இளைஞரான செஸ்டர் கார்ல்சன், ஒரு மின்சார உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் காப்புரிமை விசயங்களைக் கவனிக்கும் அலுவலராக வேலை பார்த்தார். தனது நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய திட்டங்களையும் காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக கார்ல்சன் ஒரே விசயத்தின் பல்வேறு நகல்களை உருவாக்க வேண்டிருந்தது. அந்த நகல்களை கார்ல்சனே தனது கைப்பட எழுதினார். அவர் கிட்டப்பார்வை மற்றும் மூட்டுவலியாலும் அவதிப்பட்டார். எனவே தனது கஷ்டத்தைக் குறைக்க மாற்று வலியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அதனால் அவர் தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் தனது வீட்டு சமயலறையில் அமர்ந்து ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது, சில பொருட்கள் வெளிச்சத்தில் காட்டப்படும் போது அவை தமது மின்னியல் தன்மையை மாற்றிக் கொள்வதைக் கண்டார். அது ஒளி கடத்தல் தன்மை எனப்பட்டது. பல்லாண்டு கால ஆராய்ச்சிக்குப் பின் அவர் 1942-ம் ஆண்டு ஒரு நகலெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துப் பதிவு செய்தார். அதற்கு ‘எலக்ட்ரிக் போட்டோகிராபி’ என்று அவர் பெயர் சூட்டினார்.
அதன் பின் 20அண்டுகள் கழிந்த பின்னர் கார்ல்சனின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் இயந்திரத்தைத் தயாரிக்க ஒரு நிறுவனம் முன் வந்தது.
ஐ.பி.எம்.ஜி.இ.,ஆர்.சி.ஏ.போன்ற பிரபல நிறுவனங்கள் கார்ல்சனின் தொழில்நுட்பத்தை ஏற்க மறுத்துவிட்டன. கடைசியாகத்தான் 1960-ம் ஆண்டில் கலாய்டு நிறுவனம் அவரது யோசனையை ஏற்றது.
அந்த நிறுவனம் பிறகு ’ஜெராக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜெராக்ஸ் என்ற அப்பெயரே பரவலாகிவிட்டதால் ‘போட்டோகாபி’ என்ற உண்மையான பெயருக்குப் பதிலாக ‘ஜெராக்ஸ்’ என்பதே நிலைத்துவிட்டது.
Supper
ReplyDelete