Friday, September 4, 2009

சிறுவர் பாடல் -சின்னக் கவிதை

சின்ன சின்ன கவிதைகளாம்
சிறுவருக்கான கவிதைகளாம்
எண்ண எண்ண இனித்திடுமாம்
எல்லொருக்கும் மகிழ்வைத் தந்திடுமாம்!

மாம்பழப் பாட்டு இனித்திடுமாம்
மனதை சுண்டி இழுத்திடுமாம்
பம்பரம் என்றோரு விழையாட்டு
பாடிடலாம் அதற்கொரு பாட்டு!

தலைவர்கள் புகழைப் பாடிடலாம்
தம்பி தங்கைகள் கேட்டிடலாம்
கலைகள் பலவும் கற்றிடலாம்
கவிதைகள் கொண்டு போற்றிடலாம்!

அறிவியல் புதுமைகள் படித்திடலாம்
அதிலே கலை பல வடித்திடலாம்
வறியவர் செல்வர் மறந்திடலாம்
வேற்றுமை என்பதை துறந்திடலாம்!

No comments:

Post a Comment