Sunday, September 20, 2009

’நதிக் குகை’

லாவோஸ் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘நேசனல் ஜியாகிராபிக்’ குழுவால் ‘சேபான் பாய் நதிக் குகை’ கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகிலேயே பெரிய நதிக் குகைகளில் ஒன்றாகும். இதன் மொத்த நீளம் ஒன்பதரை கி.மீ. ஆகும். இந்த குகைக்குள் பிரமாண்ட சிலந்திகள் காணப்படுகின்றன. சில சிலந்திகள் 25 செ.மீ. அளவுக்குப் பெரியவை ஆகும். இதன் கூரைப் பகுதியில் உயர்ந்த கூம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. என்வே இந்த குகையின் ஒரு பகுதி ‘தேவாலயம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்த குகைக்குள் தண்ணீர் தொடர்ந்து சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறதோ அது நதிக் குகை என்கிறார்கள். குகை வழியாக நீண்ட காலமாகப் பாயும் தண்ணீர், நீண்ட ஓர் ஒழுங்கற்ற பாதையை உருவாக்குகிறது. இந்த குகைக்குள் சொட்டு சொட்டாக வடியும் தண்ணீரால் தாதுக்கள் சேர்ந்து பாறைப் படிவுகள் உருவாகின்றன. குகையின் மேற்பகுதியிலிருந்து தொங்கும் பாறைப் படிவுகள் ‘ஸ்டாலக்டைட்ஸ்’ என்றும் தரைப் பகுதியிலிருந்து மேலே எழுபவை ‘ஸ்டாலக் மைட்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment