை உயிர் பிரியும் வரை மற்றிக்கொள்வதில்லை. இருவாச்சியின் பூர்வீகம் தமிழ்நாடு தான். அழகிய நீண்ட வளைவான அலகு ,கொம்பு போன்று உள்ளது. இந்த அலகைக் கொண்டு பொந்துகளில் அழகிய கூடு கட்டுகிறது. பிரவுன், கருப்பு, கருஞ்சிவப்பு, மஞ்சள் போன்ற நான்கு வண்ணங்களைக் கொண்டது. பறக்கும் போது ஹெலிகாப்டர் பறப்பதை போன்ற ஒலி எழுப்பும்
பெண் பறவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் மட்டும் காய்ந்த மரத்தில் பொந்தை அமைக்கும். பெண் பறவை மட்டுமே கூட்டில் வசிக்கும். பெண் பறவை முட்டையிடும் காலம் வரை ஆண் பறவையே இரையை சேகரித்துக் கொடுக்கும். குளுமையாக வைத்திருக்க பொந்தில் பசும் இலை, தலைகளை கொண்டு ஆண் பறவை நிரப்பும். தாயின் மூன்று மாத அரவணைப்புக்குப் பிறகு குஞ்சுகள் தானே இரை தேடச் செல்லும்.
No comments:
Post a Comment