Tuesday, September 8, 2009

பொது அறிவு

1.ஆல்ககால்(Alcohol) சதவீதத்தை எந்த திரவமானி மூலம் தெரிந்து கொள்ளலாம்? பொதுத்திரவமானி.

2.பெருமூளையின் நேரடித் தொடர்பில்லாமல் உடலில் நடைபெறும் செயலை எப்படி கூறுவர்?
அனிச்சைசெயல்.


3.லண்டன் மாநகரம் பெரிய தீவிபத்துக்கு உள்ளான ஆண்டு எது?
1666.


4.ஈரான் நாட்டின் தலைநகர் எது?
டெக்ரான்.

5.மனித உடலில் ஒவ்வொரு செயலையும் நடத்துவது எது?
மூளை.

6.தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற நீர்வீழ்ச்சி?
துகேலா.

7.ஒரு ஒளி ஆண்டு என்பது எவ்வளவு தூரமாகும்?
5,88,000 கோடி மைல்கள்.

8.பாலாறு எங்கு உற்பத்தியாகிறது?
நந்திதுர்க்கத்தில்.(கர்நாடகா மாநிலம்)


9.தொழில் புரட்சி முதலில் தோன்றிய நாடு எது?
இங்கிலாந்து.

10.உடலுக்கு கவசமாக திகழ்வது எது?
தோல்.

11.நமது தேசிய சின்னத்தில் இடம் பெற்றுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ என்பதன் பொருள் யாது?
வாய்மையெ வெல்லும்.

12.கலோரி மீட்டர் எதை அளக்க உதவுகிறது?
வெப்பம்.


13.பார்சி மதத்தின் புனித நூல் எது?
ஜெண்ட் அவஸ்தா.


14.ஒலி நாடாக்களில், ஒலிப்பதிவு செய்யும் முறையை கண்டுபிடித்தவர் யார்? போல்சன்.

15.கிரீஸ் நாட்டின் தலைநகர் எது?
ஏதென்ஸ்.

16.மாவீரன் அலெக்சாண்டர் எங்கு மரணம் அடைந்தார்?
பாபிலோனியா.

17.இந்தியாவில் முதல் பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
கொல்கத்தா.


18.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை எப்போது திறக்கப்பட்டது?
1.1.2000.


19.அருணாச்சலப்பிரதேசம் எப்போது முதல் தனி மாநிலமாக செயல்பட்டு வருகிறது?
20.2.1987.


20.பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படைக் காரணம் எது?
வகுப்புவாத உணர்வு.

21.பசிபிக் கடலில் மிக ஆழமான பகுதி எது?
மரியானாட்ரென்ச்.

22.சாணக்கியரின் இயற்பெயர் என்ன?
விஷ்ணுகுப்தர்.

23.விதைகளில் காணப்படும் உணவுச் சத்து எது?
புரதம்.


24.என்.கே.வால்நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்? மூன்றறை ஆண்டுகள்.

25.பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1956.


26.கால அளவிடும் கருவியை கண்டுபிடித்தவர் யார்?
ஜான்ஹாரிசன்.

27.இந்தியாவின் பரப்பளவு என்ன?
சுமார் 33 மில்லியன் சதுர கிலோமீட்டர்.

28.விண்ணிலுள்ள மிகப் பெரிய நட்சத்திரத்தின் விட்டம் எவ்வளவு?
1.6 பில்லியன் கிலோமீட்டர்.

29.ஐ.நா.கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சாரக்கழகம்(யூனெஸ்கோ) எந்த ஆண்டு உருவானது?
1946.

30.அறிவின் வாசல்கள் என்று எதைக் கூறுவர்?
ஐம்பொறிகள்.

No comments:

Post a Comment